Tuesday, November 17, 2015

சுர பூபதி! சுர பூபதி !

சுர பூபதி! சுர பூபதி !





சுர பூபதி சுர பூபதி
ஆணவ மனம் கொண்ட மனிதரையெல்லாம்
ஆட்கொண்டு தன் அடியவராக்கும் சூர  பூபதி 

உலகையெல்லாம் காக்க உமாபதி
கண்ணிலிருந்து உதித்தெழுந்த அருள் பூபதி

கந்தா கந்தா என்று பாடி ஆடி காவடி
தூக்கி வரும் அடியவரை காத்தருளும்
கணபதியின் தம்பியான கருணை பூபதி

அரோகரா அரோகரா என்று ஆடி துதிக்கும்
அன்பர்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்த பூபதி.

முருகா முருகா என்று முழங்கும்
மூவுலகினரையும் முன்னால் நின்று காத்து
முக்தியளிக்கும் முருக பூபதி.

கார்த்திகேயா கடம்பா என்று கைகூப்பி
வணங்கி தொழுபவர்களின் வாழ்வில்
வளம் சேர்க்கும் வள்ளி சமேத பூபதி

மயில் மீது அமர்ந்து ஒயிலாய்
காட்சி தந்து அன்பு மனங்களில்
நின்றாடும் மாலவன் மருகன் போற்றும் தேவநிதி 

1 comment:

  1. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete