Thursday, February 18, 2016

வெற்றி பெற என்ன வழி?(1)

வெற்றி பெற என்ன வழி?(1)

வெற்றி பெற என்ன வழி ?

இந்த கேள்வி சோம்பேறிகளின் மனதைத்

தவிர அனைத்து மனிதர்களின் மனதில் எழும்

ஒரு அடிப்படை கேள்வி.

கேள்விக்கான விடைகளை பலர் புத்தகங்களிலே

தேடுகிறார்கள்.

ஒரு சிலரோ அவர்கள் வாழும் இந்த உலகத்தில்

தேடுகிறார்கள்.

புத்தகத்தில் தேடுபவர்கள் பொதுவாக  வாழ்வில்

வெற்றி பெறுவதில்லை.

ஏனென்றால் அது இறந்த கால மனிதர்களின்

வாழ்க்கை சரித குறிப்புகளே

அவைகளில் ஒரு சில நமக்கு பயன்படுபவையாக
இருக்கலாம் ஆனால் நிகழ்காலத்திற்கு அவை
பொருத்தமற்றவையாக இருக்கக்கூடும்

வாழ்க்கையில் வெற்றி பெற முதலில்
அடிப்படை தேவை ஒரு இலக்கு

இலக்கு இல்லாதவன் வாழ்க்கையில் செய்யப்படும்

அனைத்து முயற்சிகளும் வீணாகத்தான் போகும்.


அது இலக்கில்லாமல் எய்யப்படும் 
அம்பைப் போன்றது.

ஒன்று அது வீணாய்ப் போகும்.
இல்லையேல் யாரையாவது தாக்கி
கொன்று எய்தவனை தொல்லைக்கு ஆக்கி
அவன் வாழ்க்கையையே நாசம் செய்துவிடும்.

ஒருவன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெற்றவனாக
எக்காலமும் ஆகமுடியாது.

அது தெய்வங்களுக்கு  கூட சாத்தியமில்லாத ஒன்று.

அவைகளே தங்கள் தொழில்களை
ஆக்கல், காத்தல், அழித்தல்,மறைத்தல்
முடிவில் அருளுதல் என்று பிரித்து
தனித்  தனியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

உலகில் ஒரு பெரிய தீய சக்தி உருவாகும்போது அதை அழிக்க
அவைகள் பல தெய்வங்களின் சக்திகளை கூட  ஒன்று சேர்த்துக் கொள்கின்றன 

எனவே வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால்
அவரவரின் தற்போதைய அறிவிற்கும் சக்திக்கும்
தகுதிக்கும். தகுந்தவாறு ஒரு இலக்கை முதலில்
தேர்ந்தெடுக்க வேண்டும்.




No comments:

Post a Comment