Thursday, December 10, 2015

சித்தமெல்லாம் எனக்கு ராம மயமே

சித்தமெல்லாம் எனக்கு ராம மயமே



சித்தமெல்லாம் எனக்கு ராம மயமே
உன்னை நினைக்க நினைக்க
உள்ளத்தில் தோன்றுவது உந்தன்
அருள்வடிவமே   ராமா  (சித்தமெல்லாம்)

அடியவர்களை காக்க நீ அயோத்திக்கு
அரசனாய் தான்  வந்தாய் ஆனால்
அவர் படும் துன்பத்தை நீக்க
அரியணையை துறந்து ஆரண்யம்
புகுந்தாய்  இராமா (சித்தமெல்லாம்)

அல்லல் தரும் அசுரக் கூட்டங்கள் வாழும்
கானகத்தில் அகிலம் வாழ அருந்தவம்
இயற்றிய தவசிகளைக் காக்கவே அவர்
குடில் சென்றாய் .வழியில் கண்ட
அனைவரிடமும் அன்பால் உறவு கொண்டு
அவர்களை ஆட்கொண்டருளினாய்  ராமா (சித்தமெல்லாம்)

அன்பால் உன்னை அழைக்கின்றேன் உன்
அருளை நாடி அனுதினமும்  துதிக்கின்றேன்
அடியவன் அன்பன் அனுமனின் பக்தியை
எனக்கும் தரவேண்டுமென்று வேண்டுகின்றேன் ராமா (சித்தமெல்லாம்)

No comments:

Post a Comment