Friday, September 20, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(3)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(3)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(3)




கைகேயியை கட்டிய
கணவரும் புரிந்துகொள்ளவில்லை

பெற்ற மகனும்
புரிந்துகொள்ளவில்லை

அவள் நாட்டின் மக்களும்
புரிந்துகொள்ளவில்லை

அவளை கண்டபடி
சொல்லம்புகளால் துளைத்தார்கள்.

அவள் பொறுமை காத்தாள்
ஏனென்றால் அவளை முக்கியமாக
இரண்டு பேர்கள் அவள்
நோக்கத்தை புரிந்துகொண்டாதனால்.

யார் அந்த இரண்டு நபர்கள்?

ஒன்று இராமனின் தாய் கெளசல்யாதேவி
மற்றொரு நபர் நம் கதாநாயகன் இராமபிரான்.

அவள் உத்தரவைக் கேட்டதும் இராமபிரான்.மிகவும்
மகிழ்ச்சியடைந்தான்.

தாயே  நீங்கள் கட்டளையிட்டால்
நான் உங்கள் உத்தரவை மீறுவேனா என்று கேட்டான்.

ஒரு நாட்டில் யார் எவ்வளவு
அதிகாரம் பெற்றவர்களாய் இருந்தாலும்
உத்தரவுகள் அதற்க்கென்று உரிய அதிகாரிகளால்தான் பிறப்பிக்கப்படவேண்டும் என்று பல
ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே வரைமுறை
 உள்ளதை புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைய ஜனநாயகத்தில்
முதலமைச்சர் சர்வ அதிகாரம் பெற்றிருந்தாலும்
ஆணைகள் ஆளுநர் பெயரிலேயே வெளியிடப்படுவதும்
மைய்ய அரசில்  பிரதம மந்திரி சர்வ வல்லமை படைத்தவராயினும் ஜானாதிபதியின் பெயரில் ஆணைகள் வெளியிடப்படுவதையும்
கருத்தில் கொள்க.

கௌசல்யா தேவியும்
கைகேயியின் கருத்துக்கு மறுப்பு சொல்லவில்லை.
மாறாக வனத்தில் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும்
என்று இராமனுக்கு அறிவுரைகள் சொல்லி அனுப்புகிறாள்.

கைகேயியை முதலில் உணர்ச்சி வசப்பட்டு
கோபத்தில் பேசிய பரதனும் தன தாயையும்
மிஞ்சிவிட்டான். அவன் நடத்தையினால்.



அவன் தன்  அண்ணன்தான் அரசாளவேண்டும்,
அவன் தலைமையில்தான் பணியாற்றவேண்டும்
என்ற உறுதியில் சிறிதும் மாறாமல் இருந்தமையினால்
அரசை  பதவியை ஏற்க   மறுத்து,
இராமனிடம் சென்று பதவியை ஏற்றுகொள்ள
வற்புறுத்த கானகம் செல்கிறான்.





ஏனென்றால் ஒருதரம் பதவியில் அமர்ந்துவிட்டால்
மீண்டும் அந்த பதவி மீது மோகம் ஏற்ப்பட்டு
அண்ணன் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும்போது
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துரியோதனன்
இழைத்த அநீதிபோல் பதவியை தர மறுக்கும்
எண்ணம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்தே
அவன் அவ்வாறே செய்திருப்பான் போலும்

(இன்னும் வரும்)

pic. courtesy-google.

5 comments:

  1. // பதவி மீது மோகம் //

    இருக்கலாம் என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. உண்மை அதுதான்.
      ஏனென்றால் அது கலியுகம் அல்ல

      Delete
  2. தொடர் அருமையாகச் செல்கிறது. பாராட்டுக்கள்.

    //ஒருதரம் பதவியில் அமர்ந்துவிட்டால் மீண்டும் அந்த பதவி மீது மோகம் ஏற்ப்பட்டு அண்ணன் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும்போது மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துரியோதனன் இழைத்த அநீதிபோல் பதவியை தர மறுக்கும் எண்ணம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்தே அவன் அவ்வாறே செய்திருப்பான் போலும்//

    மாறுபட்ட சிந்தனைகள். இருப்பினும் அதுபோலவும் பரதன் நினைத்திருக்கலாமோ என எண்ண வைக்கிறது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ஒரு ஆச்சரியம் பாருங்கள்
    ராமாயணம் படத்திற்கு
    உருது மொழியில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete