Friday, August 9, 2013

வேமன்னாவின் சொல்லமுதம்(3)

வேமன்னாவின் சொல்லமுதம்(3)

வேமன்னாவின் சொல்லமுதம்  



உன்னைச் சுற்றிப்பார். எங்கே எதில், எதால் தப்பு கண்டுபிடிக்கலாம் என்று அலைவோரையே தான் பார்க்கிறோம். தப்பில்லாதவன் யாரேனும் ஒருவன் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகிறவன் தன்னை ஏன் எண்ணிப்பார்க்கவில்லை. என்ன வேடிக்கை!


நீங்கள் அத்தனை மனிதர்களும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை மனதைப் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற பாடலை மறக்கமுடியாது

தப்பு   எது?
சரி எது ?
யார் முடிவு செய்வது ?

சில விஷயங்களில் சாத்திரங்களின்
முடிவுக்கு கட்டுப்படவேண்டும்.

ஒரு சில நிகழ்வுகளில் தப்பாகத் தெரிவது
வேறொரு நிகழ்வில் தப்பாகத் தெரிவதில்லை.

தனி மனிதன் கொலை செய்தால் அது குற்றம்.
அதுவே நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்து
நிறைவேற்றினால் தண்டனை .
அதுவே போரில் நிறைவேற்றினால் வீரம்.

ஒரு சிறுவனின் தந்தை இறந்துவிட்டார்.
அவனுக்கு உண்மையை சொன்னால்
அவனால் புரிந்துகொள்ளமுடியாது.
அப்பா வெளியூர் சென்றிருக்கிறார்,
வந்துவிடுவார் என்று பொய் சொல்லத்தான் வேண்டும்.
அவனுக்கு புரிந்துகொள்ளும் வயது வரும்போது
புரிந்துகொள்வான். இந்த இடத்தில்
 பொய் சொல்லுவது தப்பில்லை.

இதுபோல் வாழ்வில் ஏராளமான
நிகழ்வுகளை சந்தித்துதான் ஆகவேண்டும்

ஆனால் இன்று பல பேர்
தப்பை செய்துவிட்டு பிறர் மீது அந்த பழியை
போடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்
பலர் சாமர்த்தியமாக அதை மறைத்துவிடுகிறார்கள்.

சிலர்   தங்கள் தப்பை மறைப்பதற்காக
காணும் அனைவரின் மீதும்
தப்பைசுமத்திக் கொண்டிருக்கிறார்கள்

தப்பை செய்யாத ஒருவனுக்குதான் மற்றவனை
திருத்த அருகதை  உண்டு.

இன்று எடுத்துக்காட்டாக பெற்றோர்களை எடுத்துக்கொண்டால் ,புகை பிடித்தல், மது அருந்துதல்  பொய் பேசுதல், ஒழுங்கீனமாக நடத்தல், ஒழுங்கில்லாமல் செயல்படுதல் போன்ற பல தப்புகளை செய்துகொண்டே தங்கள் குழந்தைகளையும் அது போன்ற குற்றங்களை செய்யாதே என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?

இதுபோல்தான் பொதுவாழ்வில் நேர்மையைப் பற்றி
பேசும் தலைவர்களின் லட்சணமும் அப்படியே.


அதனால்தான் இந்த மனித சமூகம்
சீர்கெட்டுப்போய்விட்டது

எனவே தனிஒவ்வொரு  மனிதர்கள் திருந்தட்டும்
நாடும் நகரமும் திருந்தும்.

பிறர் மீது குறை காண்பவன் முதலில்
தன் மீதுள்ள குறைகளை களையட்டும்
என்றாள்  அன்னை சாரதாதேவி  .

மூலம் நன்றி -http://amrithavarshini.proboards.com/thread/51/vemana-3

2 comments:

  1. அருமையான உதாரணங்களுடன் அற்புதமான படைப்பு.

    யார் மீது குறை கண்டாலும் உங்கள் படைப்புக்களிலும் பதிவுகளிலும் நீங்கள் சொல்லும் அழகான விஷயங்களிலும் ஒருபயலாலும் குறை கண்டு பிடிக்க முடியாதூஊஊஊ.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?குறை சொல்லுபவர் சொல்லிவிட்டுபோகட்டும். நாமிருவரும் நிறைகளையே காண முயற்சி செய்வோம்.
      உங்கள் பாராட்டிற்கு நன்றி.

      Delete