Thursday, April 18, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (15(1)



தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (15(1)


























ராம பக்தனுக்கு இருக்க வேண்டிய 
குணங்களை பற்றி சென்ற பதிவில் 
ஸ்வாமிகள் குறிப்பிட்டதை 
பற்றி தெரிந்துகொண்டோம். 
அதன் மீது தன்னுடைய கருத்துக்களை
திரு வை ,கோபாலக்ருஷ்ணன் 
வழங்கியுள்ளார். 


மிக நல்ல அறிவுரைகள் தான்.
வை கோபாலக்ருஷ்ணன் 

//ஆசை நிறைந்த மனத்துடன் 
மனைவி மக்கள் மீது 
சதா மோகம் கொள்ளலாகாது

இல்லற வாழ்வில் 
கிடைக்கும் இன்பங்களே 
சதமென்று எண்ணலாகாது. //

போச்சுடா, ஏற்கனவே நிறைய 
பிரச்சனைகள். இது வேறா, சரி, சரி ;))))).

அவர் கருத்துக்களின் மீது 
எழுந்த சிந்தனைகளே இன்றைய பதிவு 

பிரச்சினைகளை  
கண்டு துவண்டு விடாதீர்கள்.

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள 
தீர்த்த யாத்திரை மட்டும் போனால் போதாது. 

புண்ணிய நதிகளில் 
நீராடினால் மட்டும் போதாது.

விரதங்கள் மட்டும் 
இருந்தால் போதாது. 

அவைகளெல்லாம் தலைவலி
மாத்திரைபோல் 
சிறிது நேரத்திற்குத்தான் உதவும் 

நோயின் மூல காரணத்தை அறிந்து 
அதற்கு மருந்து சாப்பிடவேண்டும்

இந்த உலகில் எத்தனையோ மருந்துகள் 
இருந்தாலும் எல்லா நோய்களையும் 
ஒரே மாத்திரையில் 
தீர்க்கும் மருந்து ஒன்று  உள்ளது. 

பலருக்கும் அது தெரியும் 
ஆனால் அதை யாரும் சாப்பிட
முன் வருவதில்லை.
ஏனென்றால் அதற்க்கு 
பத்தியம் அதிகம். 

ஏதோ வால்மீகி, கம்பர் துளசிதாசர்,
பத்ராசல ராமதாசர், தியாகராஜ ஸ்வாமிகள், 
புரந்தரதாசர், பாப்பா ராமதாசர், 
யோகிராம் சூரத்குமார் போன்ற சிலர் 
அதன் மகிமையை உணர்ந்து  சாப்பிட்டு 
நோயை தீர்த்துக் கொண்டனர். 

மற்றவர்கள் அவ்வப்போது ஏற்படும் 
நோய்களை குணமாக்க மாத்திரைகளை 
சாப்பிட்டுக்கொண்டு 
நிரந்தர நோயாளிகளாக உலகில் 
உலா வந்துகொண்டிருக்கின்றனர்  
இது நிற்கட்டும்.

ஆசை கொண்டுதான் 
மனைவியை அடைகிறோம் 

அவள் மூலம் 
குழந்தைகளை பெறுகிறோம்.

 பிறகு இருவரின் ஆசைகளும் 
குழந்தைகள் மேல் சென்றுவிடுகிறது. 
அப்படியே அது பரந்து விரிந்து 
அன்பாக படருகிறது.

ஆனால் பலர் ஆசை 
என்ற நிலையை 
தாண்டுவதில்லை. 

ஆசையை தாண்ட உதவும் 
தில்லை காளியை நினைப்பதில்லை 
வணங்குவதில்லை

அதனால் அவர்கள் அடைகிறார்கள்
 எல்லையில்லா தொல்லை.

காமத்தால் வந்ததனைத்தும் 
நம்மை கர்மத்தில் ஆழ்த்தி 
நம்மை மீளா நரகத்தில்தான் 
கொண்டு சேர்க்கும்.

காமன் நம்மை அணுகாமல் 
இருக்கவேண்டுமென்றால்
ராமன் திருவடிகளை
பற்றவேண்டும். 
இல்லாவிடில் எமனின் 
கோபத்தை தாங்கமுடியாது. 

எனக்கு இரண்டும் வேண்டும் 
என்று நினைப்பவர் காமாஷி, 
காமகோடி பீட நிவாசினியின் 
தாள்களை உறுதியாக பற்றவேண்டும்.
அப்படி பற்றினால் 
அவள் இரண்டையும் 
தருவாள்

எப்படி?

அவள் காமாஷி.

காமத்தை ஆட்சிபுரிபவள்.
காமத்தை நெறிப்படுத்துபவள் 

ஒரு காலகட்டத்தில் காமத்தினால் 
துன்பங்களை அடைந்து அதிலிருந்து 
விடுபட நினைத்தால் அவளே 
காம அஷி 

அவளே காமத்தை அழித்து 
நல்ல கதி அளிப்பாள். 

உலக இன்பங்களை அளிக்க 
அம்பிகை காத்துகொண்டிருக்கிறாள். 
அதனால்தான் பாரதி அம்பிகையை
சரணடைந்தால் அதிக வரம் 
பெறலாம் என்றான். 
அந்தாதி படிய அபிராமி பட்டரும் 
இதையே தான் அருளியுள்ளார். 

எப்படி இருந்தாலும் 
இந்த உலக இன்பங்கள் 
ஒரு பொன் விலங்குதான்.

விலங்குகளுக்குத்தான் 
விலங்கு மாட்டுவார்கள்.
ஏனென்றால் விலங்குகளுக்கு 
அறிவில்லை. 

ஞானமில்லாத 
மனிதர்களும் விலங்குதான். 


ஞானம் பெற்ற அசுரன் விபீஷணன் 
விபீஷனாழ்வார் ஆகிவிட்டான்

விலங்கான  வானரமோ
வழிபடும் கடவுளாகிவிட்டது

ஆறரிவு படைத்ததாக நினைத்துக்கொண்டு 
பிதற்றி கொண்டு திரியும் மனிதர்களாகிய
 நாமோ விலங்குகளிலும் கீழான  வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்


விலங்கு மாட்டாமல் விலக்கு 
பெறவேண்டுமென்றால் 
ஞானத்தை  பெறவேண்டும் 

ஞானத்தை பெற்றால் விலங்கு 
தானாக கழன்றுவிடும். 

அப்புறம் சுதந்திரம்தான். 
ஆனந்தம்தான். 


அதற்க்கு ஒரே வழி 
இரண்டெழுத்து தான் 
அந்த இரண்டெழுத்து 
ராம நாமம்தான்.


1 comment:

  1. /// நோயின் மூல காரணத்தை அறிந்து அதற்கு மருந்து சாப்பிடவேண்டும்...

    ஞானமில்லாத மனிதர்களும் விலங்குதான்... ///

    விரிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete