Monday, April 7, 2014

ராம நாமம் சொல்லுவோம்!

ராம நாமம் சொல்லுவோம்!




நம்முடைய மனம் என்பது
காமம்,குரோதம் ,
பேராசை, , கருமித்தனம்,
போன்ற விஷப்  பூச்சிகள் மற்றும்
ஒன்றை ஒன்று அடித்து தின்று உலவும்
கொடிய  விலங்குகள்   திரியும் காடு.
.
இந்தக் காட்டில்தான் பொறாமை
என்னும் அழுக்காறும் ஓடுகிறது.

அழுக்காற்றில் கிருமிகளும்,
புழுக்களும்தான் நெளியும்.

அதில்தான் காமமும் குரோதமும்,
அகந்தையும் நிறைந்த இராவனன் 
அந்நாளில் வாசித்தான்.

அதே காட்டில்தான் தன் தம்பியை
காரணமின்றி நாட்டை விட்டு துரத்தி
அவனைக் கொல்லத்  துணிந்த வாலியும்
வசித்தான் .

அதே குலத்தில்தான் ராம பக்தனான
அனுமனும் அவதரித்தான்.

அதே உலகில்தான்  தன் அண்ணனுக்கு
அவன் செய்த தவறை சுட்டிக் காட்டிய
விபீஷணனும் வசித்தான் .

துஷ்டர்களை ராமபிரான் அழித்தான்.
நம்பியவர்களின் துயர்களைத் தீர்த்தான்.

நாமும் நம் மனதில் உள்ள துஷ்டர்களை
துரத்த வேண்டுமென்றால்
நம் மனதை ராம நாமத்தால் நிரப்பவேண்டும்.

அவ்வாறு நிரப்பினால் உள்ளத்தில்
ஆனந்தமும் , அமைதியும்.
நம் வாழ்வில் என்றென்றும்
தாண்டவமாடும்.

ராம நாமம் சொல்லுவோம்
அரக்கர்களைப் போல் நம் மனதை
ஆக்கிரமித்துள்ள தீய குணங்களை
துரத்துவோம்.
.

4 comments:

  1. படத்தை விட்டு கண்கள் அகல மறுக்கிறது ஐயா...

    அற்புதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இவன் உள்ளத்தில் குடி கொண்டவனின்

    உயிருள்ள வடிவம்தான் இந்த ஓவியம்.

    உங்கள் மனதிலும் பதித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. அழகிய படம். தீய எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களை ராமநாம பஜனையில் மனதில் இருத்துவோம். (இப்போதுதான் நீர்மோரும், பானகமும் குடித்தேன்!)

    ReplyDelete
    Replies
    1. பானகம் நம் உடலுக்கு
      ராம நாமமோ நம் ஆன்மாவிற்கு !

      Delete