Wednesday, October 21, 2015

கருணை உள்ளம் கொண்டவரே !

கருணை உள்ளம் கொண்டவரே 



                                                              ஓவியம் -தி.ஆர்.பட்டாபிராமன் 


கருணை உள்ளம் கொண்டவரே
மனித தெய்வம் காஞ்சி மாமுனி

தன் காலில் விழுந்தவர்களை
கை தூக்கி விடுவதே
அவர் கொண்ட பணி (கருணை )

உயர்ந்தவர்  தாழ்ந்தவர்
என்ற பேதம் அவருக்கில்லை

ஒன்றும் கூறாமலே
குறைகளை தீர்த்து வைப்பதில்
இவ்வுலகத்தில் அவருக்கு
ஈடு இணை எவரும் இல்லை (கருணை )

அரக்கன் கவர்ந்து சென்ற
வேதங்களை மீட்டுக்
கொடுத்தான் அரங்கன் அன்று

கலியின்  கொடுமையால்
மறைந்து போன வேதங்களை
போற்றி உயிர் கொடுத்தான்
இந்த காவியணிந்த
காஞ்சி மாமுனி இன்று (கருணை )

சாத்திரங்களின் பெருமையை
மீட்டுக் கொடுத்தவன்

சகல கலைகளும் மீண்டும்
தலையெடுக்க வழி கோலியவன்

அனைவரும் தத்தம்
ஸ்வ தர்மங்களை அனுசரித்து
நல்லதோர் கதியை 
அடைய வழி காட்டியவன்

தர்ம வழி நின்று தன்  ஊனினை  ஒடுக்கி
உள்ளொளி பெருக்கி இந்த
வையகம் உய்ய தவமியற்றியவன்

அந்த சந்திர சேகரனே
நம் கண்முன் சந்திரசேகர
சரஸ்வதியாக   நம் கண் முன் காட்சி
தந்து நம்மையெல்லாம்
கடைதேற்ற வந்தவன் (கருணை )

காலடியில் அவதரித்த
ஆதி சங்கரனே இவனன்றோ!

ஷண்மத  ஸ்தாபனம் செய்தவனும்
இவனன்றி  வேறு யார்?

அன்று விண்ணும்மண்ணையும்
அளந்த பிரானின்   அம்சமாக
இப்புவியில் தன்  பாதம் நோக நடந்து
அனைத்து ஜீவன்களின்
தாபம் தீர்த்த வள்ளல்
இவனன்றி  வேறு யார் உளர்?(கருணை )


No comments:

Post a Comment