Friday, February 7, 2014

ஆசார அனுஷ்டானங்கள் குறைந்ததின் காரணம் என்ன ?(1)

ஆசார  அனுஷ்டானங்கள் 
குறைந்ததின் காரணம் என்ன ?(1)

மடாதிபதிகளும்,



உபன்யாசகர்களும் 
மீண்டும் மீண்டும் தங்களை நாடி
வருபவர்களை வலியுறுத்துவது
ஆசார அனுஷ்டானங்களை
விடாமல் கடைப் பிடியுங்கள்.

உணவு விஷயத்தில் சுத்தமான
உணவுகளை பகவானுக்கு நிவேதனம்
செய்துவிட்டு உண்ணுங்கள்.

கண்ட கண்ட இடங்களில் கிடைக்கும்
அசுத்தமான் உணவுகளை உண்ணாதீர்கள்
என்று வலியுறுத்துகிறார்கள்.

இந்த சின்ன விஷயத்தில்
 யாரும் அக்கறை காட்டுவதில்லை

அதனால் தீர்க்க முடியாத வியாதிகளால்
பீடிக்கப்பட்டு லட்சக்கணக்கில்
வாழ்நாள் முழுவதும்
நோயாளிகளாய்த் திரிகிறோம்.

தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போதும்,
மற்ற எந்த சடங்குகளைச் செய்யும் போதும்
பல தடவை பிராணாயாமம் செய்வதால்
அபரிமிதமான் பிராண சக்தி நமக்கு
இயல்பாகவே கிடைக்கிறது.

இதற்காக தனியாக யோகா பயிற்சி என்று
ஆயிரக்கணக்கில் செலவு செய்து எங்கும்
சென்று கற்க  வேண்டியதில்லை.

மன ஒருமைப்பாடு  எந்த விதமான
முயற்சியின்றி கிடைக்கிறது.
அதனால் மனம் ,புத்தி
தெளிவாக இயங்குகிறது.

எல்லாவற்றையும் ஈஸ்வரன்தான்
 செய்கின்றான் என்ற நம்பிக்கை உள்ளத்தில்
ஒளி விடுவதால்  தனியாக சரணாகதி 
செய்யும் தேவையே இல்லை.

மனதில்  அனாவசியமான குழப்பங்கள்
இல்லை. எல்லாவற்றையும்
அப்படியே ஈஸ்வர  பிரசாதமாக
ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை
எளிதாக அமைகிறது.

மனதை திறமுடையதாகச் செய்வது
எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்

அதை உச்சரிக்கும் போது  வெளியிடப்படும்
ஒலிகள் அந்த ஜீவனையும் சுற்றுப்புறத்திலும்
நல்ல அதிர்வலைகளை வெளியிடுகின்றன
அது அனைவர்க்கும் நன்மை விளைவிக்கிறது.


வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும்.
தானே வந்தமைகிறது.

இந்த உண்மையை அனைவரும்
 புரிந்துகொண்டால் போதும்
ஆசாரங்களும் அனுஷ்டானங்களும்
வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்துவிடும்.

சொல்வது யாவர்க்கும் எளியவாம்
அரிது சொல்லிய வண்ணம் செயல்
என்பதுதிருவள்ளுவர் வாக்கு

எதையுமே சிறிய வயதில் கற்ப்பிக்க வேண்டும்
அப்போது மனதில் எளிதாக, ஆழமாக பதிந்துவிடும்
வயது வயதாக அறிவு முதிர்ச்சி பெறும் போது
அவைகளின் நோக்கமும் பொருளும் புரியும்.

வயதான் பின் எதுவும் அவ்வளவு எளிதில் மனதில்
பதியாது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக
வளர்ககப்பட்டதீய பழக்கங்களை விடும் வரை
மனம் ஒருமைப்படாது.

அதற்கு தொடர்ந்து
முயற்சி செய்து பயிற்சி பெற
தெரிந்தவர்கள் உதவ வேண்டும். 

அதற்கான வழி முறைகள் வகுக்கப்பட்டால்
அறிவுரை சொல்பவர்களின்  நோக்கமும்
நிறைவேறும். நம்முடைய
தர்மமும் காப்பாற்றப்படும்.

1 comment:

  1. // தனியாக சரணாகதி செய்யும் தேவையே இல்லை.... // இது ஒன்றே போதும்... விரைவில் ஒரு பதிவு எழுத கரு கிடைத்து விட்டது... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete