Thursday, June 15, 2017

இசையும் நானும் (192) திரைப்படம் -நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) பாடல்:முத்தான முத்தல்லவோ



இசையும் நானும் (192) திரைப்படம் -நெஞ்சில் ஓர்  ஆலயம்  (1962)


பாடல்:முத்தான முத்தல்லவோ





MY MOUTHORGAN VEDIO 




Music: M.S.ViswanathanT.K.Ramamoorthy | Lyricist:  | Singers: P.Susheela

திரைப்படம் -நெஞ்சில் ஓர்  ஆலயம் 

இயக்குனர்- ஸ்ரீதர் 





பெ: முத்தான முத்தல்லவோ முதிர்ந்து 
வந்த முத்தல்லவோ,
கட்டான மலரல்லவோ கடவுள் 
தந்த பொருளல்லவோ,(முத்தான)

முத்தான முத்தல்லவோ.....

பெ: சின்னஞ்சிறு சிறகு கொண்ட 
சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து 
வரும் சிரிப்பல்லவோ,{செம்மாதுளை)

மாவடு கண்ணல்லவோ மைனாவின் 
மொழியல்லவோ,(மாவடு)
,
பூவின் மணமல்லவோ பொன்போன்ற 
முகமல்லவோ...,(முத்தான)


முத்தான முத்தல்லவோ....

பெ: வாழாத மனிதரையும் வாழ 
வைக்கும் சேயல்லவோ,
பேசாத தெய்வத்தையும் பேச 
வைக்கும் தாயல்லவோ,(வாழாத)

தாழம்குடையல்லவோ தள்ளாடும் 
நடையல்லவோ,
மாலை பொழுதல்லவோ வண்டாடும் 
செண்டல்லவோ..(முத்தான)


முத்தான முத்தல்லவோ....

2 comments: