Friday, July 12, 2013

ஜகத் குரு

ஜகத் குரு








பலர் கேட்கிறார்கள்
எப்படியப்பா பெரியவாவை
ஜகத் குரு என்று அழைக்கலாம்?

உலகத்து மக்கள் தொகையில்
கணக்கிலே வாராத ஒரு
சமூகத்தின் பிரதிநிதியாக
விளங்கும் துறவிகோலம்
பூண்ட ஒரு மடத்தின் அதிபதி.

பிரம்மம்தான் சத்தியம்
மற்றவைஎல்லாம் வெறும்
தோற்றங்களே என்று
உலகுக்கு உரைத்த ஆதி
சங்கரரின் அடிசுவட்டில் வந்த
ஒரு அவதார புருஷனைப்
பார்த்து கேட்கப்படும் கேள்வி இது

அத்வைத தத்துவத்தை
ஆராய்ந்து உரை எழுதாத மகான்கள்
உண்டோ இந்த உலகில்?

அவர்கள் எழுதிய உரைகளின்
அடிப்படையில் பல்வேறு தத்துவங்கள்
கிளைத்தெழுந்து தோற்றுவிக்கப்பட்ட
மடங்கள் எத்தனை எத்தனை?

தத்துவங்களை மட்டும் ஒரு சிறிய
கூட்டத்திற்கு விளக்கிவிட்டு
குருபூஜை, இறைவனின் பூஜை
என்று ஒரு சிறிய வட்டத்திற்குள்
முடங்கியவர்கள்தான் அனைவரும்.

கயிலையில் கல்லால மரத்தின்
கீழமர்ந்து தத்துவ உபதேசம்
செய்தான் பரமேஸ்வரன்.

ஆனால் காலடியில்பிறந்த
ஆதி சங்கரனையும்
மிஞ்சிவிட்டான் இந்த
காஞ்சி காமகோடி
பீடத்தில் அமர்ந்தவன்.

ஓரடியால் பூவுலகை அளந்த
வாமனனையும் விஞ்சிவிட்டான்
புண்ணிய பாரத்தை தன் காலடியால்
பல முறை அளந்து. இவன்

வழி தவறிப் போன மானிடரை
தன் வழிக்கு கொண்டுவர
பல வழிகளைக் காட்டினான்
தன் கருணை விழியால்
அனைவரையும் கடாஷித்து.

தான் என்னும் அகந்தையை
விட்டதனால் அனைவரையும் தன்
ஆன்மாவாக கண்டவன்
அண்டியவர்கள் யாவரையும்
வாழ்வில் கரையேற்றிவிட்டவன்

தன் அருள் பார்வையாலே
அனைத்தையும்
யாரும் கூறாமலே அறிந்துகொண்டு
அவர்களின் துன்பம் தீர்த்தவன்.

படித்தவ்னாயினும் சரி
படிக்காத பாமரனாயினும்  சரி
வாழ்வில் வளம் கொண்டோரானாலும் சரி
வளமற்று வறுமையில்
வாழ்ந்தோராயினும்  எல்லோரும்
அவனுக்கு ஒன்றே.

துறவிக்கு வேந்தனும்
துரும்பு என்பதை
செயலில் காட்டியவன்

சர்வ சக்தி படைத்த அரசுகள்
செய்யமுடியாத
செயல்களை தன் ஆன்மீக சக்தியால்
தனிமனிதர்களைக்  கொண்டு நிகழ்த்திக்
காட்டிய மனித வடிவில் வந்த
தெய்வம் அவன்.

மதம், மொழி நாடு,
இனம்,கடந்த ஞானி

அஞ்ஞானிகளை
கரை சேர்க்க வந்த தோணி

அவர் புகழ் பாடுவதும் ,
அவர் காட்டிய
வழி நடப்பதுமே
நம் தலையாய பணி.



4 comments:

  1. அட்சரம் லட்சம் பெரும்..அனைத்தும் சத்யம்..அந்த கருணாமூர்த்தியின் கடாக்ஷத்தை பெற்றுவிட்டால்....சாந்தி...சாந்தி...சாந்திதான்.ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர..

    ReplyDelete
  2. ஆதி சங்கரனையும் வாமனனையும் மிஞ்சிய காஞ்சி காமகோடிகளின் சிறப்புகள் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. //படித்தவ்னாயினும் சரி, படிக்காத பாமரனாயினும் சரி, வாழ்வில் வளம் கொண்டோரானாலும் சரி வளமற்று வறுமையில் வாழ்ந்தோராயினும் எல்லோரும் அவருக்கு ஒன்றே.

    துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பதை செயலில் காட்டியவர்//

    அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜகத்குருவுக்கு எந்தன் அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    http://gopu1949.blogspot.in/2013/07/24.html

    ReplyDelete