Friday, February 3, 2012

மரணம் என்ற சொல்லை உச்சரிக்கவே மனிதர்கள் பயப்படுகிறார்கள்

மரணம் .இந்த சொல்லை 
கேட்டாலே மனித குலம்
பதறுகிறது. அது ஏன்?

மரணம் என்ற சொல்லை 
உச்சரிக்கவே மனிதர்கள் 
பயப்படுகிறார்கள் 
.
மரணத்தின் தருவாயில்
ஒருவர் இருக்கின்றார் 
என்றவுடன் மக்களின் 
முகத்தில் சோகம் 
கவ்விகொள்கிறது
உடனே குடும்பத்தில் ஏற்கெனவே இறந்தவர்களை  பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்த துவங்கிவிடுகிறார்கள்
சிலர் துக்கம் தாங்காமல் புலம்புவதும்,மற்றவர்கள் ஏதாவது சொல்ல போகிறார்களே  என்று நினைத்து அழுவதுபோல் நடித்து அவர்களின் துக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள் 
சிலர் ஓஹோகோவேன்று கூச்சலிட்டு ஊரை கூட்டுகிறார்கள்
சிலர் மௌனமாகிவிடுகிரார்கள் 
சிலர் அதிர்ச்சியிலிருந்து வெகு காலம் மீள்வதேயில்லை 
சிலருக்கு அப்போதுதான் தத்துவ முத்துக்கள் உதிர்கின்றன
இந்நிலை மக்களுக்கு என் வருகிறது?

விலங்குகள் என்றும் மரணத்தை
பற்றி நினைப்பதும் கிடையாது
கவலைப்படுவதும் கிடையாது  
அவைகளும் பிறக்கின்றன,வாழ்ந்து மடிகின்றன 

உண்மையில் பிறந்தது அனைத்தும் 
ஒருநாள் மடிவது என்பது 
இயற்கையின் நியதி. இதை யாராலும் 
மாற்றவோ மறுக்கவோ முடியாது 
இது அனைவருக்கும்  தெரியும் 
இருந்தாலும் மக்கள் மரணத்தை கண்டு 
பயப்படுவது ஏன்? 

மனிதனை மரணம் ஒவ்வொரு 
நொடியும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதை யாரும் உணர்வதில்லை 
.பூனை தன் கண்ணை மூடிகொண்டால் 
பூலோகம் இருண்டு போகுமாம். 
அதைபோல்தான் இதுவும். 
தவிர்க்க முடியாத இந்த நிகழ்விற்கு  
பயப்படவேண்டியதில்லை என்று
பகவத் கீதையில் பகவான் 
ஆணித்தரமாக உரைத்திருக்கிறான் 

கீதையை தினமும் படிப்பவர்கள் கூட மரணத்தை கண்டு அஞ்சுகின்றனர்
பல சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் மரணத்தை 
எவ்வாறு வெல்வது என்று வாழ்ந்து காட்டி மரணமிலா பெருவாழ்வு பெற்று மனித குலத்திற்கு இன்றும் வழி காட்டி கொண்டிருக்கின்றனர்
.
மரணம் என்பது துன்பப்படும் மனிதகுலத்திற்கு 
இறைவன் அளித்த வரப்ரசாதம் 
.
நைந்து போன உடலை அழித்துவிட்டு 
மீண்டும் நமது எண்ணங்களை நிறைவேற்றிகொள்ள,
ஞானம் பெற்று இறைவனோடு கலக்க மீண்டும் 
புதிய உடலை நமக்கு அளிக்க 
இறைவன் நமக்கு அளித்த வாய்ப்பு 

உடலையும் மனதையும் அதன்மூலம் உலகத்தையும் ஒரு பார்வையாளனாக பார்க்கின்றவனுக்கு
மரணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுவதில்லை

விழிப்போடு இருப்பவனை மரணம் 
என்றும்  வெற்றிகொள்ள முடியாது
உறங்குபவனைதான் மரணம் ஆட்கொள்ளும்

அதனால்தான் வள்ளல்பெருமான் விழித்திரு என்றார்

விழித்திருப்போம் மரணத்தை வெல்வோம்.

1 comment:

  1. அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete