Friday, May 2, 2014

அவன் கொடுத்து வைத்தவன்

அவன் கொடுத்து வைத்தவன் 


இந்த உலகில் பலர் நன்றாக இருப்பதை பார்த்தால்
அவன் கொடுத்து வைத்தவன்
அதான் சுக போகங்களோடு வாழ்க்கை நடத்துகிறான்
என்று பொருமித் தீர்ப்பார்கள்.

எதைக் கொடுப்பது.?
அப்படி அவர்கள் யாரிடம் எதை கொடுத்தார்கள்.
அது எப்படி அவர்களுக்கு நன்மையைத் தருகிறது என்று யாரும்
சிந்தனை செய்வதில்லை.

மாறாக நிந்தனை செய்கிறார்கள்.
மாறாக அவர்கள் மீது பொறாமை கொள்கிறார்கள்
அது அவர்களை மேலும் கொடியவர்களாக்கி விடுகிறது.
மன நிம்மதியைக் குலைத்து  விடுகிறது.
நோய் வாய்ப்பட வைத்து விடுகிறது.
.
புத்திசாலித்தனம்  இருந்தும்
வாழ்க்கையில் தோற்றவர்கள் ஏராளம்.

அதுபோல்மந்த புத்தி உடையவர்கள்
வெற்றி பெற்றவர்கள். உண்டு.

படிப்பறிவில்லாதவன் மந்திரியாகிறான்.
அவன் கீழ் மெத்த படித்தவர்கள் கை கட்டி சேவகம் புரிகிறார்கள்

சிலர் சொல்லுவார்கள்
ஒரு நிலத்தை வாங்கி போட்டால் போதும்
அதன் விலை சில ஆண்டுகளில் பல லட்சம் அல்லது சில கோடிகள்
மதிப்பு கூடிவிடும்.

இதுபோல்தான் நான் இந்த இடத்தில
சில ஆயிரம் ரூபாய்க்கு இத்தனை பிளாட்டுகள் வாங்கினேன் .இன்று ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குமேல் விலை போகிறது.

இதில் துர திருஷ்டம்  என்னவெனில் இன்று ஒரு பிளாட் கூட என்னிடம்  இல்லை. இந்த இடத்தில ஒரு முன்னேற்றமும் வராது என்று எல்லாவற்றையும் சிறிது காலத்தில் விற்றுவிட்டேன். அதனால் கஷ்டப்படுகிறேன் என்பார்.

அவைகள் எல்லாம் என்னிடம் இன்று இருந்தால்
நான் கோடீஸ்வரனாக்கும் என்று புலம்பிக்கொண்டிருப்பார்.

அந்த காலத்தில் தங்கம் சவரன் வெறும் 40 ரூபாய்க்கு விற்றது
அப்போது என்னிடம் காசு இல்லை. இருந்து கொஞ்ச கொஞ்சமாக  காசு சேர்த்து நான் வாங்கப் போகும் நேரம் தங்கம் பல  மடங்கு .விலை எகிறிவிட்டது நான் சேர்த்த காசுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

சிலர் பெண்தான். அவளால்தான் குடும்பம் முன்னேறும் .
சில குடும்பங்களில் அவளால்தான் அழியும். என்பார்கள்.

இந்த உலகில் செல்வம் யாரிடமும் நிலையாகத தங்காது.
அதை யாரும் எப்போதும் தன்னுடன் நிரந்தரமாக இருக்கும்
என்று உரிமை கோர முடியாது.

எனவே அது நம்முடன் இருக்கும்போதே
அதில் கொஞ்சம்  தர்மம் செய்யவேண்டும்.
பிறருக்கு உதவவேண்டும். அன்ன தானம் செய்யவேண்டும்



அப்படி செய்துவந்தால் அதனால் புண்ணியம் சேரும்.
பிறருக்கு நாம் எதைக்கொடுக்கிறோமா
அதுதான்   நாம் நமக்கு கொடுத்துக்கொள்வது.

அதை விடுத்து எல்லாம் தனக்குத்தான்
என்றால் எல்லாம் இருந்தும்
வறுமையில்தான் உழலவேண்டும். 

4 comments:

  1. நல்ல மனத்தைப் போல செல்வம் வேறு உண்டோ... இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து வேறு எதற்கும் ஆசைப்படாத குணம் இருப்பவர்களே உண்மையான செல்வந்தர்கள்.

    ReplyDelete
  2. நல்ல குணம் இருப்பவர்களே
    உண்மையான செல்வந்தர்கள்.

    ReplyDelete
  3. தமிழ் அகராதியில் இப்போது இருப்பதாக (இல்லாத ?) ஒரு சொல்லை வைத்து ஒரு பதிவு எழுதி கொண்டிருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  4. எழுதுங்கள்.அனைவரும் அறிந்துகொள்ளட்டும்

    ReplyDelete