Monday, November 26, 2012

இவ்வுடலில் உயிர் இருக்கும்போதே இன்ப வாழ்வு








இவ்வுடலில் உயிர் இருக்கும்போதே 
இன்ப வாழ்வு


நாராயணனே நமக்கே பறை தருவான் 

மற்ற கடவுள்கள் எல்லாம் நாம் கேட்கும் 
வரங்களைதான் மட்டும் தருவார்கள்.

அதனால் ஏற்படும் விளைவுகளை 
வரம் பெற்றுகொள்பவர்கள் தான் 
அனுபவிக்கவேண்டும்

ஆனால் நாராயணனோ 
நமக்கு என்ன தேவையோ
,நமக்கு நன்மை பயக்கும் வரங்களை 
அவன் கேட்காமலே தருவான். 
அதுதான் சத்தியம்.

ஏனென்றால் அவன் காக்கும் கடவுள் 
அவனுக்கு தன பக்தர்களின் மீது 
அளவில்லா பிரியம்
அதனால்தான் அவனுக்கு 
பக்த வத்சலன் என்று பெயர். 

எப்போதுமே கேட்டு பெற்ற 
வரங்களால் வம்புதான் வரும்
அகந்தை பெருகும்,அழிவு நேரும் 

பிரம்மாவிடம் வரம் பெற்ற அசுரர்கள் 
இறைவனை மறந்து அகந்தை கொண்டு 
அவர்களை படைத்தது காக்கும்
 இறைவனையே 
இகழ்ந்து அறியாமையால் எதிர்த்து 
தன்னை தானே புகழ்ந்துகொண்டு 
அழிந்துபோனார்கள். 

இறைவனிடம் வரம் கேட்காதீர்கள்
இறைவனிடம் எதையும் யாசிக்காதீர்கள் 
நம்மை படைத்த அவனுக்கு எல்லாம் தெரியும்

நம்முடைய கர்ம வினைகளுக்கு 
தகுந்தவாறு பலன்களை அளித்து, 
நம்மை தவறான வழியில் 
சென்றால் திருத்தி 
தன்னை நினைக்கும்படி 
செய்து தன்னிடம் 
அழைத்து கொள்ளுவதற்கான 
அனைத்து உபாயங்களையும் 
அவனே மேற்க்கொள்ளுவான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் 
அழியும் மனிதர்களின் 
புகழ் பாடுவதை விடுத்து 
அழியா முக்தி நிலைஅருளும்
அவன் பாதங்களை வணங்கி 
அவன் புகழ் பாடி 
அவரவருக்கு கிடைத்துள்ள
வாழ்க்கையை நேர்மையான
முறையில் வாழ்வதுதான் 
நாம் செய்ய வேண்டியது.

இந்த கலி காலத்தில் நம்மை 
பாவம் செய்ய தூண்டக்கூடிய 
அனைத்து அம்சங்களும் நம்மை 
சுற்றி நின்றுகொண்டு
நம்மை வா வா 
என்று அழைக்கின்றன.

அவைகளின் வலையில் 
ஒரு தடவை சிக்கிவிட்டோமானால் 
அதிலிருந்து வெளியில் 
வருவது மிக கடினம்.

அதிலிருந்து
தப்பிக்கும் ஒரே வழி
இறைநாமங்களை
ஓதிக்கொண்டே இருப்பதுதான்
மற்றவருக்கு தெரியவேண்டும் 
என்ற அவசியமில்லை.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு 
எல்லா உறவுகளையும் விட மேலானது. 
இவ்வுலக உறவுகளில்
சுயநலம் கலந்திருக்கும். 
அவனோடு நாம் கொண்டுள்ள 
உறவு பிரிக்க முடியாதது, 
அழிக்கமுடியாதது. 

எனவே மனதில் சஞ்சலம் கொள்ளாமல்
மதி மயங்காமல் அவன் பாதங்களில்
சரண் புகுவோம்.
இவ்வுடலில் உயிர் இருக்கும்போதே 
இன்ப வாழ்வு பெற்று 
ஆனந்தமாய் வாழ்வோம். 

2 comments: