Wednesday, December 18, 2013

இன்று ஆருத்ரா

இன்று ஆருத்ரா 



நட்சத்திரங்களில்
சில நட்சத்திரங்கள் மட்டும் திரு
என்ற அடைமொழியோடு விளங்கும் .

காரணம் அந்த நட்சத்திரத்தில்தான் இறைவன்
மானிட உயிர்களை கடைதேற்றுவத்ர்காக
திருஅவதாரம் செய்துள்ளான்.

திருவோணம், திருவாதிரை,
திருக்கார்த்திகை,திருவாடிப்பூரம் போன்றவை

அப்படி திரு ஆதிரை நட்சத்திரத்தில்தான் சிவபெருமான்
தோன்றினான்.

அதே நட்சத்திரத்தில்தான்
அகத்தியப்பெருமானும் தோன்றினான்.


சிவனைப்போல் பெருமை பெற்றவர்
அகத்தியர். அவர் பெருமை அளவிடமுடியாதது.

சிவபெருமானே பார்வதியுடன்நடந்த  திருமணத்தின்போது
சமநிலை இழந்த இந்த உலகை சமன்படுத்த
பணித்தார் .

இராமாவதாரத்தில் இராமருக்கு
இராவணாதிகளை வெல்லும் பொருட்டு
ஆதித்ய இருதயம் என்னும் துதியை உபதேசித்தார்

இன்னும் எத்தனையோ !
அவர் புகழ் நீண்டுகொண்டே போகும்.

ஆடல்வல்லான் ,இந்த அண்ட 
சராசரங்களையும் ஆட்டுவிக்க வல்லான்
நம்முடைய இதயத்தில் உள்ள
அம்பலத்திலும் ஆடிக்கொண்டு
நம்மை இயக்கும் பிரான்



அவன் புகழை கொண்டாடி ,
அவனைப் போற்றி அனைத்து
 நலன்களையும் பெறுவோம்

அன்பு வடிவாகிய சிவனை,
ஆனந்தம்  அளிக்கும் சிவனை,,
ஆத்மாவை கடைதேற்றும் சிவனை,
பக்தியோடு பணிந்து மகிழ்வோம்

தன்னில் பாதியை
அம்பிகைக்கு அளித்தவன்.
தும்பிக்கையானை  நமக்கு தந்தவன்.

தேவயாநியுடனும் வல்லியுடனும்
காட்சி தந்தருளும் ஆறுமுகனை
தன் நெற்றிக்கண்ணிலிருந்து
தோற்றுவித்தவன் ,

இராம நாமத்தின் பெருமையை
பார்வதிக்கு உபதேசித்தவன் ஆகிய சிவனை,
மங்களங்களை அள்ளி தரும் மங்கள மூர்த்தியை,
மகாதேவனை மனமுருகி வேண்டுவோம்.
மாளாப் பிறவியை அறுக்கும் பொருட்டு.


ஓம்  நம சிவாய !

6 comments:

  1. So many thanks...Ohm Namasivaya....

    ReplyDelete
    Replies
    1. நமசிவாய வாழ்க
      நாதன் தாள் வாழ்க
      இமைப்பொழுதும்
      என் நெஞ்சில்
      நீங்காதான் தாள் வாழ்க

      Delete
  2. ஓம் நம சிவாய !

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete