Friday, February 22, 2013

இருப்பது ஒரே பரம்பொருள்

இருப்பது ஒரே 
பரம்பொருள்

உள்ளிருப்பது 
ஒரே அமிர்தம் 
அவ்வப்போது பாட்டிலின் 
லேபில்கள் 
மட்டும் மாற்றப்படும். 
அவ்வளவுதான். 

அதைபோல்தான் 
தெய்வங்களும்

பலர் நினைப்பதுபோல் 
பல தெய்வங்கள் இல்லை 

இருப்பது ஒரே பரம்பொருள் 

அதுதான் ஒவ்வொரு 
வடிவத்திலும் இருக்கிறது.

இந்த உண்மையை
மனித குலம் 
உணர்ந்துகொண்டால் 

சண்டை ஏது?
சச்சரவு எது?
பூசல் எது?


நான் வணங்கும்  
தெய்வம்தான் உயர்ந்தது

நீ வணங்கும் தெய்வம்
சக்தியற்றது என்ற 
கூச்சல்கள் அடங்கிபோகும். 

என்ன செய்ய ?
படித்த பண்டிதர்களே 
மறுக்கிறார்களே 
உண்மையை ஏற்றுக்கொள்ள 

படிக்காத பாமரனோ 
இறைவனை உண்மையாக
நம்புகிறான். ஆயர்பாடியில் 
இருந்த கோபிகைகளைபோல்

அவன் இந்த சிக்கல்களில் தன்னை
இணைத்துக்கொள்வதில்லை. 
வணங்கும் நேரம் 
சில நிமிடங்கலாயினும் 
அவன் பக்திக்கு 
இறைவன் கட்டுப்படுகிறான்.

ஆனால் பண்டிதர்கள் 
தாங்கள் கட்டுப்பாட்டில்தான் 
இறைவன் இருப்பதாக 
 மக்களை நம்ப வைத்து 
தங்களை சுற்றி ஒரு கூட்டத்தை 
சேர்த்து வைத்துக்கொண்டு பணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 

இறைவனை அடைவது 
மிக எளிது

அவன் ஒரு அல்ப சந்தோஷி. 

கூடை கூடையாய் 
மலர்களை அணிவித்தாலும், 
விலையில்லா மாணிக்கம் 
கற்கள் நிறைந்த அணிகலன்கள் 
அணிவித்தாலும், 
பட்டு பீதாம்பரங்கள் சாத்தினாலும்
அல்லது ஒரே ஒரு மலரை
பக்தியுடன் அவன் பாதத்தில்
சமர்ப்பித்தாலும் அவன் 
வேறுபாடு பார்ப்பதில்லை 

எல்லாம் 
அவனுக்கு ஒன்றுதான் 

ஆற்றங்கரையில் இருக்கும் 
வினாயகபெருமான் 
ஆனந்தமாக இயற்கையோடு 
இயற்கையாய் இருந்துகொண்டு 
அருள் பாலிக்கிறான்
அவனுக்கு பாதுகாப்பு தேவையில்லை
அவன் வணங்கும் 
அனைவருக்கும்
 பாதுகாப்பு அளிக்கிறான் 

கோயில் தங்க கவசம் சாற்றப்பட்ட
கடவுளுளை பாதுகாக்க 
பூட்டு தேவைப்படுகிறது.

என்னே அறியாமை ?

கடவுளின் சக்திதான் 
நம்மை காப்பற்றுமே அல்லாது 
அது தாங்கியுள்ள வடிவமல்ல 
என்பதை உணரமறுக்கிறது 
நம்பிக்கையற்ற வழிபாடுகளில் 
மூழ்கியுள்ள மனித மனம் 

நம்பிக்கையில்லாமையால்தான் 
கோயில் சிலைகளும் நகைகளும் 
கொள்ளை போகின்றன

மனிதன் நம்பிக்கையுடன் 
கோயிலில் உள்ள சிலையையும்,
நகைகளையும் பூட்டு போடாமல் 
திறந்து போடட்டும்.
அங்கு தெய்வம் வாசம் செய்யும். 
திருடனே திருடுவதற்கு பயப்படுவான் 

ஆனால் அது சாத்தியமில்லை. 
ஏனென்றால் கடவுளைவிட அவன் மேல் சாற்றப்பட்டிருக்கும் வெள்ளி கவசத்திர்க்கும்,
தங்க வைர,வைடூரிய நகைகளுக்குதான்  
இந்த உலகில் மதிப்பு அதிகம். 

கடவுளால் உண்டாக்கப்பட்ட 
மூல பொருட்களை கொண்டு மனிதர்களால் படைக்கப்பட்டவடிவங்கள் ஒருநாள் அழிந்துபோகும். அல்லது  அழிக்கப்படும். 
இதுதான் உலக இயற்க்கை

ஆனால் இதயத்தில் நிலையாய் 
உள்ள இறைவனை உணர்ந்துகொண்டு 
அந்த நினைவை  நிலை நிறுத்திவிட்டால் 
அது என்றும் அழியாது. 
நின்று நம்மை நிழல்போல் 
தொடர்ந்து காக்கும் 

1 comment: