Wednesday, July 31, 2013

விருப்பும் வெறுப்பும்

விருப்பும் வெறுப்பும் 

விருப்பும் வெறுப்பும் மனிதர்களுக்கு
தேவைதானா என்று ஒரு கேள்வி உண்டு

விருப்பும் வெறுப்பும் அற்றவன்தான்
இறைவனை அடையமுடியும் என்பது ஒரு கட்சி

ஏனென்றால் இறைவன் விருப்பும் வெறுப்பும் அற்ற
நடுநிலையான பரம்பொருள் அவன்

அதைதான் திருவள்ளுவரும் வேண்டுதல்
வேண்டாமை இலான் அடி செர்ந்தார்ர்க்கு
யாண்டும் இடும்பை இல என்கிறார்.

நமக்கு நாம் துன்பமே இல்லாத வாழ்வை
 நடத்த வேண்டுமென்றால்
இந்த இரண்டையும் கடக்க வேண்டும்

இந்த உலகில் அது சாத்தியமா?
என்பதுதான் கேள்வி

ஆனால் சாத்தியம் என்று ஞானிகள்
 நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்

ஆனால் நம்மை போன்ற
சாதாரண மனிதர்களோ
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ,
அதன் உண்மைத் தன்மையினை
உணருவது கிடையாது.

அதனால்தான் அந்த இரண்டு குணங்களும்
இந்த உலகை ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கின்றன
தீராத பிரச்னைகளையும் போரையும்
துன்பங்களையும்உண்டாக்கி
மனிகுலத்தை அமைதியில்லாத
இனமாக்கிவிட்டன

சாதாரணம் மனிதர்கள் தன்னை
சேர்ந்தவர்களை மட்டும் விரும்புவதும்
என்பதை பாசம் என்றும் மற்றவர்களை
வெறுப்பது வெறுப்பு என்றும் கொள்கிறோம்.

ஆனால் அனைவரையும் விரும்புவது
அன்பு என்றும் சொல்கிறோம்.

பாசம் நம்மை பந்தத்தில் சிக்க வைத்து
துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

பரந்த அன்பு, விரிந்த வானத்தில்
சிறகடித்து பறக்கும் பறவைகள் போல்
இன்பத்தில் ஆழ்த்தும்
அமைதியை தரும்.

உணவில் சேர்த்துக்கொள்ளபடும்  
அளவான  உப்பு  உணவிற்கு
சுவை  கூட்டுவதுபோல்
விருப்பும்  வெறுப்பும்
பிறருக்கு  தீங்கிழைக்கும்
அளவை  தாண்டாது
பார்த்துக்கொண்டால்
வாழ்வு  இன்பம்  தரும்
.
அளவுக்கு  மிஞ்சினால்
அமிர்தமும்  நஞ்சாவதைபோல்  
விருப்பும்  வெறுப்பும்  உரிய  முறையில்
முறைப்படுத்தி  வாழக் கற்றுக்கொண்டால்
நன்மையே  மிகும் . 

என்றும் மாறாத இன்பம் தருவாய் முருகா !

என்றும் மாறாத 
இன்பம் தருவாய் முருகா !





சிப்பிக்குள்  முத்தை வைத்தாய் முருகா
என் சிந்தைக்குள் மட்டும்  உன்னை
வைக்க மறுப்பதேனோ?

என் கண்கள் உன் திருவடிவைக் கண்டாலும்
என்னுள்ளே இருக்கும் கள்ளப் புலன்கள்
என்  மனதைஉன்னிடமிருந்து
திருடிச் செல்வதை கண்டும்
காணாமலிருப்பதேனோ சொல் முருகா?

என் நாவு உன் நாமத்தை உச்சரிக்கையில்
அதை செய்ய விடாது என்னை நச்சரித்து
உலக மாயையில் வீழ்த்தும் எண்ணங்களை
விரட்டியடிக்காது வேடிக்கை பார்க்கும்
உன் செயல் சரிதானோ முருகா?

இன்பமும் துன்பமும் மீண்டும் மீண்டும்
என்னை தாக்கி நிலை குலைய
வைக்கும்போது நின் நாமம்தான்
கதி என்று நம்பி வந்த என்னை
காப்பாற்றாது புன்முறுவல் பூத்த வண்ணம்
நீ நின்றுகொண்டிருந்தால் நான்
வேறெங்கு செல்வேன் முருகா?

பணிவினால் அனுதினமும் உன்
பாதம் பணிந்து பக்தியினால் மனமுருகி
உன்னை வணங்கி  நின்றாலும்
பதிலேதும் சொல்லாமல் பாராமுகமாய்
நீ நின்றுகொண்டிருந்தால் யாரிடம்
சென்று  நான் முறையிடுவேன்
சொல்   முருகா?

அழகன் என்று பெயர்கொண்டாய்
அசுரர்களை அழித்து அமரர்களை காத்தாய்

குமரன் என்ற நாமம் கொண்டாய்
குன்றுதோறும் கோயில் கொண்டாய்

என்னுள்ளத்திலும் நிலையாய்
இடம் கொள்வாய்

என்றும் மாறாத
இன்பம் தருவாய் முருகா !

மனமே நீ உன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்

மனமே நீ
உன் ஆட்டத்தை 
நிறுத்திக்கொள் 











































சிலந்தி வலைப்  பின்னலடா
சிக்கல் நிறைந்த வாழ்க்கையடா

சில நாள் இன்பமடா
பலநாள் துன்பமடா
வேதனை தீருமோ
விடிவுகாலம் வருமோ
என்று மனம் கலங்குபவர்
பல கோடி

வினைகளை வேரோடு களைய
வேலவன் இருக்க  மனமே
வீணான கவலை உனக்காமோ ?

சிக்கலை தீர்த்துவைக்க
சிக்கல் சிங்காரவேலந்தான்
நின்றிருக்க சிந்தனையில்
குழப்பம் எதற்கு மனமே ?

அமரர் இடர் தீர்த்தவன்
நம்மைப்போல் மானிடர் இடர்
தீர்க்க வாராமல் போவானோ ?

அம்பிகையின் புதல்வனவன்
அல்லல்படும் உலக மக்களை
காக்க அவனிக்கு வந்தவனவன்

அடியாருக்கு அருள் செய்ய
ஆங்காங்கே கோயில் கொண்டு
நிற்கின்றான் அழகே வடிவாக

ஆடும் மயில் தன்  ஆட்டத்தை
நிறுத்திவிட்டது  மயில்சாமியின்
ஆடலைக் கண்டு

அதுபோல
மனமே நீயும் உன் ஆட்டத்தை
இன்றோடு நிறுத்திக்கொள்

முருகனின்   வடிவத்தை
உன் நெஞ்சில் நிறுத்திக்கொள்.

நிலையான இன்பத்தை
பெற்றுக்கொள்  

Tuesday, July 30, 2013

இன்று ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள்

இன்று ஆடி கிருத்திகை 
முருகப்பெருமானுக்கு உகந்த நாள் 






















வாழ்வில் ஆடாத ஆட்டமெலாம் ஆடி
நாடியெல்லாம் தளர்ந்து போகுமுன்னே
நாடுவீர் மால்மருகன்
முருகப்பெருமானின்
திருவடிகளை

முருகனுக்குகந்த இந்நாளில் நம்
உள்ளத்தில் புகுந்துகொண்டு
நம்மையெல்லாம்
ஆட்டிவைக்கும்
காம குரோத பேய்களை
அவன் திருநாமத்தை
உட்கொண்டு
விரட்டியடிப்போமாக

துன்பமும் துயரங்களும் நம்மை
பற்றாதிருக்க முருகனின்
திருவடிகளை பற்றிக்கொண்டு
அனைவரும் உய்வோமாக

அற்ப பலன்களுக்காக
அழியும் மனிதர்களின் புகழ்
அனுதினமும் பாடி அலைந்து
திரிவதை விட்டுவிட்டு
அகிலாண்டகோடி ப்ரம்மாண்டநாயகனை
அரோஹரா !அரோஹரா!என்று
புகழ்ந்து திருப்புகழ் பாடி
இகபர சுகங்களை
அடைந்து மகிழ்வோமாக






வினைகள் நம்மை பற்றாது
கோள்கள் நம்மை சுற்றாது
இன்பம் நம்மை  விட்டு அகலாது
மரணம் என்றும் நம்மை அணுகாது
மாயை நம்முன் நில்லாது
மனமே நீ என்றென்றும்
முருகனின் திருவடிகளை விட்டு
அகலாது நின்றால்

ஓம் சரவணபவ 

Wednesday, July 24, 2013

நிம்மதியை பெரும் வழி

நிம்மதியை பெரும் வழி 

உள்ளத்திலே நிம்மதி வேண்டும் 
வாழ்வில் ஆனந்தம் வேண்டும் 


இந்த இரண்டும் 
இருந்துவிட்டால்  போதும் 
பிறகு வேறென்ன வேண்டும்? 

அது சரி இவை இரண்டும்
எங்கே கிடைக்கும் ?

சத்குருவின் பாதங்களில் 
மட்டுமே கிடைக்கும் 
உலகில் வேறெங்கும் கிடைக்காது 

அது நம்மை தேடி வருமா?

அது வராது .நாம்
நம் அகந்தையை விட்டுவிட்டு 
ஆசைகளை துச்சமென 
விலக்கிவிட்டு 
சத்குருவை நாடவேண்டும். 

நாடினால் அப்புறம்
நாம் எதற்கும் பயப்படவேண்டாம். 
இவ்வுலகமே சுவர்க்கம்தான். 

கீழ்கண்ட பாடல் 
அதை விளக்குகிறது.

கேட்டு பாடி மகிழுங்கள். 


நிம்மதி அடைந்தேன்
உலகை மறந்தேன்
ஆனந்தம் தான் அடைந்தேன்


ஸத்குரு பாதுகை குஞ்சலம்
என் மேல் பட்ட பொழுது தானே
நானே (நிம்மதி)

குருவின் மலரடியை என்றும் என்
கண்ணால் பார்த்து நின்றேன்
மற்றெல்லாம் மாயை
பொய்யென்னும் கனவில் 
கண்ட பொருள் போல் உணர்ந்தேன்
அதனால் (நிம்மதி)


மலையை  குடையாய்  தாங்கிய 
கோகுலம்  காத்த  கோவிந்தனை  நான் 
சரணமாய்  அடையவே  அவன்  
என்  பார்வையை  உட்புறம்  ஆக்கிவிட்டான்  
அதனால்  (நிம்மதி )


பிறப்பிறப்பாம்  பவமென்னும்  கடலில்  
ஜலம்முழுதும் வற்றிப்போச்சு 
அதை  தாண்டும் உபாயம் தேடும் 
கவலையும் என்னை  விட்டு   போச்சு 
அதனால் ( நிம்மதி ) 

பாடல் லிங்க். http://www.freemp3go.com/track.php?id=andzM1hMYmVaVjQ=

Tuesday, July 23, 2013

GuruPoornima-22-7-2013

GuruPoornima-22-7-2013

GuruPoornima-22-7-2013

Guru"s Blessings to all






எல்லாம் இருந்தும்
அதை நினைந்து மகிழாது
எதையோ தேடி
ஓடுகிறது பொல்லா மனம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
வாழும் வகையறியாது
இல்லாததை நினைந்தே
ஏங்கி தவிக்குதே இந்த
கள்ள மனம்

இறைவன் நம்முளே இருப்பினும்
அவனை புறத்தே தேடி,ஓடி
நாடி தளர்ந்துவிட்டதே
குருநாதா ! நான் என்ன செய்வேன்?

இறைவன் வருவான்
மனித வடிவில் என்றார்
அவனை உணர்ந்த ஞானிகள்

குருவே பிரம்மனும்,
குருவே மாலும்
குருவே மகேஸ்வரனும்
குருவே பரப்ரம்மனும்
என்றால் நீதான்
இறைவன் வடிவில்
எங்களின்  அஞ்ஞானத்தை
போக்க வந்த ஒளியன்ரோ!

குருபூர்ணிமாவான இந்நாளில்
உன் தாள் பணிகின்றோம்
எங்கள் மனம் அமைதியுற்று
இறைஅருளை பெற்றிடவே
வாழ்த்திடுவாய்

Monday, July 22, 2013

என்னே பேதைமை?

என்னே பேதைமை?

நம்மை படைத்த தெய்வமே
நம்மோடு வந்து
வாழ்ந்து இந்த உலகிற்கு
வழிகாட்டி மனமெல்லாம்
மகிழ்ச்சியை தந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தா வனத்தில் கண்ணன்
வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
என்று பாடினாள் பக்த மீரா





ராம ராஜ்ஜியம்தான் என்
கனவு என்றார்
மகாத்மா காந்தியடிகள்

எல்லா உயிரும்
இன்புற்று வாழுக
கொல்லா விரதம்
குவலயம்
எல்லாம் ஓங்குக
கண் மூடி பழக்கம்
மண்மூடி போக
என்ற வள்ளலாரின்
வாக்கு பலிக்கட்டும்





சாத்திர சண்டையிலே
கோத்திர குப்பையிலே
புரளும் மக்களை
மீட்டேடுக்கபோவது யார்?

மலர்களிலே பல
சாதிகள் உண்டு
ஒவ்வொன்றும்
வெளியிடுகின்றன
மனதிற்கு சுகம் தரும்
நறுமணங்களை.
வெவ்வேறு நிறங்கள்,
வடிவங்கள்
இருப்பினும் அவைகள்
நாருடனே இணைந்து மாலையாகி
மனிதர்களுக்கு இன்பம் தருகின்றன
மாலவனின் கழுத்திலும் அலங்கரிக்கின்றன
மகேஸ்வரியின் பாதங்களிலும்
தன்னை அர்ப்பணிக்கின்றன.

மனிதர்கள் மட்டும்
உடலின் உள்ளே ஒன்றாயிருப்பினும்
உருவத்தில், வடிவில். இனத்தில்,
நிறத்தில்,சார்ந்த மதங்களின் கொள்கைகளில்
நிலவும் வேறுபாட்டை
பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி
உயர்ச்சி தாழ்ச்சி செய்து வீணே மடிகின்றனர்.

என்னே இவர்களின் பேதைமை!
என்று தீரும் இவர்களின் மடமை !

அனைத்தும் விழலுக்கு
இறைத்த நீராயிற்றே
எண்ணற்ற ஞானிகளின் போதனை

என்று திருந்துமோ
இந்த மானிட சமுதாயம்?

வேற்றுமையில் ஒற்றுமை
என்று வாய் கிழிய
பேசுகின்றார்

ஆனால் குணங்கெட்டு
ஒருவரைஒருவர் ஏசி
மதிகெட்டு மாய்கின்றார்.

அனைத்து உயிரிலும்
அந்த வாசுதேவன்தான்
உள்ளொளியாய்,
ஆன்மாவாய் இருக்கின்றான்
அவனை நான் தொழுகின்றேன்  என்று
மெத்த சாத்திரம் படித்த மேதைகள்
மேடைகள் தோறும் முழங்குகின்றார்.

ஆனால் மேடையை விட்டு கீழிறங்கியதும்
நான் மேல்சாதி நீ  கீழ்சாதி தள்ளி நில் என்று
பாங்குடனே பகருகின்றார்.

உள்ளொரு வைத்து
 புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டாம்
என்றார்  வள்ளலார்

அப்படிப் பார்த்தால் இன்று
அனைவரும் தனி தனி தீவாக
அல்லவோ   நின்றிடுவோம்.!




Saturday, July 20, 2013

மழைக்கடவுளே நீ வா!(பகுதி-1)

மழைக்கடவுளே நீ வா!(பகுதி-1)



மந்தஹாச
இடிமுழக்கத்துடன் வா?

இன்னல்கள் தீர்க்கும்
மின்னல் போல் ஒளி வீசி வா !

நாங்கள் வாழும்
இந்த பூமி குளிர வா !

உயிர்கள் அனைத்தும் வாழ
உணவு பொருட்களைத் தா!

தாகம் தீர்க்கும் குடிநீரைத் தா !

என்றெல்லாம் அழைக்கும் இந்த 
மனித குலம் மாரியென நீ வந்துவிட்டால் 
என்ன சொல்கிறது தெரியுமா?

நீ மாலையில் பெய்தால் 
சாலையெல்லாம்
மழை கொட்டி தீர்த்து 
நீர் தேங்கிவிட்டதே 
எப்படி வீடு செல்வோம் 
என்று அங்கலாய்க்கிறது






காலையில் நீ கொட்டி தீர்த்தால்
மின்சாரம் போய் விட்டதே  
எப்படி குளிப்பேன், சமைப்பேன்,
 தொலைகாட்சி பார்ப்பேன்,
 பாட்டு கேட்பேன், துணி துவைப்பேன்,
கைபேசி மின்கலத்தில் சக்தி ஏத்துவேன் ,
முடிவாக எப்படி வேலைக்கு செல்வேன்,
பாழாய்ப் போன மழை எல்லாவற்றையும் 
கெடுத்துவிட்டதே என்று 
புலம்பி தவிக்கிறது மந்த புத்தி 
படைத்த இந்த மனித கூட்டம்

























ஆனால் உயிர் காக்கும் பயிர் தொழில் 
செய்வோர் உன்னை வேண்டி விரும்பி 
பக்தியுடன் வரவேற்கின்றார் 
தங்கள் தொழிலை செய்ய 



அணைகட்டி நீர் தேக்கி மின் உற்பத்தி செய்வோர் 
உன் வரவை அன்புடன் எதிர்நோக்குகின்றார் 
அணையின் நீர்மட்ட அளவை ஒவ்வொரு 
கணமும் கவனத்துடன் காண்கிறார். 

ஆனால் யார் என்ன நினைத்தாலும் நீ
அதை புறந்தள்ளி உன் கடமையை செய்கின்றாய் 
கடமையை செய் பலனை எதிர்பாராதே 
என்று சொன்ன பாரதக் கண்ணன் போல். 





மழைக்கடவுளே
நீ வருக வருக 

நீ எப்படி வந்தாலும் சரி
நீ எந்த வழியில் வந்தாலும் சரி
அது எங்கள் நன்மைக்கே

நீ தனியாக வந்தாலும் சரி
புயலாய் ,வெள்ளமாய்
வந்து அனைத்தையும்
ஒரு கை பார்த்தாலும் சரி



நின்று நிதானித்து பெய்தால்
நீர் நிலைகளெல்லாம் நிறையும்

இந்த மானுடம் வாழும்
உன்னை வாழ்த்தும் .

இன்னும் வரும்




Friday, July 19, 2013

நம்மை காக்கும் தெய்வம் எது?

நம்மை காக்கும் தெய்வம் எது? 





இந்த உலகத்தில் உயிரினினங்களில்
உள்ள கோடிக்கணக்கான பிரிவுகள் ,
வகைகள் உள்ளன

அவைகள் ஒவ்வொன்றிலும்
கணக்கற்ற உயிர்கள் தோன்றி
மறைந்துகொண்டிருகின்றன.

அந்த வகையில் மனிதனும்
ஒரு ஜந்துதான் அதாவது உயிரினம்தான்

ஆனால் மனித இனத்திற்கு மட்டும்தான்
ஜீவன் என்ற நிலையிலிருந்து விடுபட்டு
சிவன் என்ற நிலைக்கு உயர
தேவையான மனமும், அறிவும்
இறைவன் அளித்துள்ளான்

சிவன் என்ற நிலையை அடைவதற்கு
அன்பு அதாவது சிவம் என்ற
பண்பை கைகொண்டு ஒழுகவேண்டும்

அந்த பண்பில்லாமல் செய்யப்படும்,
வழிபாடுகள், பூஜைகள், தானம் ,
தவம் அனைத்தும் விழலுக்கு
இறைத்த நீர் போல் வீணாகிவிடும்.

அதற்கு மனதில் அழுக்காறு
என்னும் பொறாமை ஓட விடக்கூடாது.

பொறுமை ,தியாகம், பக்தி, நம்பிக்கை
என்னும் நல்ல சிந்தனைகள் நிறைந்த
புனித கங்கையாற்றை பாயவிட வேண்டும்

இந்த உலகில் கணக்கற்ற
 தெய்வங்கள் இருக்கின்றன.

அவைகளை உபாசித்து
 என்ன வரங்களை பெற்றாலும்
அவைகள் இந்த உடலில் உயிர்
உள்ள வரைதான் பயன்படும்.
மீண்டும் பிறவி கடலில்தான்
விழவேண்டும்.

நாம் மீண்டும் பிறந்து
பிறப்பிறப்பு சேற்றில் சிக்கி
துன்பப்படாமல்
இருக்க வேண்டுமென்றால்
அந்த வரத்தை தரக்கூடிய
தெய்வத்தை
நாம் உபாசிக்கவேண்டும்.

அந்த தெய்வம் யார் என்பதை
 நமக்கு உணர்த்துகிறார்
அரங்கன் மீது" திருமாலை "என்னும்
45 பாடல்களை பாடி அவனுடன்
அயிக்கியமான தொண்டரடிபொடி ஆழ்வார் .

அந்தபாடல் தொகுப்பில்
உள்ள 9 வது பாடல்.
நம்முடைய உடலில் புலன்கள்
வெளியே செல்லும்  9 வாசல்களையும்
அடைத்து இறைவனின் மீது
நம்மை பக்தி செய்ய வைக்கும்
அற்புத பாடல்.

மற்றுமோர் தெய்வமுண்டே 
மதியிலா மானிடங்காள் 
உற்றபோதன்றி நீங்கள் 
ஒருவனென்று உணரமாட்டீர் 
அற்றமே லொன்றறிய்யீர் 
அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை 
கழலினை பணிமினீ ரே 

சீதையும் ஹனுமனும் நமக்கு காட்டும் வழி . (பகுதி-2)

சீதையும்  ஹனுமனும்
நமக்கு  காட்டும்  வழி . (பகுதி-2)







மனிதர்கள்  ஹனுமானை
குருவாக  நினைத்து
வணங்கவேண்டும் .

சம்சார  கடலில்  பல  துன்பங்களில்
சிக்கி  அல்லல்படும்  மக்கள்
அவனிடம்  அற்ப  உலக  வாழ்க்கைக்கான
பொருள்களையும் ,
சுகங்களையும்தான்
யாசிக்கிறார்கள் .

இது  மிகவும்  வருத்தப்பட  வேண்டிய  விஷயம் .

ஏனென்றால்  மற்ற
உலக  சுகங்களை  அளிக்க
ஏராளமான  தெய்வங்கள்  இருக்கின்றன .

ஹனுமானிடம் பிறவிக் கடலிலிருந்து
கரையேற்றும்  ஸ்ரீ  ராம  சந்திர  மூர்த்தியின்
திருவடிகளில்  பக்தி  வேண்டும்
என்று  மட்டும்தான்
பிரார்த்தனை  செய்ய  வேண்டும்
என்பதை  யாரும்  உணரவில்லை .)

என்ன ஆச்சரியம் பாருங்கள்.

மனித வடிவில் வந்த சீதையோ
மிருகவடிவில் வந்த
தங்க நிற மானின் மீது
மோகம் கொண்டாள்

விலங்கு  வடிவம்  கொண்ட
மாருதியான  ஹனுமானோ
மனித  வடிவில்  வந்த
தெய்வம்  ராமபிரான்
மீது  மோகம்  கொள்கிறான்

அவனை  பணிந்தேத்தினான்

அவன்  மீது  கொண்ட  அபரிமிதமான
பக்தியின்  துணையினால்
துணிவினால்  யாரும்  செய்ய  இயலா
செயற்கரிய  செயல்களை
செய்து  முடிக்கின்றான்

உள்ளத்தில்  அவன்  நாமம்
எப்போதும் இருந்தால்   நாம்
ஏன்  பள்ளத்தில்  விழப்  போகிறோம் ?

எண்ணத்தில்
கள்ளத்தனம்  எங்கிருந்துவரும் ?

ஹனுமானின்  வரவு  சீதைக்கு (ஜீவனுக்கு )
நம்பிக்கையூட்டுகிறது .

இறைவன்  வரும்  நாளை
ஒவ்வொரு  கணமும்  எண்ணி  தவிக்கிறது .

முடிவில்  இறைவன்  புலன்களின்
கட்டுப்பாட்டில்  (பத்து  தலை  ராவணனால் )
சிறை  வைக்கப்பட்டிருந்த  சீதையை (ஜீவனை )
இறைவனாகிய  ஸ்ரீராமன்
போரிட்டு  மீட்கிறான் .

அப்போதும்  இந்த  ஜீவனின்  பக்தி
உண்மையானதுதானா  அல்லது
இந்த  சிறையிலிருந்து
தப்பிப்பதற்காக நடத்தும்  நாடகமா
என்பதை  அறிய  பல  கடுமையான
சோதனைகளுக்கு
ஜீவனை  இறைவன் உட்படுத்துகிறான்

( சீதையின்  அக்னிப்ரவேசம் )
(பெரியபுராணம், மற்றும் மகா பாரதத்தில்
 பக்தர்களை பகவான் பல கடுமையான
சோதனைகளுக்கு உட்படுத்தியதை.
இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்)

அதில்  வெற்றி  பெற்ற  ஜீவன்
மீண்டும்  இறைவன்  அருகில்
இருக்க  அனுமதி  பெறுகிறது (சாமீப்ய  முக்தி )

ஆனால்  இந்த  நிலை   முடிவல்ல

இன்னும்  சாலோக்கியம் ,
சாரூப்யம் , கைவல்யம்  என்று
முக்தி  நிலைகள்  உள்ளன .

pic.courtesy-http://santhipriyaspages.blogspot.in



சீதையும் ஹனுமனும் நமக்கு காட்டும் வழி . (பகுதி-1)

சீதையும்  ஹனுமனும்
நமக்கு  காட்டும்  வழி . (பகுதி-1)







என்ன  ஆச்சரியம்  பாருங்கள் !

மனித  வடிவிலான  சீதை
(ஜீவன் )விலங்கு
வடிவிலான  மாய  மான்
மாரீசன்  மீது
மோகம்  கொண்டாள்

அதனால் சோகத்தில்
சிக்கிகொண்டாள்

நம்மோடு  எப்போதும்  நம்  இதயத்தில்
இருக்கும்  இறைவனை  கண  நேரம்  மறந்து
ஆசை  வயப்பட்டதால்  இறைவனிடமிருந்து
ஞானேந்திரியங்கள்  ஐந்தும்  மற்றும்
கர்மேந்த்ரியங்கள்  ஐந்தும்  சேர்ந்த
பத்து  தலை  ராவணனால்  பிரிக்கப்பட்டு
அசோக வனத்தில்  சிறை  வைக்கப்பட்டாள்

இறைவனை  பிரிந்த  பிறகுதான்
மனம்  உணருகிறது

அருகிலேயே இருந்து நம்மை  காக்கும்
இறைவனை  பிரிந்துவிட்டோமே  என்று

ஏங்கி  தவிக்கிறது
அவன்  வந்து  நம்மை  காக்கமாட்டானோ
என்று  மனம்  உருகுகிறது

இறைவனைவிட்டு
நாம்  பிரிந்திருப்பதாக  நாம்
நினைத்தாலும்  இறைவன்
நம்மை  விட்டு
என்றும்  அவன் பிரிவதில்லை .

ஏனென்றால்  நாம்  அவனில்
ஒரு பகுதியன்றோ !

ஆன்மாவின்   தாபக்  குரலை
இறைவன்  கேட்கின்றான்

ஆன்மாவை  காப்பாற்ற
குரு  வடிவில்  (ஹனுமானை )
தன்னை  உணர்ந்த  அடியவர்களை
ஜீவனிடம்  அனுப்புகிறான்

குரு  வருகிறார் .
ஆறுதல்  கூறுகிறார்
கவலைபடாதே  இறைவன்
வந்து  உன்னை  காப்பாற்றுவான்
உன்னை  தன்னிடம்
அழைத்துக் கொள்வான்   என்று
நம்பிக்கையூட்டி  செல்கிறார்
(ஹனுமான்  சீதையை
அசோக வனத்தில்  கண்டு
அவள்  சோகத்தை போக்குகிறான் .
 நம்பிக்கை  ஊட்டுகின்றான் )

இன்னும் வரும்

pic.courtesy -google images 

கணபதியே கணபதியே !

கணபதியே கணபதியே !






எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்போது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்

கனக்கும் செல்வம்
இவையும்  தர நீ கடவாய்

மஹாகவி பாரதி.
(விநாயகர் நான்மணி மாலை) 

நாடுவோம் நாராயணனை பாடுவோம் அவன் புகழை .

நாடுவோம்  நாராயணனை 
பாடுவோம்  அவன்  புகழை .

ஆதிமூலமே
அரவணைப்பள்ளியானே























அனைத்துயிரிலும்  ஆன்மாவாய்
ஒளி வீசுபவனே !

இவ்வுலக  வாழ்வில்  எதிர்ப்படும்
துன்பங்களை  தீர்த்து
வைக்கும்  துணைவனே

என்றும்  உன்  நினைவாய்
காண்பதனைத்தையும் உன்  வடிவாய்
 கண்டு  இன்புறும்  பக்தர்களுக்கு
அனைத்துமாய்  விளங்குபவனே

நன்மையையும்  செல்வமும்
நல்லதோர்  மக்களும்
சுற்றமும்  நானிலத்தில்
தட்டாது  வழங்கிடும்  நாரணனே

நாளும்  கோளும்  தரும் இடர்ப்பாடுகள்
இந்த  உடலையும்  உலகையும்
நினைப்போர்க்கன்றி
உன்னை  நினைப்போர்க்கேது  ?

என்றும்  மாறாத   பேரின்ப  ஊற்றாய்  நீ
என்  உள்ளத்தில்  சுரக்கும்போது
சில  கணமே  தோன்றி
மறையும்  இவ்வுலக
 இன்பங்கள்  எனக்கெதற்கு ?

என்  உள்ளம்  பால்போல்
வெண்மையாய்  இருப்பின்
நீ  அங்கு  வந்து
சயனிப்பதர்க்கு  தடையேது ?

இனிக்கும் உன்  நாமம்  என்  நாவில்
எப்போதும்  இருக்கையில்
அது  எவ்வாறு   வேறு  சுவையை
நாடுதல்  கூடும் ?

பரம்பொருளே , பரிபூரணனே
பக்தவத்சலனே   உன்னை
பணிவதை  தவிர
வேறு  ஏது  பணி  எனக்கு ?

பிறவி பிணிக்கே மருந்தாய்   விளங்கும்  உன்
நாமத்தை  உட்கொண்டபின்   தோன்றி  மறையும்
இந்த  உடலின்  பிணிகளுக்கு  எதற்கு  மருந்து ?

என்  உள்ளத்தில்  எப்போதும்
ஒலிக்கட்டும் உன்  நாமம்

என்  கண்கள்  உன்
தெய்வீக  வடிவங்களை
கண்டு  மகிழட்டும்

என்  செவி  உன்
லீலா  விநோதங்களை
கேட்கட்டும்

என்  உடல்  உன்  அடியார்களுக்கு
அன்போடு  தொண்டு  செய்யட்டும்

என்  மனம்  எப்போதும்
உன்னையே  நாடட்டும் .

ஓம்  நமோ  நாராயணாய

Tuesday, July 16, 2013

கண்ணா மணிவண்ணா !

கண்ணா மணிவண்ணா !







கண்ணெதிரே நீ இருந்தும்
ஊனக் கண்ணால் காண இயலாது
தவித்தது பக்தர் குழாம்

அந்த தவிப்பை போக்கிடவே
ஆயர்பாடியில் கண்ணனாய்
வந்து அவதரித்தனையோ?

கள்ளமில்லா வெள்ளை உள்ளம்
கொண்டோரைதான் நான்
விரும்புவேன் என்று காட்டவே
வெண்ணிற வெண்ணையை
வேண்டும் மட்டும் உண்டு
களித்தனையோ?

உன்னை நினைத்தால் போதும்
ஐம்புலன் என்னும் நச்சுப்பாம்பு உன்
காலடியில் அடங்கி போன
காளியன் போல்  உன்னை துதிக்கும்

மலைபோல் துன்பம் வரினும்
நான் பக்தர்களை காப்பேன் என்பதை
காட்டும் வகையில் குன்றை குடையாய்
ஏந்தி ஆயர்பாடி மக்களையும்
மற்ற உயிர்களையும் காத்தனையோ?


பக்தர்களை காப்பாற்ற தீயவர்கள் மீதும்
கருணை காட்டி அவர்களை
திருத்த முயற்சி செய்தாய்
திருந்தாத அவர்களை பாரதப் போரில்
பூண்டோடு ஒழித்தாய் .

அஞ்ஞானம் அகன்றிடவே யோகங்களை
வகுத்து கொடுத்தாய்.ஸ்லோகங்களாய்
தொகுத்து கொடுத்தாய் கீதையாய்
பொழிந்தாய் இந்த மானுடம் உய்வுற

அனைவரையும் அன்பால் உன்பால்
ஈர்த்துக்கொண்டாய்
அடியவர்களை உன் பால்
சேர்த்துக்கொண்டாய்
கொடியவர்களை
அடியோடு அழித்தாய்.

எண்ணுவார் மனதில் எல்லாம்
ஒளிவீசும்  உன் அழகிய முகம் தோன்றும்

செவியில் உன் வேணுகானம்
இனிமையாய் கேட்கும் .

இகபர சுகமனைத்தும் இனிதே அமையும்

இவ்வுலகில் வாழும் காலமெல்லாம்
சொர்க்கமாகும்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.



Monday, July 15, 2013

பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)(2)

பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)(2)



சுப்பு தத்தா சொல்கிறார். 
ரமணர் சொல்வதெல்லாம் ஒன்று தான்.

சும்மா இரு.


சும்மா இரு என்பதற்கு
பல அர்த்தங்கள் உண்டு

உயிருடன் இருக்கும்போதே
ஒன்று எதுவும் செய்யாமல் சும்மா
சவம்போல் கிடப்பது.
(அவ்வாறு இருந்தால் உங்களை பிணம்
என்று நினைத்து புதைத்து விடும் இந்த உலகம்)

அதனால்தான் சாமியார்கள் தங்கள்
உடலை பாதுகாக்க சீடர்களை பக்கத்தில்
வைத்துக் கொள்ளுகிறார்கள் போலும்.

இல்லாவிடில் இந்த உலகம்
ஆதி சங்கரரின் உடலை சுடலைக்கு
கொண்டு சென்றதுபோல் நடந்துவிடும்.

மற்றொன்று மனதில் எந்த
 எண்ணங்கள் தோன்றினாலும்
அதை செயல்படுத்தாமல்
அதை சாட்சியாக பார்ப்பதுடன்
நின்றுவிடுவது.

அவ்வாறு மனதில் தோன்றும்
ஒவ்வொரு எண்ணத்தையும்
கண்காணித்துக்கொண்டே வந்தால்
அவைகள் செயலிழந்துபோகும்.

தான் என்னும் அகந்தையை
முற்றிலுமாக ஒழித்துவிடுவது.

யாராவது நம் உணர்வுகளை
தூண்டினாலும்
நாம் அதற்காக நாம் ஆட்படாமல்
இருப்பது
(அது ரொம்ப கஷ்டம்-முடியாத காரியம் )

நான் சூடு சொரணை உள்ளவன்,

நான் உப்பு போட்டு சாப்பிடறவன் ,
எவனாவது எங்களை எதிர்த்து கை நீட்டி பேசினான்னா,
அவன் கையையே எடுத்த மான மிக்க குடும்பம்
என்று மார் தட்டுவது,

தனக்கு மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது
என்று எண்ணும் மனமுடையவ்ர்களுக்கு

எல்லாவற்றிற்கும்
பிறரின் புகழ்ச்சியை எதிர்பார்ப்பது

பிறர் இகழ்ந்தால் வருத்தப்படுவது
, பழி வாங்குவது,
தேவைக்கு மேல் ஆசைப்படுவது ,
பொறாமைப்படுவது, பயப்படுவது,
போன்ற மனதின் விளையாட்டுகளுக்கு
பலியாகும் மனிதர்களுக்கு
இவர் கொள்கை ஒத்துவராது.

இந்த ரமணர் கொள்கை
நடைமுறையில் கடைபிடிப்பது
மிகவும் கஷ்டம்தான்
(இருந்தாலும் கஷ்டங்களிலிருந்து
நிரந்தரமாக் விலக வேண்டுமானால்
சில கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
அதற்கு தயாராக இருப்பவர்கள் முயற்சி செய்யலாம்)

இந்த உடல் உயிர் உள்ளவரை
இயங்கி கொண்டுதான் இருக்கும்.

அதற்க்கு வேண்டிய சரக்குகளை மட்டும்
கொடுத்துக்கொண்டு (சில சாமியார்கள் சாப்பிடும்
கஞ்சா போன்ற போதை பொருட்கள் அல்ல)
அதை இயங்க வைத்துக்கொண்டு
எந்த உயிரின் மீதும் உடைமைகள் மீதும்
பற்றுக்கள் வைக்காமல் ,
கிடைத்ததை திருப்தியுடன்
பிறருடன் பகிர்ந்து கொண்டு ,
இறை சிந்தனையோடு
ரமணர் போல் போல்
அகந்தையின்றி
வாழ்க்கை நடத்தலாம்

வாழ்நாள் முழுவதும் மனம் சொல்லும்
இடத்திர்க்கெல்லாம் இந்த உடலை
விரட்டிகொண்டு அங்கும் இங்கும்
 கடவுளை தேடி
அலையும் வேலை மிச்சம்

ஏனென்றால் கடவுள் (கடம்- இந்த உடல் )
(உள்-உள்ளே இருக்கின்ற ஆத்ம வஸ்து)
நம்முள்ளேயே இருப்பது.

மனம் அழிந்தால் அந்த வஸ்து புலப்படும்.
(ஆனால் மனிதர்கள் அந்த வஸ்துவுக்கு
பயப்படுகிறார்களோ இல்லையோ
வாஸ்துவுக்கு பயந்து கட்டிய வீட்டை
இடித்து இடித்து கட்டுகிறார்கள்
அவர்கள் வாழும் இந்த உடல் ஒவ்வொரு
கணமும் அழிந்துகொண்டிருப்பதை கவனியாமல்.)

ஆனால் தற்காலத்தில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை மூலம் இந்த உடலின் தோற்றத்தையே மாற்றிகொள்கிறார்கள் என்பது வேறு விஷயம்)

 பற்றுக்களை விட்டாலும் பிற உயிர்கள் மீது
அன்பு செலுத்தலாம்,பகைமை பாராட்டாமல் இருக்கலாம்,
பலன் எதிர்பாராது தொண்டு செய்யலாம்,
 பிறருக்கு உதவலாம் )

Sunday, July 14, 2013

பகவான் ரமணரின் சிந்தனைகள் (3) (1)

பகவான்  ரமணரின்  சிந்தனைகள்  (3) (1)


சுப்பு தாத்தா கமெண்ட்ஸ் 

on பகவான்  ரமணரின்  சிந்தனைகள்  (3) 

ஆனா நீங்களோ மத்தவங்க என்ன செய்யறாங்க 
அப்படின்னு பாத்துண்டு இருக்கீக...


இவன் பதில் 

நானும் அதைத்தான் 
செய்துகொண்டிருக்கிறேன்

நீங்களும் அதைத்தான் 
செய்துகொண்டிருக்கிறீர்கள்

இரண்டுபேரும் அதைத்தான் 
செய்துகொண்டிருக்கிறோம்

நீங்கள் சொல்வதுபோல்
நான்மற்றவர்கள் செய்வதை 
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

நான் என்ன செய்கிறேன் 
என்பதை நீங்கள்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் 

இல்லாவிடில்
பல கோடி பேர்கள் வாழும் இந்த உலகில் 
மற்றவர்கள் எல்லாம் அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது 
இந்த பதிவிற்கு நீங்கள் மட்டும் வந்து 
முதலில் வந்து கருத்து சொல்வீர்களா?

Both are sailing
in the same boat 

என்றாவது ஒருநாள் 
இருவரும் கரை சேருவோம்


அதெல்லாம் இருக்கட்டும் சாரே...

உண்மையிலே ...

நான் யார் அப்படிங்கரதுலே நான் அப்படிங்கறது யாரு ?

சுப்பு தாத்தா பல கேள்விகளை கேட்டுவிட்டார்.

அவர் இது போன்ற கேள்விகளை
கேட்டதற்கு காரணம் பதிவில் கூறப்பட்ட
 பல கருத்துக்கள் அவருடன் ஒத்துப்போவதாக
இருப்பதால்தான் அவர் கோபப்பட்டு
மேற்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்

அவர் கேள்வி.
அதெல்லாம் இருக்கட்டும் சாரே...
உண்மையிலே ...
நான் யார் அப்படிங்கரதுலே நான் அப்படிங்கறது
 யாரு ?

இவன் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு
உடன் மறுப்பு தெரிவிக்குமாறு சுப்பு தாத்தாவை
பதில் எழுத தீண்டியதே அந்த எண்ணம் தான் "நான்" என்பது

ஆனால் அந்த "நான்" தான்  என்ற
அகந்தையுடன் கூடியது.

இவன் யார் மற்றவர்களை பற்றி குறை கூற என்றும்,
நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ
என்று சொல்வதுபோல் எழுதவைத்ததும்
அந்த 'நான்" என்னும் அகந்தை கொண்ட எண்ணம்தான்.

ரமணர் சொல்லும் "நான் "இவன் எழுதியதை பார்த்தும்
மனதில் எந்த எண்ணமும் எழாமல்
அமைதியாக இருக்கும் "நான்" தான்
உண்மையான நான்.

அந்த நிலையை அடையும்வரை
மனதில் அமைதி இருக்காது

அமைதியற்ற  மனதினால்
எந்த சாதனைகளையும் 
தொடரமுடியாது.

அடுத்து அவர் கேட்கிறார்?

சாரி சார். 
நான் யார் ? அப்படிங்க விசாரத்தை 
நான் இன்னிக்கு செய்யணும். 
ஒரு பைவ் மினிட்ஸ் ஆவது அட் லிஸ்டு.
லேட் ஆயிடுத்து..


ஆத்ம விசாரம் என்பது தொடர்ந்து
நடைபெறவேண்டிய ஒன்று.

அவர் அடங்கா மனதை பிடித்து கூண்டில்
அடைப்பதுபோல் பைவ் மினிட்ஸ் அல்லது
சிக்ஸ் மினிட்ஸ் செய்வது எந்த பலனும் தராது.
அவ்வாறு அடக்கப்பட்ட மனம் நம்மை ஒருநாள்
ஏமாற்றிவிட்டு வெளியே ஓடிவிடும்.

அது நம்முடைய மற்ற வேலைகளுடன்
தொடர்ந்து செய்யப்படவேண்டிய ஒன்று .

நாளைக்கு வந்து நம்ம 
குஜாய்ச்சன்டையை தொடங்கலாம்.

சுப்பு தாத்தா அவர் மனதில் உள்ள எண்ணங்களோடு
போராடி அவைகளை வெற்றிகொண்டால் பயனுண்டு.

என்னிடம் போராடுவதால் பயன் ஒன்றும் இல்லை
என்பதை புரிந்துகொண்டால் நலம் .

பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)


பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)

பகவான் ரமணரின் சிந்தனைகள்(3)










நான் யார்?



இந்த கேள்வியை தன்னை
நாடி வந்த அனைவரையும்
கேட்க சொன்னார்
ஒருவர்

அவர் பகவான் ரமண மகரிஷி என்று
அவரை பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு தெரியும்.

அவர் அதை சொல்லி
பல ஆண்டுகள் கடந்துவிட்டன

ஆனால் அவர் சொல்லியதை
யாரும் கேட்டதாக தெரியவில்லை

கேட்டிருந்தால் பிற்கால  சந்ததிகள்
மற்றொரு ரமணரை சந்தித்திருக்க வாய்ப்பு
கிடைத்திருக்கும்.

ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று.
தோன்றவில்லை.

அவர் நான் யார் என்று அவரவர்
தனக்குள்ளே தேட சொன்னார்.

ஆனால் இந்த உலகத்து மனிதர்களோ
ரமணாஸ்ரமத்தில் ரமணரை
தேடிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய
அவர்களுக்குள் அந்த நான் என்ற
ஆன்மஸ்வரூபனை தேட முயற்சி
செய்வதில்லை

இன்னும் எவ்வளவு காலம்தான்
அவரை பற்றிய கதைகளையும்
அவரை பற்றி மற்றவர்கள் விடும்
கட்டுக்கதைகளையும்
படித்துக் கொண்டிருப்பது?
கேட்டுக்கொண்டிருப்பது?
வியாக்கியானம் பண்ணிக்கொண்டிருப்பது?

அவர் படத்தை வைத்துக்கொண்டு பூஜை
புனஸ்காரம்,நமஸ்காரம்  விழாக்கள்
கொண்டாடிக்கொண்டிருப்பது?

ரமணர் பல
வழிகளை சொன்னார்

அவற்றில் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து
அந்த வழியில் செல்லவேண்டுமே அல்லாது
மீண்டும் புத்தகங்களில் உள்ள செய்திகளை
மீண்டும் மீண்டும் உருப்போடுவதால்
உருப்படமுடியுமோ ?
நிச்சயம்  முடியாது.

தண்ணீரில் குதித்தால்தான்
நீந்த கற்றுக்கொள்ள முடியும்

கரையிலே உட்க்கார்ந்து கொண்டு தண்ணீரை உற்றுப்பார்த்துகொண்டிருந்தால்
நீச்சல் வராததுபோல்
ரமணரின் படத்தை
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தால்
மட்டும் ஞானம் பிறக்காது.

இந்த உடல்தான் நாம் என்று
நினைத்துக்கொண்டிருக்கும்
இந்த உடல் எப்போது வேண்டுமானாலும்
காணாமல் போய்விடும்.

அப்புறம் ஒன்றும் செய்யமுடியாது
மீண்டும் இறைவன் மற்றொரு
உடல் நமக்கு அளிக்கும்வரை.

எனவே அவர் காட்டிய வழியில்
ஆத்ம விசாரம் செய்ய தொடங்குங்கள்.

ஒரு விதை ஒரே நாளில் முளைத்து
மரமாகி கனிகளை ஈன்று விடுவதில்லை.

அதற்க்கு பல மாதங்களோ அல்லது
ஆண்டுகளோதான் ஆகும்.

அதுவரை முயற்சிகளை
தொடரத்தான் வேண்டும்.

அதுபோல்தான்
ஆன்ம சாதனையும்.
அதற்க்கு நம்பிக்கையும்,
 விடாமுயற்சியும் வேண்டும்.

கோழைகளும் சோம்பேறிகளும்
ஆன்ம சாதனைக்கு தகுதியானவர்கள் அல்லர்
என்று பகவான் கண்ணன் கீதையில்
சொல்லியிருப்பதை இங்கு நினைவு
கூறுதல் அவசியம்.

Friday, July 12, 2013

ஜகத் குரு

ஜகத் குரு









அட்சரம் லட்சம் பெரும்..அனைத்தும் சத்யம்..அந்த கருணாமூர்த்தியின் கடாக்ஷத்தை பெற்றுவிட்டால்....சாந்தி...சாந்தி...சாந்திதான்.ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர.
(.வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி )


சாத்திரங்கள் பல கற்றவர்களின்
சபையைக் கூட்டினான்
சன்மானம் அளித்தான் அதோடு
தன் சமரச நோக்கையும்
நிலைநாட்டினான்

கலாசாரத்தை தொன்று தொட்டு
காப்பாற்றி வரும் கலைகளையும்
கலைஞர்களையும்
ஆதரித்து வளர்த்தான்

ஆத்திரம் கொண்டோரின்
அறியாமையை நீக்கி
அவர்களை திருத்தி
அடிமைகொண்டான்
தன் அடியவனாக
விளம்பரமில்லாது

அற்புதங்கள் பல செய்தான்
பல ஆயிரம் பேர்களின்
வாழ்வு மேம்பட


அனைத்தும் நீயே
என்று அவன் பாதம்
பற்றினால்
அணைத்துக் காப்பான்

அகந்தை கொண்டோரை
அண்ட விடான்.
அகந்தையை விடுத்து
அவனை நாடும் வரை

வைராக்கியம் கொண்டு
குடும்ப பாரத்தைத்
துறந்தான்

மனமுவந்து வையகத்தில்
உள்ள அனைவரின்
மனச் சுமையை
ஏற்றுக்கொண்டான்

தீராத வினைகளை
தீர்த்து வைத்தான்
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் போல்

இனி   இவர்போல் யார்
அவதரிப்பார்   அவனியிலே
அறியாமையிலும்  மாயையிலும்
மூழ்கிவிட்ட மக்களை கரை சேர்க்க?


ஜகத் குரு

ஜகத் குரு








பலர் கேட்கிறார்கள்
எப்படியப்பா பெரியவாவை
ஜகத் குரு என்று அழைக்கலாம்?

உலகத்து மக்கள் தொகையில்
கணக்கிலே வாராத ஒரு
சமூகத்தின் பிரதிநிதியாக
விளங்கும் துறவிகோலம்
பூண்ட ஒரு மடத்தின் அதிபதி.

பிரம்மம்தான் சத்தியம்
மற்றவைஎல்லாம் வெறும்
தோற்றங்களே என்று
உலகுக்கு உரைத்த ஆதி
சங்கரரின் அடிசுவட்டில் வந்த
ஒரு அவதார புருஷனைப்
பார்த்து கேட்கப்படும் கேள்வி இது

அத்வைத தத்துவத்தை
ஆராய்ந்து உரை எழுதாத மகான்கள்
உண்டோ இந்த உலகில்?

அவர்கள் எழுதிய உரைகளின்
அடிப்படையில் பல்வேறு தத்துவங்கள்
கிளைத்தெழுந்து தோற்றுவிக்கப்பட்ட
மடங்கள் எத்தனை எத்தனை?

தத்துவங்களை மட்டும் ஒரு சிறிய
கூட்டத்திற்கு விளக்கிவிட்டு
குருபூஜை, இறைவனின் பூஜை
என்று ஒரு சிறிய வட்டத்திற்குள்
முடங்கியவர்கள்தான் அனைவரும்.

கயிலையில் கல்லால மரத்தின்
கீழமர்ந்து தத்துவ உபதேசம்
செய்தான் பரமேஸ்வரன்.

ஆனால் காலடியில்பிறந்த
ஆதி சங்கரனையும்
மிஞ்சிவிட்டான் இந்த
காஞ்சி காமகோடி
பீடத்தில் அமர்ந்தவன்.

ஓரடியால் பூவுலகை அளந்த
வாமனனையும் விஞ்சிவிட்டான்
புண்ணிய பாரத்தை தன் காலடியால்
பல முறை அளந்து. இவன்

வழி தவறிப் போன மானிடரை
தன் வழிக்கு கொண்டுவர
பல வழிகளைக் காட்டினான்
தன் கருணை விழியால்
அனைவரையும் கடாஷித்து.

தான் என்னும் அகந்தையை
விட்டதனால் அனைவரையும் தன்
ஆன்மாவாக கண்டவன்
அண்டியவர்கள் யாவரையும்
வாழ்வில் கரையேற்றிவிட்டவன்

தன் அருள் பார்வையாலே
அனைத்தையும்
யாரும் கூறாமலே அறிந்துகொண்டு
அவர்களின் துன்பம் தீர்த்தவன்.

படித்தவ்னாயினும் சரி
படிக்காத பாமரனாயினும்  சரி
வாழ்வில் வளம் கொண்டோரானாலும் சரி
வளமற்று வறுமையில்
வாழ்ந்தோராயினும்  எல்லோரும்
அவனுக்கு ஒன்றே.

துறவிக்கு வேந்தனும்
துரும்பு என்பதை
செயலில் காட்டியவன்

சர்வ சக்தி படைத்த அரசுகள்
செய்யமுடியாத
செயல்களை தன் ஆன்மீக சக்தியால்
தனிமனிதர்களைக்  கொண்டு நிகழ்த்திக்
காட்டிய மனித வடிவில் வந்த
தெய்வம் அவன்.

மதம், மொழி நாடு,
இனம்,கடந்த ஞானி

அஞ்ஞானிகளை
கரை சேர்க்க வந்த தோணி

அவர் புகழ் பாடுவதும் ,
அவர் காட்டிய
வழி நடப்பதுமே
நம் தலையாய பணி.