Friday, December 2, 2011

இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்

இறைவன் தன்னை அறிய முயற்சிப்பவர்களுக்கு
உதவ தயாராக காத்துகொண்டிருக்கிறான்
ஆனால் யாரும் அவனை கேட்பதுமில்லை,விரும்புவதுமில்லை
அவனிடம் செல்பவர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கைகளை
நிறைவேற்றித்தருமாறு மட்டுமே கேட்கின்றனர்
அதற்காக எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும்
அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்
அங்க பிரதத்ஷனம் செய்ய வேண்டுமா?
மொட்டை போட வேண்டுமா?
பல நூறு கிலோமீட்டர் நடந்து பாதயாத்திரை செல்ல வேண்டுமா?
ஆடு கோழி பலி கொடுக்க வேண்டுமா?
இல்லை நர பலி கொடுக்க வேண்டுமா?
தங்க தேர் இழுக்க வேண்டுமா?
யாகம்,ஹோமம் பண்ண வேண்டுமா?
கிரி வலம் வர வேண்டுமா?
இல்லை தீ மிதிக்க வேண்டுமா?
இல்லை உடல் முழுவதும் அலகு குத்திக்கொள்ள வேண்டுமா?
மண்டையில் தேங்காயை உடைத்துக்கொள்ள வேண்டுமா?
இன்னும் எத்தனையோ பிரார்த்தனைகள்
கணக்கே இல்லை
இவையெல்லாம் எதற்கு செய்ய வேண்டும்
நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல்
நாம் ஏழையாகவோ,செல்வந்தனாகவோ இருக்கபோகிறோம்
நமக்கு நல்ல வாழ்க்கை அமைவதும் அதை பொறுத்ததே
பின் எதற்காக இத்தனை துன்பங்களை வேண்டி விரும்பி
ஏற்றுக்கொண்டு துன்பப்படவேண்டும்
நம் விருப்பம் நிறைவேறிவிட்டால்
அத்தோடு முடிவடைந்துவிடுமா நம் கோரிக்கைகள்?
ஒரு ஆசை முடியும் முன்பே அடுக்கடுக்காக ஏராளமான
ஆசைகள் வரிசையில் நிற்கின்றனவே?
ஆனால் இதையெல்லாம் யாரும் எண்ணி பார்ப்பதில்லை
அவர்களை சுற்றி இருப்பவர்களும் அவர்களை சிந்திக்க விடுவதில்லை
பொறுமையாக சிந்தித்தால் இவையெல்லாம் தேவையா என்று புரியும்
இந்த மாயையிலிருந்து விடுபடுவது மிக கடினம்
அதற்க்கு இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்
அப்போதுதான் வெற்றி கிடைக்கும்

1 comment:

  1. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
    நம்ம தளத்தில்:

    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete