Wednesday, January 29, 2014

தெய்வங்களும் பெண்களும்

தெய்வங்களும் பெண்களும் 

நம்முடைய மத சம்பிரதாயங்களில்




கடவுளுக்கு மனைவிகளும்,




குழந்தைகளும்
சகோதரி, மாமன் , மருகன் போன்ற உறவுகள்
உண்டு. என்பதை அனைவரும் அறிவோம்.



நாமெல்லாம் பெண்களால்
இன்பமும் துன்பமும் அடைவதைப்போல்
நம்மால் வணங்கப்படும் தெய்வங்களும்
அனுபவிப்பதைப்  பார்த்து
ஆறுதல் அடைபவர்களும் உண்டு.

அதே நேரத்தில் சில உண்மைகளை நமக்கு
உணர்த்துவதற்காகவும், நமக்கு அருள் செய்வதற்காகவும்
தெய்வங்கள் அவ்வாறு நடந்துகொள்கின்றன  என்று அதற்க்குபகவானின் லீலைகள் என்று ரசித்து மகிழ்வதும்  உண்டு.



எது எப்படி இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளாக
இந்த லீலைகளை பக்தர்கள் மகிழ்ச்சியோடு
அனுபவித்து வருகிறார்கள். அந்த லீலைகளுக்கு
அவரவர்க்கு தோன்றிய வகையில் விளக்கங்களை
ஆன்மீகத்தில்புகுத்தி ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தை ஆட்டிப் படைப்பது மூன்று குணங்களே
அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று என்று பொதுவாக
ஓரளவிற்கு ஆன்மீகத்தில் தொடர்புஉள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும்.

தெய்வங்களும் இதற்க்கு விதி விலக்கல்ல .
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இந்த மூவருமே இந்த மூன்று குணத்தின் வடிவங்கலாகதான் புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தெய்வங்களாகிய அவர்களையே
அந்த குணங்கள் ஆட்டி படைக்கும் போது உணர்ச்சிகளுக்கு
அடிமையாகிய நம்மை அந்தமூன்று குணங்கள்
ஆட்டிப் படைப்பதில் ஒன்றும் வியப்பில்லை.

பெண்களால் மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல .
அவள் தாயாகி இருந்துகொண்டு பாசம் காட்டி
 படுத்தும் பாடு  ஒரு பக்கம்

பருவ வயதில் தன் கவர்ச்சியைக் காட்டி
கண்களால்  காம வலையை வீசி காதலில்
டிக்க வைத்து அவனை பித்தனாக்கி
சில நேரங்களில் மிருகமாக்கிவிடுகிறது.



இன்னும் வரும்

3 comments:

  1. இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்... விளக்கங்களை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. அப்படியா !
    என்ன எதிர்பார்த்தீர்கள் DD

    ReplyDelete
  3. 'கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்... அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்று எழுதப் பட்டிருந்த வரிகளைப் பாட டி எம் எஸ் மறுத்து விட்டதால் 'சாக வேண்டும்' வரிகள் 'வாட வேண்டும்' என்று மாற்றப் பட்டதாகப் படித்திருக்கிறேன்!

    //அவரவர்க்கு தோன்றிய வகையில் விளக்கங்களை//

    ஆமாம்...ஆமாம்!

    உங்கள் விளக்கங்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete