Saturday, September 14, 2013

அகந்தையும் துணி துவைக்கும் கல்லும் (பகுதி-2)

அகந்தையும் 
துணி துவைக்கும் கல்லும் (பகுதி-2)





இறைவனிடமிருந்து பிரிந்து வந்த
ஒரு அணு ஜீவாத்மா என அழைக்கப்படும்

அது பரமாத்மாவிடமிருந்து
பிரிந்து வந்துவிட்டால் அது தான்
பரமாத்மாவிடம் இருந்து வந்தோம்
என்ற ஞானம் அதற்க்கு அகன்று
இந்த சம்சாரத்தில்
கிடந்து உழல்வேண்டி நேரிடும்.

அதன் பிறகு கோடிக்கணக்கான
பிறவிகளை எடுக்க நேரிடும்.

ஒவ்வொரு பிறவியை எடுத்து
பல அனுபவங்களை அடைந்து
ஒரு கால கட்டத்தில் தான் யார் ,
தான்ஏன் இவ்வாறு அல்லல்படுகிறோம் என்று
சிந்திக்கும்போதுதான் இந்த சுழற்சியிலிருந்து
விடுபட வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கும்.

அப்போதுகூட அந்த சிந்தனையை தொடரவிடாமல்
கடந்த பிறவிகளின் அனுபவங்கள் முட்டுக்கட்டை போடும்.

இந்த சிந்தனை தொடங்கியபின்னரும்
ஒரு ஜீவன் பல படிகளைக் கடக்க வேண்டியுள்ளது.

அதிலும் உண்மை வழியை நாடுவதைவிட
தவறான திசை திருப்பி மீண்டும்
குழியில் தள்ளும் வாய்ப்புகளே அதிகம்.

இதைத்தான் இதிஹாச புராணங்களும்,
ஞானிகளின் சரிதங்களும் நமக்கு புலப்படுத்துகின்றன.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
ஒவ்வொருவிதமான அணுகுமுறைகள்.
ஒவ்வொருவிதமான  அனுபவங்கள்.
ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்கள்

,ஆனால் முடிவில் ஒவ்வொருவரும்
அடையும் இறைவனோடு  சேரும்
ஆனந்தம் மட்டும் ஒன்றுதான்   என்பதை
அதை  அனுபவித்தவர்களுக்கே  தெரியும் .

அந்த அனுபவத்தை  அவர்கள்
எவ்வளவு  விதமாக  விவரித்தாலும்
அதை  மற்றவர்கள்  உணரமுடிவதில்லை .

எப்படி  தேனின்  சுவையை  எப்படி  விவரித்தாலும்
அதை  சுவைக்கும்வரை அதன் இனிமையை
உணரமுடியாததைப்போல் இறைவனை
உணர்ந்து அவனோடு கலப்பதும்.

ஆன்மீக நாட்டம் ஏற்ப்பட்ட பிறகும்
ஒரு ஜீவன் கணக்கற்ற பிறவிகளை எடுக்க நேரிடும்.

ஏனென்றால் ஆன்மீக நாட்டமின்றி
வாழ்ந்த பிறவிகளில் ஏற்பட்ட
தேவையற்ற அனுபவங்களின் பதிவுகளை நீக்குவதற்கும்,
செய்த வினைகளின் பயன்களை அனுபவித்து தீர்ப்பதற்கும் ,
ஆன்மீக அனுபவங்களை பெற்று ஆனந்தம்  பெறுவதற்கும்
 பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும்.

அப்படி எடுக்கின்ற பிறவிகளில்
ஒன்றுதான் கல்லாயிருக்கும் பிறவி.
(இன்னும் வரும்) 

3 comments:

  1. //எப்படி தேனின் சுவையை எப்படி விவரித்தாலும் அதை சுவைக்கும்வரை அதன் இனிமையை உணரமுடியாததைப்போல் இறைவனை
    உணர்ந்து அவனோடு கலப்பதும்.//

    ஆஹா! படிக்க என்னவோ தேனாகத்தான் இனிக்கிறது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அழைக்கிறார். பகுதி-50 க்கு, ஓடியாங்கோ... ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. என்னே உங்கள் அன்பு!
      இரவு 11.21க்கு கண் விழித்து கருத்துரை(V) வழங்கும்
      (G) குணவானே (K) கண்ணா நீ வாழி. நினைத்தாலே இனிக்கிறது. உங்கள் கடமையுணர்வு.

      Delete
    2. தூக்கம் ஒரு பிரச்னையே அல்ல
      .
      தூங்காவிடில் ஒரு குடியும்
      முழுகப் போவதில்லை.

      காரில் வரும்போது
      தூங்கியிருக்கலாம்.

      எனக்கு தெரிந்து நிறைய பேர் தங்கள்
      தூக்கத்தை பயணங்களிலே முடித்துக்கொள்கிறார்கள்

      ஆனால் நாம் பயணம் செய்யும்
      வண்டி ஓட்டுனர்கள் மட்டும் தூங்கிவிடக்கூடாது.
      அவர் தூங்கினால் அந்த வண்டியில்
      பயணிப்பவர்கள் அனைவரும்
      மீளா தூக்கத்தில் ஆளாக நேரிடும்.

      குடும்பத்தில் உள்ளவர்கள்
      மீளா துக்கத்தில் ஆழ நேரிடும்.

      அல்லது பகலில் ஒரு குட்டி தூக்கம்
      போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

      இந்த உடல் அதற்க்கு தேவையான
      தூக்கத்தை அதுவே வரவழைத்துக்கொள்ளும்.
      உங்கள் அனுமதியில்லாமலேயே

      தூக்கம் வரவில்லை அல்லது
      தூங்கவில்லை என்று
      தொடர்ந்துசிந்திப்பதால்தான்.
      அசதி ஏற்படுகிறது
      என்பதே உண்மை.

      Delete