Wednesday, February 20, 2013

முருகா நீ என் மன வீட்டினில் குடி கொள்வது எப்போது ?


Inline image 1
முருகா நீ என் மன வீட்டினில் 
குடி கொள்வது எப்போது ?

மலை மேல்
சிலையாய் நின்றவனே 
என் மனதில்நீ  
நிலையாய் நிற்பது எப்போது? 

காட்டிலும் மேட்டிலும் 
உறைவோனே
என் மன வீட்டினில்
நீ குடி கொள்ளுவது எப்போது?

அருணகிரியாரின் திருப்புகழை
பாட நான்  அறிகிலேன்
எனினும் உன் புகழை பாட 
அனுதினமும் நான் மறந்திலேன் 

அக்ஞானத்தில்
உழன்ற அருணகிரியை 
அருணையில் ஆட்கொண்ட
அமரர் தலைவா
இந்த அப்பாவி 
அடியேனுக்கு மட்டும் 
அருள் செய்ய 
என்ன தயக்கம் ?

பழனி பதிக்கு நான் வந்ததில்லை
பாரோர் போற்றி வணங்கும்
உன்  திருவடியை நான் கண்டதில்லை 

புறங்கூறி திரியும்  நான்
பரங்குன்றில் உறையும் 
உன்னை தரிசித்ததில்லை

அகத்தியன் மூலம்
 தமிழ் வளர்த்தாய் 
அருணகிரி மூலம் 
சந்தங்கள் தந்தாய்
இந்த அடியவனுக்கு 
மட்டும் என்ன தந்தாய்? 
மாளா பிறவியில் 
உழல்வதை தவிர 

அனைத்தும் அறிந்த 
உன் தந்தைக்கு 
நீ உபதேசம் செய்கின்றாய் 
சுவாமிநாதனாக

ஒன்றும் அறியாது 
உன்னைமட்டும் என் சிந்தையில்
வைத்து வணங்கும் 
எனக்கு உபதேசம் செய்யும்
நாள் எந்நாளோ?

நறுமணம் கொண்ட
மலர்கள் பூத்து குலுங்கும் 
மருத மலையில் வீற்றிருப்போனே 
வள்ளி தெய்வயானையுடன் 
காட்சி தந்து வணங்குபவர்களுக்கு 
வரங்களை அள்ளி தருவோனே 

தங்க கவசம் சாற்றி நின்று 
அழகே உருவாய் 
நின்ற உன் வடிவத்தை 
தணிகை மலையில்  தரிசித்தேன் 
என் இதய தாபம் தீர 

உன் மீது பல்லாயிரம்
பாடல்கள் பாடிய 
பாம்பன் சுவாமிக்கு 
அருளியவா 

இந்த பாமரன் பாடிய 
இந்த ஒரு பாடலை 
மட்டும் ஏற்று அருள் 
செய்ய வாராய் 
என் அன்பு தெய்வமே 

நின் அருள் பெற 
இயலாமையினால்
பிதற்றினேன் 
சில வார்த்தைகள் 

சினம் கொள்ளாதே 
சிங்கார வடிவேலா 

சீரலைவாய் செந்தூரில்
உறைவோனே 
என் மன மாயை அகற்றி 
மனஇருள் நீக்கி
உன் அருளை தந்து 
என்னை ஆட்கொள்ளுவாயே 

 தி.ரா.பட்டாபிராமன் 

8 comments:

  1. பக்தி ரசம் சொட்டும் அருமையான பாடல்!
    kbjana.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. என் வலைபதிவிற்கு
      முதல் வருகைக்கும்
      பாடலை பற்றிய கருத்துகளை
      பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி

      Delete
    2. Dear Sir,
      Arumaiyana padal. I have one wish (i.e) i would like to invite to the Temple at Thirusoolam, which is situated in Thirusoolam (opposite to Chennai Airport). It is a Sivan temple in the middle of 4 hills. it is more than 1200 years old. If possible you try to come on friedays. Every fridays the Amman will have santhanakappu. On Thai & Adi Fridays each fridays will have different alankarams. I will be in the temple around 5pm till around 8 to 8.30 pm.

      On March 10th is the Maha Sivarthiri. we have special abhisekham/alankarams on that day.

      With warm regards,

      K.Panchanathan
      9962458562

      Delete
    3. அன்பான
      அழைப்புக்கு நன்றி

      எனக்காக அவனிடம்
      வேண்டுகோள் விடுங்கள்
      அவன் அதை நிச்சயம்
      நிறைவேற்றி வைப்பான்.

      நானும் உங்களை
      கண்டு மகிழ்வேன்.

      நான்என்னை என்றோ
      அவனிடம்
      விட்டுவிட்டேன்.

      நானாக எதையும் செய்ய
      எண்ணுவது கிடையாது

      அவனருள் கூட்டுவித்தால்
      அங்கு இருப்பேன்.

      என்னால் அங்கு வர இயலும்
      ஒன்றும் கஷ்டமில்லை.

      என் இதயத்திற்குள்
      அவனோடுதான் நான்
      எப்போதும் இருக்கிறேன்.

      Delete
  2. அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்
      பாடலை பற்றிய கருத்துகளை
      பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி

      Delete