Tuesday, November 27, 2012

எல்லாம் அவன் கையில்?




 எல்லாம் அவன் கையில்?




சில நாட்களுக்கு 
முன் படுக்கையில் படுத்திருந்தேன் 
உறக்கமும் விழிப்புமற்ற நிலை. 

திடீரென்று நான்கு பேர்கள் 
என் முன் வந்து நின்றார்கள்

அவர்கள் உருவம் சரியாக தெரியவில்லை
இடையில் வேட்டி அணிந்திருந்தார்கள்
உடலில் பூணல் மட்டும் தெரிந்தது

அவர்கள் என்னை கிளம்பு, கிளம்பு என்றார்கள்
நான் எதற்கு என்று கேட்டேன்?

இந்த உலகத்தில் நீ இருக்கும் 
காலம் முடிந்துவிட்டது என்றார்கள்.

என்னை விட வயதான என் தாய் 
இன்னும் உயிரோடு இருக்கிறாள்
எனக்கு மட்டும் என்ன அவசரம் என்றேன்

அவள் இப்போது எங்கிருக்கிறாள்?

இரண்டு ஆண்டுகள் முன் என்னோடுதான் இருந்தாள்
படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அவளை 
நன்றாகத்தான் பார்த்துக்கொண்டேன்

அப்போது என்ன நினைத்தாய்?

அவளுடைய இறுதிகாலம் 
என் வீட்டில்தான் முடிவுறும் 
என்று நினைத்தேன்

ஆனால் நடந்தது என்ன?

என்னுடைய் மனைவியின் 
உடல்நலம் மோசமாகி உயிருக்கு 
போராடும் நிலை வந்துவிட்ட்டது
அப்போது என்ன செய்தாய்?

எனக்கும் வயதாகிவிட்டதால் 
இருவரையும் என்னால் பார்த்துக்கொள்ள 
இயலாத நிலையில் என் தம்பியின் வீட்டில் 
என் தாயை கொண்டு விட நேரிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

நம் கையில் ஒன்றும் இல்லை என்று தெரிகிறது 

அப்படி என்றால் ?

எல்லாம் இறைவனின் கையில்தான் 
உள்ளது என்று தெரிகிறது

பிறகு என் இந்த உலகத்தை விட்டு
கிளம்ப மறுக்கிறாய் என்று 
கேட்டனர் வந்தவர்கள்?

எதுவுமே உன் கையில் இல்லை என்கிறாய்?
பின் வீணாக எதற்கு கவலைப்படுகிறாய்?

அதுதான் எனக்கும் புரிய வில்லை 

அதுதான் மாயை.

இன்னும் வரும்

4 comments:

  1. Replies
    1. மாயை விலகிவிட்டால்
      மாறா மகிழ்ச்சிதான்

      Delete
  2. மாயையை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நாம் தொடங்கியஇடத்தை
      அடையும் வரை மாயை
      நம்மை தொடர்ந்து கொண்டிருக்கும்

      Delete