Sunday, November 10, 2013

குருவாயூர் , குருவாயூரப்பன் தத்துவம்

குருவாயூர் ,
குருவாயூரப்பன்  தத்துவம் 


அப்பன் யார்?

அப்பன் என்றால்
இறைவன்தான்
அப்பனும் அவன்தான்
அம்மையும் அவன்தான்
அதனால் அவன் அம்மையப்பன்
என்றழைக்கப்படுகிறான்.





அப்பன் என்றால்
குருவாயூரப்பன் தான்

ஏன் அவனுக்கு குருவாயூரப்பன்
என்று பெயர் வந்தது?

அந்த கோயிலில் நின்ற
கோலத்தில் அருள்பவன்
கண்ணன் என்னும்
கருந்தெய்வம்

குழந்தையாய்
வேணுகோபாலனாய்
காட்சி தருகிறான்.

கண்ணன் அவதாரம்
நிறைவு பெற்றதும்  
த்வாரகை கடலில் மூழ்கியது.

அங்கு பூஜிக்கப்பட்ட கண்ணனின்
வடிவம் கடலில் மூழ்காமல்
மிதந்து கொண்டிருந்தது.

அதை பார்த்த குருபகவானும்
வாயு பகவானும் இயற்கை எழில் சூழ்ந்த
கேரள  கடற்கரையின்
அழகைக் கண்டு அங்கு
பிரதிஷ்டை செய்தனர்.

குருவும் வாயுவும் சேர்ந்து கண்ணனை
பிரதிஷ்டை செய்தமையால் அந்த தலம்
குருவாயூர் என மருவியது.

எல்லா உயிர்க்கும் அப்பனாய்
விளங்கும் கண்ணனை
ஊர் பெயரை இணைத்து
குருவாயூரப்பன் என்று அன்போடு
பக்தர்களால் வணங்கப்படுகிறான்.

எவ்வளவோ பேர்கள் இருக்க
குருவும் வாயுவும் மட்டும் சேர்ந்து
இந்த கோயிலை உண்டாக்கவேண்டும்?

இறைவனை அறிய, அடைய
அவனை பற்றிய அறிவு,
ஞானம் வேண்டும்.

குருவின் அருளின்றி
இறைவன் அருள் கிட்டாது.

இரண்டையும் அடைய ஒரு உயிருக்கு
மனம், உடல் வேண்டும்.
அந்த இரண்டும் இயங்க வாயு
என்னும் பிராணன் வேண்டும்.

இந்த இரண்டு பேரும்  இருந்தால்தான்
நம்மை படைத்த அப்பனாகிய
கண்ணனை நாம் அறியமுடியும்.

குருவாயூர் ,குருவாயூரப்பன்  தத்துவம் இதுதான்

7 comments:

  1. அருமையான பதிவு + அழகான படம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.


    [நேற்று மதியம் வெளியிடப்பட்டுள்ள என் தொடரின் பகுதி-78க்கு இதுவரை அண்ணா வராமலேயே உள்ளது, எனக்கும் என் கிளிக்கும் வருத்தம் அளிக்குது.]

    ReplyDelete
  2. கடமைகள் இவனைக்
    கட்டிப் போட்டுள்ளது
    தலைவலியோ இவன்
    மண்டையை டாங் டாங்
    என்று உடைத்துக்கொண்டிருக்கிறது.
    இன்னும் வலி குறையவில்லை
    நேரம் இல்லை.

    forecast- எப்படியாவது இன்று இரவு உங்கள் கிளிக்கு
    பதில் அளிக்கப்படும்.என்று தெரிவிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. ;) சந்தோஷம். நன்றி.

      //கடமைகள் இவனைக் கட்டிப் போட்டுள்ளது //

      கடமையைச்செய் - பலனை எதிர்பார்க்காதே - பகவத் கீதை

      எனக்குப்பின்னூட்டம் கொடுப்பதும் தங்கள் கடமையன்றோ ! ;)

      //தலைவலியோ இவன் மண்டையை டாங் டாங் என்று உடைத்துக்கொண்டிருக்கிறது.//

      அடடா, தலை ஜாக்கிரதை ...... அண்ணா.

      அமிர்தாஞ்சன் தடவிவிடச்சொல்லி ஓர் மெல்லிய துண்டினால் இறுக்கமாகக் கட்டுங்கோ.

      [இறுக்கமாகக் கட்ட வேண்டியது தலையைத் துண்டால் மட்டுமே - அமிர்தாஞ்சன் தடவி விட்டவர்களை அல்ல ;))))) ]

      அன்புடன் VGK

      Delete
    2. இவன் எதையும்
      தடவுவது கிடையாது
      தலைவலிக்காக.

      அது எப்படி வந்தததோ
      அப்படியே போய்விடும் என்பதை
      இவன் அறிவான்.


      இப்போது அது போய்விட்டது.

      உங்களுக்கு கமெண்ட் வரும்
      இன்று இரவுக்குள்

      Delete
    3. தலைவலி என்ற சொல்லில்தான்
      தலை இருக்கிறது.

      அதே சொல்லில்தான் வலை (web) இருக்கிறது.
      அதே சொல்லில்தான் வலி என்ற சொல்லும் இருக்கிறது.

      வலி என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு
      ஒன்று வலி என்னும் உணர்ச்சி.

      மற்றொன்று அந்த வலியை எதிர்கொள்ளக்கூடிய வலி என்னும் வலிமை என்னும் திறம்

      எல்லாம் ஒரே இடத்தில்தான் ஒன்றாக இருக்கின்றன.

      நம்முடைய மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு ஏற்ப
      அவைகள் வெளிதொன்றுகின்றன

      எல்லாம் மாயை
      மாயை அகன்றால் எதுவும் நம்மை பாதிக்காது.

      அதிலிருந்து விடுபடத்தான் ஒவ்வொரு ஜீவனும்
      முயற்சி செய்கின்றன

      ஒரு சில தெரிந்து செய்கின்றன

      மற்ற அனைத்து ஜீவன்களும் அதை அறியா வண்ணம்
      அவைகளை படைத்த இறைவன் ஆட்டிப் படைக்கின்றான். அவைகளின் ஆட்டம் ஓயும் வரை.

      Delete
  3. குருவாயூர் ,குருவாயூரப்பன் தத்துவம்
    அருமையான விளக்கம்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete