Monday, August 12, 2013

நான் யார்?

நான் யார்? 

நான் எப்போதும்
உறங்குவதும் கிடையாது

அதனால்  விழிக்கும்
வேலையும் அதற்கில்லை

நம்முடைய மனம் தான்
எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறது.

உன்னுள்ளே என்னுளே ஏன் அனைத்துமுள்ளே
இருக்கின்ற  அந்த நான் எல்லாவற்றையும்
 நாம் திரைப்படம் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறது

திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கும்
 பாத்திரங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்போ
அதுதான் நானுக்கும் இந்த மனம் நமக்கு
போட்டு காட்டும் இவ்வுலக வாழ்வு
என்னும் திரைப்படத்திற்கும்.

ஆனால்  நாம் அறியாமையினால்தான்
நிழல்களுடன் பந்தம் ஏற்படுத்திக்கொண்டு
உணர்ச்சிகளுக்கு  அடிமையாய்
எப்போது துன்பங்களையும் இன்பங்களையும்
 மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த உண்மை தெரிந்தால்தான்
உண்மையான நான் யார் என்பதை
 நாம் உணர முடியும் ,.

 மாறாத இன்பம் அனுபவிக்கமுடியும்.

அதற்க்கு சாதனை செய்ய வேண்டும்.
சோதனைகளை, வேதனைகளை
பொறுத்துக்கொள்ளவேண்டும்.

மனதில் தோன்றும் ஒவ்வொரு
எண்ணத்தையும் கண்காணிக்கவேண்டும்
ஆனால் நம் என செய்கிறோம்?
எப்போதும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்,
நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்
எண்ணி எண்ணியே ஆயுளை ஒழித்து விடுகிறோம்.

அகந்தையின்றி இருக்கவேண்டும்.
கனவுபோல் எண்ணிப் பழகவேண்டும்.

முடியுமா? 

2 comments:

  1. அடடா ஐந்தாவது பதிவா?

    போச்சு, போச்சு, என் தூக்கம் போச்சு.

    நான் யார்? என்றே இப்போது எனக்குத் தெரியவில்லை.

    அவ்வளவு கோஜா வாங்குது.

    //ஆனால் நாம் அறியாமையினால்தான் நிழல்களுடன் பந்தம் ஏற்படுத்திக்கொண்டு உணர்ச்சிகளுக்கு அடிமையாய் எப்போதும் துன்பங்களையும் இன்பங்களையும் மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். //

    அதே அதே ..... சூப்பராச்சொல்லிட்டீங்கோ அண்ணா.

    மாயை மீது தான் மயக்கம் ஏற்படுகிறது. விட்டு விலகிச் செல்ல முயன்றாலும் முடியலையே ! [அதாவது வலைப்பதிவு என்ற மாயையிலிருந்து ;))))) ]

    ReplyDelete
    Replies
    1. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்
      மாயையை மாலவனின் துணை கொண்டுதான்
      மாயக்கவேண்டும் .

      Delete