Monday, April 22, 2013

மதுரையின் ஜோதி


 மதுரையின் ஜோதி 



மிட்டாயி மிட்டாயி
ராம நாம  மிட்டாயி  
எட்டாள் பலம் கொடுக்கும்
பட்டாபிராம மிட்டாயி 

என்ற இந்த பாட்டை பாடியவர் யார்?

உங்களுக்கு தெரியுமா?

அவர்தான் மதுரையின் ஜோதி 
என்று போற்றப்பட்டவரும் 
எப்போதும் இறைவனின் நாம 
ஸ்மரணையிலே மூழ்கி 
ராமகிருஷ்ண பக்தியை
பரப்பிய  மகான் 
ஸ்ரீ நடன கோபால நாயகி ஸ்வாமிகள். 








அவர் 97 ஆண்டுகளுக்கு முன்
வைகுண்ட ஏகாதசி திதியன்று
இறைவனுடன் கலந்துவிட்டது
அவரின் விஷ்ணு பக்திக்கு சான்று.

அவர் தன் தாய் மொழியான
சௌராஷ்டிரா மொழியில் எளிய
பொருள் பொதிந்த பக்தி சுவை ததும்பும்
கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
அதுபோல் தமிழிலும் இயற்றியுள்ளார்.

ஒரு பழைய புத்தக கடையில்
1969 ஆம் ஆண்டு அவரை பற்றி
வெளியிடப்பட்ட ஒரு நூல் கிடைத்தது.

அதை இத்தனை ஆண்டுகளுக்கு
 பிறகு பார்த்தேன்.

அவரை பற்றி அந்த நூலில் உள்ள
சில தகவல்களை வலை நண்பர்களிடம்
பகிர்ந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன்.





2 comments:

  1. பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா...

    எங்களின் முன்னோர் மதுரையின் ஜோதி...

    அடியேனும் 'பட்டு' நூல்காரன்... வாழ்விலும் 'பட்டு பட்டு' நூலாகி (Textile Technology) படித்தவன்...

    ReplyDelete
    Replies
    1. பாடு பட்டால்தான்
      பலன் உண்டு

      துன்பப் பட்டால்தான்
      இன்பம் என்ன
      என்று தெரியவரும்

      மல்பரி இலைகளுக்கு ஆசைப்பட்டு
      பட்டுப்புழு அடையும் இன்னல்களும்
      அதை தொடர்ந்து அதன் மரணத்தை கண்டு
      உலக இன்பங்களுக்கு ஆசைப்பட்டு
      துன்பத்தில் உழலும் மனிதர்கள்
      பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்

      ஆனால் பகட்டுக்காக
      பளபளக்கும் பட்டையே
      நாடுகிறார்கள் மனிதர்கள்.

      அதனால் அவர்கள் துன்பம்
      என்றும் நீங்குவதில்லை

      Delete