Sunday, January 5, 2014

ஆண்டாளின் புகழ் பாடுவோம்

ஆண்டாளின் புகழ் பாடுவோம் 



மண்மீது மதலையாய் வந்துதித்து 
நாட்டை ஆளும் மன்னனிடம்
அண்ட சராசரங்களை ஆளும் மகேசன் மாதவன்
 புகழ்பாடி பொற்கிழி பெற்ற
 பெரியாழ்வாரின் புத்திரியாய் 
வந்துதித்தவள் கோதை

விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து
 மாதவனை அறியாது
 அறியாமையில் மூழ்கி 
 மீண்டும் மண்ணுக்கே போகும்
 மானிடர்களை வாழ்விக்கவந்த 
கருணை தெய்வம் கோதை 

யசோதை செய்த மாதவத்தால்
 யாதவனாக இப்புவியில் வந்துதித்து 
பிறவிப் பிணிக்கு மருந்து தந்த 
 தன்வந்திரி பகவான் மாதவனின் பெருமைதனை 
மறந்துபோன  நம் போன்ற உயிர்க்கெல்லாம் 
மீண்டும் காட்டி தந்தவள் கோதை

வேதம் கற்றோர் வேதத்தின்
 உண்மைப் பொருளறியாது 
வாதம் செய்து கொண்டிருந்தனர் 

அறிந்த சிலரும் அதை சக மானிடர்கள் 
கடைத்தேற உபதேசிக்க மனமில்லாது 
இருந்த நிலையில்
 வேதத்தின் விழுப்பொருளை
 பாமரனும் அறியும்வண்ணம் 
அழகு தமிழில் பாடித் தந்தாள் 
ஆண்டாள் என்னும் கோதை 

மார்கழி மாதந்தன்னை 
மாதவனைவணங்கி 
மகிழ்ந்து மாளாப் பிறவியை அறுக்கும் மாதம்
 என்று அனைவருக்கும் உணர்த்தி
 மனித குலத்திற்கு நல்லதோர் 
வழியைக் காட்டியவள்
 மண் மடந்தையாம் கோதை.


அமரரும் அறியா ஹரியின் பாதத்தை
அறியும் வழியைக் அனைவருக்கும் காட்டித் தந்தவள்
கோதை



அடங்கா மனதை அரங்கனின்
திருவடிகளில் அடங்கும்
திறத்தை கற்பித்தவள். கோதை

மண் மீது உதித்தவள்
. மண்ணை உண்ட மாவாயனின்
 புகழைப் பாடியவள் கோதை



திருமாலையே நெஞ்சில் நினைந்து
பூமாலை சாற்றிக்கொண்டு
அரங்கனின் மீது பாமாலை சாற்றி அருளிய
ஆண்டாளின் புகழ் பாடுவோம்
பிறரை இகழும் சொற்களை விடுத்து.

இவ்வுலக மோகம் கொண்டு
பதராய் அங்குமிங்கும் வீணே திரிந்து
இவ்வுலகில் வாழ்வை வீணாக்காமல்
 பக்தராய்  பரமனின் புகழை பாடிக்கொண்டு
பண்போடும் அன்போடும் ஆனந்தமாய் வாழ்வோம்.



அவனையே நினைந்து உருகி
அவனையே  மணாளனாக வரித்த
 மாண்புடையவளை என்றென்றும் மனதில் சிந்திப்போம்

அவள் காட்டிய வழியில் சென்று
அரங்கனின் திருவடி நிழலில்
என்றும் அழியா பதம் பெறுவோம்.



ஆண்டாள் திருவடிகளே சரணம்

Pic-courtesy-google images  

4 comments:

  1. சிறப்பான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகிய ஆண்டாளுக்கு ஆண்டாள் தெருவில் வசிக்கும் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள். [அண்ணாவுக்கும் சேர்த்தே தான். ;)]

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம் பண்ணினால் நல்ல சம்ஸ்காரங்கள் உண்டாகும்

      Delete