Monday, December 17, 2012

திருப்பாவை


திருப்பாவை 



திருக்குறள், திருவருட்பா என்பதுபோல் 
முற்காலத்தில் திருப்பாவையும் திருப்பா 
என்றுதான் அழைக்கப்பட்டிருக்கவேண்டும்

திருப்பாவையில் தி என்ற எழுத்து. திருமாலை குறிக்கும்

திரு என்ற சொல் மகாலக்ஷ்மியை குறிக்கும் 

திருப்பா என்ற சொல் திருப்பாற் கடலை  குறிக்கும் 

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள 
மகாலக்ஷ்மியோடு உறையும் திருமாலை 
பள்ளி எழுப்புவதாக அமைக்கப்பட்ட
பாடல்களை கொண்டது திருப்பாவை 

பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமான் 
இப்பூவுலகில் அறியாமையில் மூழ்கி 
இறைவனை மறந்து கிடந்த காலத்தில்
 மக்களை தட்டி எழுப்ப புவியன்னையே 
கோதையாக அவதாரம் எடுத்து 
இந்த மண்ணில் பரந்தாமன் எடுத்த 
அவதாரங்களை மேற்கோள் காட்டியும், 
இறைவனை எப்படி வணங்கவேண்டும், 
அவன் அருளை பெற என்னென்ன 
வழிமுறைகளை அனுசரிக்கவேண்டும் என்றும், 
அவனை வணங்குவதினால் 
கிடைக்கும் பேறுகள் என்ன என்பதையும், 
அனைவரும் அவன் புகழ் பாடுவதால்
இந்த உலகமும், மக்களும் எப்படி செழித்து
 வளமோடு இன்பமாக வாழ்வார்கள் 
என்பதையும். முப்பது பாடல்களாக
 திருப்பா ஆக கோதை தந்தருளினாள். 

காலபோக்கில் திருப்பாவை பாடு
என்று சொல்லப்பட்டு அது திருப்பாவை என்றே 
அழைப்பது வழக்கத்தில் வந்துவிட்டது.

கீதையில் இறைவன் அருளியுள்ளபடி
மாதங்களில் அவன் மார்கழி மாதமாக இருப்பதால்
இவ்வுலக சிந்தனைகளை தள்ளி வைத்துவிட்டு
அவன் புகழ் கூறும் திருப்பா வை 
பக்தியுடன் பாடி மகிழ்ந்து 
இன்பம் பெறுவோம்.  

படம் -நன்றி google 

No comments:

Post a Comment