Sunday, February 9, 2014

ஆசார அனுஷ்டானங்கள் குறைந்ததின் காரணம் என்ன ?(2)

ஆசார அனுஷ்டானங்கள் 

குறைந்ததின் காரணம் என்ன ?(2)

ஆசார  அனுஷ்டானங்கள் 
குறைந்ததின் காரணம் என்ன ?(2)

ஆசாரம் என்பது சுத்தத்தைக் குறிக்கிறது 
அனுஷ்டானம் என்பது ஒழுக்கம் 
சார்ந்த வாழ்க்கை  முறையைக் குறிக்கிறது. 

இரண்டையும் கடைபிடிப்பவனின் 
உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். 

அதனால் அவன் நோய்வாய்ப்படும் 
வாய்ப்புக்கள் குறைவு.

அவன் சுறுசுறுப்பாக இயங்குவான். 
தெளிவாக சிந்திப்பான். 
அவன் மனமும், உடலும் 
அவன் கட்டுப்பாட்டில் இருக்கும். 

உலக வாழ்க்கையை மகிழ்ச்சியாக ,
வெற்றிகரமாக வாழ்வான்.

ஆன்மீகத்தில் ஈடுபட உடல் உறுதியும்,
 உள்ள தெளிவும் தேவை. அது அவனுக்கு 
அபரிமிதமாகக் கிடைக்கும். அவனால் 
சாதனைகளைச் செய்ய முடியும். 
எனவே இந்த ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் 
இரண்டும் அனைவருக்கும் தேவை. 

அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக 
இருந்தாலும் அல்லாது எந்த மதத்தை
சாராதவர்கலாயினும் சரி. 

ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வகையில் 
இந்த இரண்டும் அனுசரிக்கப்படுகின்றன. 
ஆனால் நோக்கம்  ஒன்றே. 

நமது முன்னோர்கள் அழகாக ,
நல்ல தெளிவான சிந்தித்து நல்லதொரு  
பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். 

அதை ஒழுங்காக நாம் நடைமுறைபடுத்தினால்
தனியாக உடற்பயிற்சியோ, பிராணாயாமப் பயிற்சியோ 
மேற்கொள்ள வேண்டியதில்லை. 

ஆனால் இன்று அதை குறிப்பாக இந்து மதத்தினர்
பெரும் பகுதியினர் கடைபிடிப்பதில்லை. 

எல்லாம் தலைகீழாகிவிட்டது. 
அதனால் உடல்நலமும் சரியில்லை.
மன நலமும் சரியில்லை.பிறந்தது முதல்
இறக்கும் வரை நோயிலே வாடுகின்றனர். 

ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்
ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குத்தான் என்று 
தவறாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. 

பெயர் வடமொழியில் இருந்தமையினால் 
அதன் உண்மை அனைவருக்கும் போய்  
சேரவில்லை.என்பதே உண்மை. 

இன்று அனைத்து நோய்களுக்கும் 
மூலகாரணம் சுத்தமின்மைதான். 
என்பது அனைவருக்கும் தெரியும்.

தெரிந்தாலும் அதை கடைபிடிப்பதில்லை. 
கடைபிடித்தால் அத்தனை 
மருத்துவ மனைகளையும் மூட நேரிடும். 
ஆனால் அதற்க்கு யாரும் தயாரில்லை. 


இன்று யாரும் முறையாக 
மூச்சு விடுவது கிடையாது.
 உடற்பயிற்சி செய்வது கிடையாது. 
உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் 
வேலை கொடுப்பது கிடையாது.


அதிகமாக வேலை கொடுப்பது.  
வாய்,பல், நாக்கு, காது , கண், மற்றும் வயிறு 
இவைகள் மூலமாக அனைத்து  
உறுப்புகளும் விரைவில் 
செயலிழந்து போய் விடுகின்றன.
 
உடல் முழுவதும் நச்சு பொருட்கள்தான் 
வெளியேறாமல் தங்கி மனிதர்களை 
நிரந்தர நோயாளிகளாக்குகின்றன 

மனம் முழுவதும் தீய எண்ணங்களால் 
நிறைந்து குழம்பிப் போய் கிடக்கின்றன 

நோய் நீங்க வழியை அறிந்தும்  
அதை செயல்படாமல் வைத்திருப்பது அறியாமை. 
மற்றும் மூடத்தனம் 

போனது போகட்டும் இனியாகிலும் 
திருந்தினால் நல்லது. 

இனியாவது ஆசார அனுஷ்டானங்களை 
சிறிது சிறிதாக கடைபிடிக்க தொடங்கினால் 
இவ்வுலகில் இருக்கும் காலம் வரை நன்றாக வாழ முடியும். 

இன்னும் வரும் 




3 comments:

  1. // உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் வேலை கொடுப்பது கிடையாது... //

    உழைக்காமல் சம்பாதிப்பதால் - சமீபத்திய ஆய்வு ஒன்றும் இதையே சொல்கிறது ஐயா...

    விளக்கங்களை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள
    அனைவரும் பின்பற்றப்பட வேண்டிய
    பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. ரொம்பவும் அருமை

    ReplyDelete