Wednesday, November 14, 2012

விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-1)

                                                              விக்கினவர்த்தனன்'
இரட்டைப் பிள்ளையார்

 விநாயகர் 'காரியசித்தி மாலை' 

விக்னகரன்
          மீனாட்சியம்மனின் சன்னிதானத்தில் அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.

          பிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு,  காரியசித்திக்காகவும் படிப்பார்கள். 
 இதற்குத் துணைநூல் ஒன்று உண்டு. காரியசித்தி மாலையைப் படித்து, அதனால் காரியவெற்றி பெற்றவர்கள், இந்த துணைநூலைப் படித்து விநாயகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக
இந்த நூல்.


          காரியசித்தி மாலை 'அட்டகம்' என்னும் பிரபந்தவகையைச் சேர்ந்தது. இந்த நூல் 'பஞ்சகம்' அல்லது 'பஞ்சரத்தினம்'  என்ற வகையைச் சேர்ந்தது
அந்நூலின் கடைசிப் பாடலில்,

      வேண்டிய அடியார்க்கெல்லாம்
            விக்கினம் கெடுப்பாய் போற்றி
      வேண்டி வந்தனை செய்யார்க்கு
            விக்கினம் கொடுப்பாய் போற்றி
      வேண்டுவார் வேண்டிற்றெல்லாம் 
            விளைத்தருள் விமல போற்றி
      மாண்ட துட்டர்க¨ளைக்கொல்லும்
            மறமிகு மள்ள போற்றி.


          இந்தப்படலின் முதலிரு அடிகளைக் கவனியுங்கள். முதல் அடியில் 'விக்கினம் கெடுப்பாய்' என்றும் அடுத்த அடியில் 'விக்கினம் கொடுப்பாய்' என்றும் வருகிறதல்லவா?
                                               அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.
          இரண்டையுமே செய்பவராகத்தான் பழஞ்சைவர்கள் விநாயகரை வணங்கியிருக்கிறார்கள்.
இப்போது, ஒரு காரியத்தைத் தொடங்குமுன்னர், அக்காரியத்தைத் தொடங்குவதற்குத் தடங்கல் இல்லாமலும், தொடங்கிய காரியம் தொடர்ந்து நடக்கவும், அக்காரியத்தில் விரவியிருக்கும் இயற்கையான தடைகள் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் விநாயகரை வணங்குகிறோம்.

 இதில் மூன்று வெவ்வேறு குறிக்கோள்கள் அடங்கியிருக்கின்றன அவற்றில் பாசிட்டிவ் நெகட்டிவ் ஆகிய இரண்டுமே அடங்கியுள்ளன
 காரியத்தடையை நீக்குவதும்காரியசித்தி கொடுப்பதும் பாசிட்டிவான தன்மைகள்.
வணங்கப்படவில்லையென்றால் காரியத்தடையையோ தோல்வியையோ ஏற்படுத்துவது நெகட்டிவான அம்சம்.
இரண்டையுமே விநாயகர்தான் செய்கிறார்.
 இடையூறுகள் தடங்கல்கள், தடைகள் போன்றவற்றை விக்கினம் என்று சொல்கிறோம் அல்லவா? 
                    விக்கினத்தை அகற்றுபவன் அல்லது அழிப்பவன் 'விக்கினஹரன்'. 
 விக்கினங்களைச் செய்பவன் அல்லது ஏற்படுத்துபவன், 'விக்கின கரன்' அல்லது 'விக்கின கிருது'.
 விநாயகர் கவசத்தில் பார்க்கிறோமல்லவா -- அந்த ஏழாவது பாடலில்....

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க; இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் *விக்கினகிருது* காக்க; இராக்கதர்,பூதம், உறுவேதாளம்,
மொகினி,பேய், இவையாதி உயிர்த்திறத்தால் வரும்துயரும்,   முடிவிலாதவேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்து காக்க.

இதே பொருளில் உள்ளதுதான் 'விக்கினவர்த்தனன்' என்னும் பெயரும்.

அக்கினியில் சித்தீசர் காக்க; உமாபுத்திரர் தென்னாசை காக்க;
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க; *விக்கினவர்த்தனர்*   மேற்கென்னும்           திக்கதினில் காக்க; வாயுவில் கசகன்னன் காக்க;திகழ் உதீசிக்க நிதிபன் காக்க; வட கிழக்கில் ஈசநந்தனரே காக்க.

          ((இன்னும் வரும்) 
 தகவலும் படமும் 
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html

2 comments:

  1. விளக்கங்கள் மிகவும் அருமை...

    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      Dr.ஜெயபாரதிக்குதான் உரியது.

      Delete