Saturday, December 16, 2017

இது என்ன இனிப்பு (பகுதி-3)

இது என்ன இனிப்பு (பகுதி-3)

இது என்ன இனிப்பு (பகுதி-3)


இனி இனிப்பை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். 


மிக எளிது. 

பூசணி விதைகளை கழுவி நன்றாக 
உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். 

விதையிலிருந்து பருப்பை எப்படி எடுப்பது 
என்று பார்ப்போம். 

ஒவ்வொன்றாக தோலை உரித்து பருப்பை எடுப்பது 
எளிதாக தோன்றவில்லை.

வாணலியில் வறுத்தால் தோல் பிளந்து பருப்பு வெளியே 
வந்துவிடும் என்ரார்களது சரிப்பட்டு வரவில்லை. விதைகள் தீஞ்சு 
போனதுதான் மிச்சம். 

முடிவாக நானே ஒரு வழி கண்டுபிடித்தேன் 

சட்னி ஜாரில் போட்டு  4 சுற்று சுத்தியதில்  பருப்பு மாவாக வெளிய வந்து விட்டது. சல்லடையில் போட்டு ஜாலித்ததும்  தோல் தனியே வந்துவிட்டது. 

அவ்வளவுதான் ஒரு கப் மாவிற்கு ஒரு கப் சக்கரை பாகு வைத்து 
கொஞ்சம் இளஞ் சூட்டில் நெய் விட்டு  கிளறி இறக்கினேன்.

அருமையான சுவையான ,சத்தான .பூசணி பர்பி. 

நீங்களும் செய்து சுவையுங்கள். 



Maayaa's All Natural Raw Pumpkin Seeds 400g

பொறுமை இல்லாதவர்களுக்கு அங்காடியில் தோல் நீக்கிய பூசணி பருப்புகள் கிடைக்கும். அதை பயன்படுத்தி குறைந்த சிலவில் சத்தான இனிப்பு செய்து சுவைத்து மகிழலாம். 

No comments:

Post a Comment