Tuesday, June 18, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(87)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(87)

ஸ்ரீ ரகுவர!
நகை தவழும் உன் திருமுகத்தைக் காண முடியாத 
என் துயரத்தை யறிந்து நீ என்னைக் காக்கலாகாதா ?









கீர்த்தனை(142)-நகுமோமு கநலேநி-நாசாலி தெலிசி
ராகம்-ஆபேரி(மேள-22)-தாளம்-ஆதி 

அற்புதமான ,ரம்மியமான கீர்த்தனை. 

இந்த கீர்த்தனையை கேட்டு
தலையசைக்காதவர்கள் உண்டா?

இந்த கீர்த்தனையை கேட்டு
உள்ளம் நெகிழாதவர்கள் உண்டா?

இந்த கீர்த்தனையை பாடாத,
இசைக்காத கலைஞர்கள் உண்டா?

ஆனால் எத்தனை பேருக்கு
இந்த கீர்த்தனையின் பொருள் புரியும்?

பொருள் அறிந்து
ரசித்தால் எப்படி இருக்கும்?

நகை தவழும் உன் திருமுகத்தைக் காண முடியாத
என்  துயரத்தை யறிந்து நீ என்னைக் காக்கலாகாதா ?

ஸ்ரீ ரகுவர!
கோவர்தனகிரியைத் தாங்கியவனே!




உனது பரிவாரங்கள் அனைவரும் கிரமமான
உபதேசம் செய்பவர்கள் அல்லரோ!
அவ்விதம் இருக்கமுடியாதே!

பட்சி ராஜனாகிய கருடன் உன் கட்டளைக்கிணங்கி
வேகமாகப் பறந்து வரவில்லையோ?

அல்லது விண்ணிற்கும் பூமிக்கும்
 வெகுதூரம் என்று சாதித்து விட்டானோ?

உலகையாளும் பரமாத்மனே!
நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?

விரோதம் பாராட்டாதே
நான் தாள மாட்டேன்
என்னை ஏற்றுக்கொள்.

இறை தரிசனம் தாமதமாகிய நிலையில்
சுவாமிகளின் உள்ளம் எவ்வாறு துடிக்கின்றது
என்பதற்கு சாட்சி இந்த கீர்த்தனை.

நமக்கும் இறைவனின் தரிசனத்திர்க்காக
ஏங்கி தவிக்கும் உணர்வு உண்டாக
அவனிடமே பிராத்திப்போமாக

4 comments:

  1. பதற வைக்கும்... நல்ல விளக்கம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //பொருள் அறிந்து ரசித்தால் எப்படி இருக்கும்?//

    அண்ணா பதிவுகளுக்கு வருவதே பொருள் அறியத்தானே.

    [பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றெல்லவா சொல்கிறார்கள் ;) ].

    நன்னாயிருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வள்ளுவன் கூறும்
      அந்த பொருள் வேறு
      இந்த பொருள் வேறு

      அவர் குறிப்பிடுவது பொருள்
      இல்லாத வறுமை நிலை
      என்று உங்களுக்கு தெரியும்

      ஸ்வாமிகள் குறிப்பிடுவது உண்மை பொருளான இறைவனை.

      காட்டில் ஆதிவாசிகள்
      சந்தன மரக்கட்டைகளை
      அதன் அருமையறியாது சமைக்க
      அடுப்பெரிக்க பயன்படுத்துவது போல் தான்
      சுவாமிகளின் கீர்த்தனையையும்
      அதன் உண்மை பொருளுணராது
      செவி மடுப்பதும்.

      நன்னாயிருக்கிறதென்ரு
      இந்த மூடனை கன்னா பின்னா
      என்று பாராட்டக்கூடாது.

      அவர் சொன்னதை
      இவன் சொல்லுகிறான்
      அவ்வளவே

      Delete