Sunday, August 18, 2013

நம்மை பார்த்து பொறாமைப்படுபவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி? ?

நம்மை  பார்த்து  
பொறாமைப்படுபவர்களிடமிருந்து
நம்மை காத்துக்கொள்வது எப்படி? ? 

திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேள்வி

ஆம் கொடுக்கின்ற எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு 
இன்னும் இன்னும் என கேட்கும் "அக்னியை"விட மோசம் 
"பொறாமை தீ:
இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லவும்...அதாவது 
நம்மை பார்த்து பொறாமை படுபவர்களிடமிருந்து
தப்பிக்க...வழி சொல்லவும் 

பொறாமைப்படுபவர்களைப்  
பார்த்து மகிழுங்கள் (மனதில் மட்டும்)
அதை வெளிக்காட்டாதீர்கள்.

அவர்களை விட நீங்கள் மேம்பட்டு நிற்கிறீர்கள்
என்பதை உணர்ந்து கொள்ளவும்.

நீங்கள் அடைந்த நிலையை
அவர்கள் அடையமுடியவில்லையே
என்று மனதிற்குள் வெதும்பட்டும் .

அதன் வெளிப்பாடுதான்
அவர்களின் செயல்பாடுகள்,
பேச்சுகள் , தடங்கல்கள்.

அதைப்பற்றி எல்லாம்
கவலைப்படாதீர்கள்.

ஒரு மின் விளக்கில் உள்ள
உலோகத் திரியில் ஏற்ப்படும்
மின் தடையினைப்  பொருத்துதான்
அதன் ஒளிரும் தன்மை அதிகமாவதைபோல
உங்கள் செயல்பாடுகளும் பிரகாசிக்கும்.

 தடைகளை கண்டு அஞ்சாதீர்கள்.

பொறாமைக்காரர்களிடம் போராடி 
உங்கள்  சக்தியை வீணாக்காதீர்கள். 

அவர்கள் கடினமான ஓட்டின் கீழே 
ஒளிந்துகொள்ளும் ஆமை போன்றவர்கள்.
 உங்களை நேரிடையாக தாக்கமாட்டார்கள்..

அவர்களால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது
நீங்கள் எச்சரிக்கையால் இருந்தால்.

அவர்களிடம் நேரடியாக போராடாதீர்கள்.
உங்களின் நோக்கத்தில் மட்டும்
கவனம் செலுத்துங்கள்.

 நங்கூரம் பாய்ச்சப்பட்ட கப்பல்
 புயல் காற்றினாலும் ஒன்றும் ஆகாது
என்பதை புரிந்துகொள்ளுங்க.

முகத்தில் புன்னகையோடு அவர்களை எதிர்கொள்ளுங்கள்
அதே நேரத்தில் உங்கள் இலக்கை அடைவதில் முழு கவனமும் இருக்கட்டும்.ரகசியமாக

பொறாமை என்பது ஒரு அழுக்காறு.
அந்த ஆறு எதற்கும் பயனற்றுபோவதுபோல்
அந்த குணமுடையவர்கள் வாழ்க்கையும் நாற்றமடித்து
அந்த சாக்கடையிலே அவர்கள் மூழ்கி ஒருநாள் காணாமல் போய்விடுவார்கள். 

8 comments:

  1. அய்யாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்..இந்த சாதாரணமானவனை மதித்து
    ஒரு கட்டுரையே எழுதி விட்டீர்கள்..எப்படி நன்றி சொல்வது??
    நான் வெளிப்படையாக சொல்லி விட்டேன்..பலர் மனசுக்குள் வைத்து
    குமுறுகிறார்கள்...அவர்களுக்கும் இது பயன் படும்...மிக்க நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அனைவரின்
      உள்ளிருக்கும் வஸ்து ஒன்றுதான்

      நம் மனம்தான் உயர்வு
      தாழ்வு கற்பிக்கிறது.

      அனுபவங்கள்தான் நமக்கு
      பாடம் புகட்டும் ஆசிரியர்கள்.

      அதை கற்றுக்கொள்வதும்
      கொள்ளாமல் விடுவதும்
      அவரவர் சௌகர்யம்.

      இவன் உணர்ந்ததை
      உங்களுக்கு சொல்கிறான்.

      உங்களிடம் உள்ள நல்லவைகளை
      இவன் ஏற்றுக்கொள்கிறான்.

      அதுதான் வாழ்வை
      மேம்படுத்திக்கொள்ளும் வழி

      Delete
  2. திரு என் ஆர் ஜெயராமன் தன்னுடைய வலைப்பதிவில் இந்த கட்டுரையை வெளியிட்டமைhttp://santhipriyaspages.blogspot.in/2013_08_01_archive.htmlக்கு நன்றி.

    ReplyDelete
  3. குறளின் குரலாக விரைவில் ஒரு பதிவு வெளிவரும்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. குறளாசான் வள்ளுவன்
      சொல்லாத கருத்து என்று
      ஏதேனும் உண்டோ இவ்வுலகில்

      திண்டுகல்லில் பதிக்கப்படும்
      எழுத்துக்கள் காலமெல்லாம்
      நிலைத்து நிற்கப் போகிறது.

      Delete
  4. அருமையான கட்டுரை. எப்படித்தான் எழுதினீர்களோ? எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது, உங்கள் மேல். ;)))))

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான்உங்கள் மேல்பொறாமையாக உள்ளது,

      Delete
    2. பதிவு கிடக்கட்டும்.

      முதலில் உங்கள் ஜன்மாவில் உள்ள
      கடந்த கால பதிவுகளை நீக்க முயலுங்கள்.

      அதை செய்யாமல் தினமும் செய்ததையே
      செய்து கொண்டு பேசியதையே பேசிக்கொண்டு.
      தனக்குத்தான் எல்லாம் தெரியும்
      என்று அகந்தை கொண்டு வாழ்நாளை,
      அனைவரின் முன்பும் நடித்து கொண்டு
      வாழ்நாளை வீணாக்கும்
      இந்த மடையன் போல்
      நீங்களும் இருக்காதீர்கள்.

      ஜபம் செய்யும்போது பேசக்கூடாது
      வேறதையும் பற்றி நினைக்க கூடாது
      அடுக்களையிலிருந்து வரும் வாசனைகளை மறந்து
      ,மனதில் உள்ள கடந்த ஜன்ம வாசனைகள்
      அனைத்தையும் காயத்தீயில்
      (காயம் என்றால் உடம்பு-தீ என்றால் ஞ்னாக்னி)
      இட்டு பொசுக்கவேண்டும்.
      அப்போதுதான் ஆன்மா
      சுத்த தங்கமாக ஒளிவிடும்.

      Delete