Monday, January 11, 2016

இசையும் நானும் (94)

இசையும் நானும்  (94)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 94 வது காணொளி 

மவுதார்கன் இசை.
                   
(பாடல்- மூலம்- கடையநல்லூர் திரு.வெங்கடராமன் பாலசுப்ரமணியம்)

(இசைக்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது )
ஆயிரமாயிரம் கோயில் கொண்டவளே 
அழகிய நங்கை நல்லூரில் வாசம் செய்யும் நாரணியே       (ஆயிரம்)        
அநுபல்லவி;
ராஜராஜேஸ்வரியே உந்தன் திருவடி சரணம் சரணம் தாயே   (ஆயிரம்)
சரணம்:
கரும்பு வில்லால் காமனை வென்றாய் 
காவியமும் ஓவியமும் அருளும் கலைத் தாயும் ஆனாய் 
காலன் என்னை அணுகாமல் 
காத்தருளும் கருணை தெய்வமாய் நின்றாய்  (ஆயிரம்)

ஒருதரமேனும்  உன்  திருமுகம்   கண்டவர்க்கு 
வாழ்வில் இடறேது துன்பமேது  ?
ஈன்ற தாய் நீ எப்போதும் துணையிருக்க 
இவ்வுலகில் எந்நாளும் இன்பமே    (ஆயிரம்)

காணொளி இணைப்பு. 
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/KZZxl0FN1SE" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment