Wednesday, April 17, 2013

கீதை சிந்தனைகள்


கீதை  சிந்தனைகள்  




நடந்தவையாவும்   நன்மைக்கே  
நடப்பவையாவும்  நன்மைக்கே  
நடக்கபோவதும்  நன்மைக்கே 

எதை  இழந்தாய்
ஏன்  அழுது  புலம்புகிறாய் ?

என்ன  கையில்  கொண்டு  வந்தாய்
இவ்வுலகிற்கு  வரும்போது ?

இப்போது  என்ன  இழந்துவிட்டாய்
இடிந்துபோய்  உட்காருவதற்கு ?

நீ  எதை  உண்டாக்கினாய்
அதன்  அழிவைக்  கண்டு  வருந்துதற்கு ?

நீ  உருவாக்க  எடுத்துக்கொண்டவை
இங்கிருந்தே  எடுத்து  கொள்ளபட்டவைகளே

நீ  பிறருக்கு  அளித்த  பொருட்களும்
இங்கிருந்து  அளிக்கப்பட்ட  பொருட்களே

இன்று  உனக்கு  சொந்தமானவை  எதுவாயினும்
அது  நேற்று  ஒருவரின்  உடைமையாக  இருந்தது  
நாளை  வேறொருவருக்கு  சொந்தமாகிவிடும்

உண்மையை  நிலையை  புரிந்துகொள்
உள்ளத்தில்  அமைதியை  உணர்ந்துகொள்

மாறிக்கொண்டே  இருப்பது  உலகம்
அதுபோல்தான்  மாறிக்கொண்டே  இருப்பார்கள்
சஞ்சல  புத்தி  படைத்த  மனிதர்கள்

பலனை  எதிர்பாராது  கடமையை  செய்தால்
ஏமாற்றங்கள்  என்றும்  உன்னை  அணுகாது  

யாகங்களினால்  உலகம்  நன்மை  பெறுகிறது
ஆனால் தியாகங்களினால்தான்     இவ்வுலகம்
இன்னும்  அழியாமல்  இருக்கிறது

பொருட்களின்  மீது  பற்று  வைத்தால்  
என்றும்   துன்பம்தான் 
பற்றுக்களை  விட்டால்  விளையும்  இன்பம்  

பிறப்பும்  இறப்பும்  அனைத்து
உயிர்களுக்கும்
இறைவன்  வகுத்த   விதி
இதை  உணராது  அழுது
 புலம்புவது  என்ன  நீதி ?

சுகமும்  துக்கமும்  வாழ்வின்  அங்கம்
தீயும்  அதன் வெப்பமும்
இணைந்து  இருப்பதை  போல்

இவ்வுலகில் தோன்றுமனைத்தும்  
மாறிக்கொண்டே  இருப்பன

நிலையற்ற  நம்  உடல்களைபோல  
நிலையற்ற  உடலைகொண்டுதான்  நிலையான 
இறைவனை  அறிந்து  கொள்ளவேண்டும் 

மாறுகின்ற  மனதை  கொண்டுதான் 
என்றும்  மாறாத  இறைதத்துவத்தை 
புரிந்து  கொள்ள  வேண்டும் .

பிறந்ததும்  குழந்தை  அழுகிறது
சுற்றம்  சிரித்து   மகிழ்கிறது
அதே  குழந்தை  இறந்தால்
அது   அமைதியாய்  இருக்கிறது
சுற்றங்கள்  அழுகின்றன .

இதுதான்  மாயை
மாயை  விலக 
மாயக்கண்ணனை  சரணடைவோம் 
மாறாத  இன்ப  வாழ்வு  பெறுவோம் .

3 comments:

  1. /// தியாகங்களினால்தான் இவ்வுலகம்
    இன்னும் அழியாமல் இருக்கிறது ///

    சிறப்பான வரிகள்...

    ReplyDelete
  2. மாற்றம் ஒன்று தான் மாறாதது இந்த உலகில் மாறாததை புரிந்து கொள்ள மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete