Thursday, December 12, 2013

பயத்திற்கு காரணம்

பயத்திற்கு காரணம் ?





பயத்திற்கு
காரணம் பற்றுதான்

உடல்மீதும் உடைமைகள் மீதும்
வைக்கும் பற்றுதான் பயத்திற்கு காரணம்

உடல் அழிந்தால் உயிர் போய்விடும்,
என்று உடல் மீது வைக்கும் பற்றுதான்
பெரும் பயத்தை உண்டாக்குகிறது

ஏனென்றால் உயிர் போய்விடும்
இந்த உடலால் எந்த பயனுமில்லை.
எதையும் செய்யமுடியாது.
எதையும் அனுபவிக்கமுடியாது

பொருட்கள் மீது வைக்கும் பற்றும்
ஒரு காரணம்  ஏனென்றால் அதை
யாராவது நம்மிடமிருந்து தட்டி
பறித்து சென்றுவிட்டால்
அதை தாங்கும் சக்தி நமக்கு இல்லை.

பற்றில்லாதவன்
ஒன்று கிடைத்தாலும், மகிழ்வதில்லை   .
இழந்தாலும்  கலங்குவதில்லை .

அந்த  நிலையை  நாம்  அடைய
 பற்றில்லாத  பகவான்  மீது பற்று  வைத்தால்
 மாறாத  இன்பம்  அடையலாம் .

ஆனால்  அவன்  மீதும்
ஆசையை   துறக்க  வேண்டும்
என்று  திருமூலர்  தெரிவிக்கின்றார் .

ஏனென்றால் இறைவனை
காணும்  போது  ஏற்ப்படும்  ஆனந்தம்
மின்னல்  போல்  ஒரு கண  நேரத்தில்
தோன்றி  மறைந்துவிடும்

ஆனால்  அந்த  ஆனந்தம்  மீண்டும்
எப்போது  கிடைக்கும்  என்று  நம்  மனம்
அதையே  நினைத்து  ஏங்க  நேரிடும் .

இந்த நிலையை  பக்தி  மீரா  ,
ஆண்டாள்




,ஊத்துக்காடு வேங்கடகவி,



அன்னமாச்சார்யா
தியாகராஜர், ,புரந்தரதாசர்  போன்ற
எண்ணற்ற மகான்களின்
வாழ்க்கை  சரிதங்களிருந்து
உணர்ந்து  கொள்ளலாம்

இறைவனை தரிசித்து
அதனால் பெற்ற ஆனந்தம் தன்னை
அவர்கள் பாடிய கவிதைகளிலிருந்து
ஒருவழியாக ஊகித்துக்கொள்ளலாம்  

3 comments:

  1. அதே... அதே..

    நன்றி... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  2. பற்றில்லாதவன் ஒன்று கிடைத்தாலும், மகிழ்வதில்லை. இழந்தாலும் கலங்குவதில்லை.

    அந்த நிலையை நாம் அடைய பற்றில்லாத பகவான் மீது பற்று வைத்தால் மாறாத இன்பம் அடையலாம்.//

    டக்கென பற்று கொள்ளவைத்து, மனதில் பற்றிக்கொள்ள வைக்கும் அருமையான எழுத்துக்கள். பாராட்டுக்கள் அண்ணா.

    ReplyDelete