Monday, July 25, 2016

ஈஸ்வரனின் சரணார விந்தங்களை பற்றியவர்க்கு !

ஈஸ்வரனின் 
சரணார விந்தங்களை பற்றியவர்க்கு !




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

உருத்திரனை உள்ளத்தில் அனுதினமும்
துதித்து வந்தால் தரித்திரம் நீங்கும்

அன்பின் வடிவாய் விளங்கும் ஈசன்
அபார கருணை மிக்கவன் கூட

தட்சனின் சாபத்தால் கலைகள் குன்றி
ஒளியிழந்து நின்ற சந்திரன் அபயம்
வேண்டி சிவனின் பாதம் பற்றினான்

காலில் விழுந்த அவனை தன்
தலையில் சூடிக்கொண்டான்
கருணையே வடிவெடுத்த ஈஸ்வரன்
சந்திரா சேகரன் என்றும் தன்னை
அழைத்துக்கொண்டான்

ஆத்தி மலர்கள் சூடிய அந்த தேவனை
ஏத்தி ஏத்தி கொண்டாடுவோம்
என்கிறாள்  அவ்வை பிராட்டி

அம்பிகை தன்னை சந்திர  சகோதரி
என்று பெருமைப்படுகிறாள்
தன்  சிரசிலும் பிறை சந்திரனை
தரித்துக்கொண்டாள்

விநாயகனோ பிறை சந்திரனை தன்
சிரசில் சூடிக்கொண்டு (பாலா)பால  சந்திரன்
என்று அவன் நாமம் கொண்டான்

ஸ்ரீ ராமனோ தன்னை
ஸ்ரீ ராமசந்திரன் என்று அழைத்துக்கொண்டு
மகிழ்கின்றான் .

எல்லாம் சந்திரன் ஈஸ்வரனின்
சரணார விந்தங்களை பற்றியதனால்
பெற்ற  பேறு  என்பதை உணர்வீர்

 உலகோரே உண்டு களிக்க மட்டும்
இந்த உடலும் உள்ளமும் இல்லை
உலகை ஆளும் ஈசன் நம்முள் இருப்பதை
உணர்ந்துகொண்டு அவனை துதித்து
ஆனந்த வாழ்வு பெறவும் கூட
என்பதை உணர்வீர்




No comments:

Post a Comment