Monday, April 22, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (16)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (16)


வரதராஜ பெருமானே!

உன்னை வேண்டி
வந்தடைந்தேன்

உனக்கு நமஸ்காரம்

தேவரும் முனிவரும்
அந்தணரும் உன்னை
சுற்றி சுற்றி வந்து
பிரதட்சிணம் செய்து
சேவிக்கின்றனர்

நீ எழுந்தருளியிருக்கும்
அத்திகிரியே
வைகுந்தம் என்பர்

அதை வர்ணிக்கவும்
இயலாதாம்

தேவரென்னும்
நட்சத்திரங்களுக்கிடையே
நீ சந்திரன்போல்
தேவராஜனாக விளங்குகிறாய்

உன் கருடசேவையின்
வைபவத்தைக் காண
இத்தியாகராஜன் வந்துள்ளேன்.

(கீர்த்தனை-வரதராஜ-(217)-ராகம் ஸ்வரபூஷனி-தாளம்-ரூபகம்)

பிரம்மன் இயற்றிய வேள்வியில் 
ஒளி சுடராய் தோன்றிய பிரான்

ராமானுஜர், திருக்கச்சிநம்பிகள் 
வேதாந்ததேசிகன் போன்ற பல
மகான்களால் கொண்டாடப்பட்ட 
அழகு தெய்வம்

வரங்களை அள்ளி தரும் 
வரதராஜன் என்னும் பெயர் 
பூண்ட தெய்வம். 

கண்களால் பருகி மகிழ 
காட்சி கொடுக்கும் தெய்வம்

பெருந்தேவி நாயகியுடன் 
பேரருளை வாரி 
வழங்கிடும் தெய்வம்

அனைத்து தெய்வங்களும் 
குடிகொண்ட காஞ்சி மாநகரின் 
கண்கண்ட கலியுக வரதன் 
என்று போற்றப்படும் தெய்வம். 



வரதராஜரை கருவறையில்
கண்டு தரிசித்தவர்களுக்கு 
மீண்டும் ஒரு தாயின் கருவறைக்கு 
செல்லும் அவல நிலை இல்லை
என்பது உண்மை. 


2 comments:

  1. உங்கள் கைவண்ணத்தில் வரதராஜ பெருமாளின் தரிசனமும் கிடைத்தது... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      வாய்ப்பு கிடைக்கும்போது
      நேரில் தரிசனம் செய்யுங்கள்

      Delete