Wednesday, April 17, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (12)


தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (12)


தங்கள்மீது குறைகளை வைத்துக்கொண்டு 
இறைவனை நிந்திப்பது தகுமோ? 









உன்னிடம் மாசு மருவு
ஏது ஸ்ரீராமா?

பங்கயக்கண்ணனே!
களங்கங்கள் அனைத்தும்
என்னுடையவே

நம்மிடம் இருக்கும் பொன் மாற்று குறைந்தால்
பொற்கொல்லனைக் கூறி என்ன பயன்?

மகள் பிரசவவேதனையால்  அவதிபட்டால்
மாப்பிள்ளையை நொந்து என்ன பயன்?

ஒரு ஜன்மத்திலும் பாத்திரமறிந்து
தானம் செய்யாமல் ,பூசனை மறந்து ,
தெய்வத்தை வைதால் என்ன பயன்?

என் மனமே என் பக்தியை
சோதித்து கொண்டிருக்கையில்
உன் மீது குற்றம் சொல்லி என்ன பயன்?

(கீர்த்தனம்-மீவல்ல-குணதோஷ 9154)-ராகம் காபி -தாளம்-ஜம்ப)

இந்த கீர்த்தனத்தில் 
இறைவனான ராமபிரான் 
எந்த குறையும் இல்லாதவன்.

அப்படியிருக்க மனிதர்கள் தங்கள்மீது
குறைகளை வைத்துக்கொண்டு 
இறைவனை நிந்திக்கிறார்கள் 
இது தவறு என்று சுட்டி காட்டுகிறார்.

மேலும் தானம் முதலியவை 
உண்மையில் தேவைப்படுபவருக்கே 
செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிடில்
தீய  தீய விளைவுகளைத்தான்  சந்திக்க நேரிடும். 
அதனால் பயன் ஏது இல்லை.

நம்மை படைத்த ஈசனை மறந்து
பூசனை செய்யாமல் பிறரை 
நிந்தித்து வந்தால் பயன் ஏதும் இல்லை. 

மற்றும் பல காரணங்களை பட்டியலிடுகிறார். 
இனியாவது ராம பக்தர்கள் மேற்கண்ட
தவறுகளை களைந்து அவன் திருவடிகளில் 
உண்மையான பக்தி செய்து அவன் 
அருளை பெற முயற்சிக்கவேண்டும். 


2 comments: