Saturday, June 14, 2014

இதற்காகவா பிறந்தோம்?

இதற்காகவா பிறந்தோம்?


காலையில் எழுவதும்
காபியைக் குடிப்பதும்
கைபேசியிலோ காட்சி பெட்டியிலோ
காணொளியில்  கண்டதைத் காண்பதும்
வறுத்த ,பொறித்த உணவுகளை கொறிப்பதும்
வேலைக்காக வெளியில்  ஓடுவதும் மீண்டும்
இரவும் அதே கதைதான்

இது அனைவரும் தினமும் தவறாமல்
அரங்கேற்றும் நாடகம் .ஏதோ  ஒரு சில மாற்றங்கள்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

விலங்குகளும், பறவைகளும் மற்ற
உயிரினங்களும் இதையேதான்
செய்கின்றன .அதைத் தவிர வேறு
சிந்தனைகள் எதுவும் அவைகளுக்கில்லை

அவைகளிடம், போட்டி, பொறாமை,
வஞ்சம் தீர்ப்பது, கொலை செய்வது
பழி தீர்ப்பது, சுயநலம் போன்ற தீய
குணங்கள் எதுவும் கிடையாது.



ஆனால் நாமோ மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்
நம்மை எச்சரிக்க வந்த மரணத்தை கண்டு பயப்படுகிறோம்.
அதிலிருந்து இருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை.நம்மை காப்பாற்றிக்கொள்ள பல லட்சங்களை ஒழிக்கிறோம். அப்படி
பிழைத்தாலும் மீண்டும்  பயனற்ற குறிக்கோளற்ற வாழ்க்கையைத்தான்
வாழ்கிறோம் என்பது நம்முடைய அறியாமையின் உச்சகட்டம்.

நம்மை படைத்து காத்து வந்த இறைவனிடம் முழுமையாக
சரணாகதி செய்வது கிடையாது. அவன் அருளைப் பெற ஆழ்வார்கள், நாயன்மார்கள், யோகிகளைப் போல் முழு முயற்சிகளை செய்வது கிடையாது.

ஆனால் மற்ற உயிரினங்கள்
அன்போடு வாழ்கின்றன ஆனந்தமாய்
இருக்கின்றன. மரணத்தை இயல்பாய்
ஏற்றுக்கொண்டு இனிதே இவ்வுலகை விட்டு
நீங்குகின்றன.

ஆனால் மனிதர்களாகிய நாமோ உயிர்
வளரத் தேவையான அடிப்படைப் பண்புகளான
ஈவு, இரக்கம் ,அன்பு ,சமதர்ம நோக்கு,
ஆகிய முக்கிய பண்புகளை இழந்துவிட்டோம்.

மனிதர்கள் உடல் சுத்தத்திற்கு  அளிக்கும்
முக்கியத்தை உடலை பின்னின்று இயக்கும்
மனதிற்கு அளிப்பதில்லை .மனதில் காமம், குரோதம்
மோகம், லோபம், மதம், மாச்சர்யம்  என்னும் அயோக்கியர்களுக்கு
இடம் கொடுத்து விட்டோம். அவர்கள் நம்மை அவர்கள் விருப்பப்படி  ஆட்டிப் படைக்கிறார்கள் அவர்களிடமிருந்து விடுபடும் வழி தெரியாமல்
அல்லும் பகலும் துன்பப்படுகிறோம்.

புலன்களின் பின்னே சென்று கண  நேரத்தில் தோன்றி மறையும் அற்ப சுகத்தையே மனம் நாடுகிறது. அப்படி அலையும் புலன்களை இறைவனை நோக்கி திருப்ப வேண்டும். அப்போதுதான் நமக்கு இந்த பிறவியினால் விளையும் துன்பங்களிலிருந்து   விடுதலை கிடைக்கும் . இல்லாவிடில் தறுதலைகளாக இறுதி வரை இருப்போம்.

நாம் செய்யும் பூஜை, பக்தி எல்லாம் கொசுக்களை
கொல்லாமல்  வெறுமனே விரட்டும் கொசு விரட்டிகள் போல்தான்
செயல்படுகிறது.

இதனால் நாம் தொடர்ந்து துன்பத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றோம்.

பல பிறவிகளாக நம்முடைய மனதில் மண்டிக் கிடக்கும் இந்த
கடினமான கறைகளை   அவ்வளவு . எளிதாக அகற்ற முடியாது.




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

அதற்கு ஒரே வழி ராம நாமம் சொல்வதுதான்.

நம்பிக்கையோடு. ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தால்தான் பல பிறவிகளாக நாம் சேர்த்துக்கொண்ட   பாவ புண்ணியங்களை அழித்து பரமனுடன் நாம் ஒன்றமுடியும்.


5 comments:

  1. முழு முயற்சிகளை கண்டிப்பாக செய்வதில்லை என்பது உண்மை தான் ஐயா...

    ஓவியம் அற்புதம்...

    ReplyDelete
  2. மனக்கட்டுப்பாடு கைவரப்பெற, ராமனைத் துதிப்போம்.

    ReplyDelete
  3. எல்லாம் சரி சாமி கும்பிடுவதர்க்கு முன் சாவதற்குள் ஒருமுறை திருமந்திரம் படித்துவிட்டு சாகுங்கள். புரியாத பாடல்களை விட்டுவிடுங்கள் .உங்களுக்கான பாடல் உங்களுக்கு புரியும்

    ReplyDelete
  4. தேடல் நிற்கும்வரை தேடித்தான் ஆகவேண்டும்
    ஓதுவதால் மட்டும் பயனில்லை
    ஒன்றினால் மட்டுமே உண்மை புலப்படும்..

    ReplyDelete