Wednesday, April 10, 2013

காஞ்சி மாமுனிவர்


காஞ்சி மாமுனிவர் 




















தண்டங்களை 
கரையேற்ற
தரணிக்கு வந்து
இளம் வயதிலேயே
உலகை துறந்து 
கையில் தண்டத்தை ஏந்தி
மக்களை காத்த 
கலியுக புருஷன்
காஞ்சி மாமுனிவர்  .  

காலடியில் பிறந்து 
கால்நடையாய் பாரதம் 
முழுதும் சுற்றிவந்து 
பரம்பொருளின் 
உண்மைத்தன்மையை 
உலகுக்கு 
எடுத்துரைத்த உத்தமன் 
ஆதி சங்கரனின்
அடியொற்றி 
உலகை காக்க வந்தவர் 
காஞ்சி  மாமுனிவர்   

மாயையின் 
மயக்கத்தில் மயங்கி 
மாக்களாக 
வாழ்ந்து கொண்டிருந்த 
மக்களை தேடி சென்று 
அவர்தம்
மயக்கம் போக்கி 
மனிதர்களாக 
வாழ வழி காட்டிய 
கருணை தெய்வம்
காஞ்சி மாமுனிவர் . 

அன்பும் பண்பும் 
ஒருங்கே இணைந்து 
ஆதி  சிவன்போல் 
அடிபணிந்தோர்
அனைவர் மீதும் 
பரந்தாமன்போல் 
பாசமும் நேசமும் கொண்டு 
பாதுகாத்தவர் 
காஞ்சி மாமுனிவர் 

அவர் புகழை 
எடுத்துரைக்க 
வார்த்தைகள் ஏது?

வில்லால் 
உலகை ஆண்டான் 
அன்று ராமன்

இவரோ 
தன் சொல்லால் 
செயலால் அனைவரின் 
மனதையும் 
கொள்ளை கொண்டு விட்டார் 

சுமையாய் இருந்த 
உடலை அவர் உகுத்தாலும்
என்றும் பசுமையாய் இருக்கும் 
அவர் நினைவுகள் 
அனைவரின் மனதிலும் தங்கி 
தடம் மாறாமல் வழிநடத்தும் 

2 comments:

  1. Replies
    1. நன்றி DD
      திண்டுக்கல் பாசஞ்சரை தவிர எந்த வண்டிகளும்
      சில மாதங்களாக இவன் வலையகத்திற்கு வருவதில்லை
      இருந்தாலும் இந்த மலர் என்றும் விடாது வாடாது மணம் பரப்பிகொண்டிருக்கும்.

      Delete