Saturday, December 3, 2011

பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால் பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்

ஒரு கவிஞன் எழுதினான்
தந்தை தவறு செய்தான்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம்
பந்தம் வளர்த்துவிட்டோம் என்று
பத்து மாத பந்தம் தாயுடன்
பிறக்கும்போதே பூர்வ ஜன்ம பந்தம்
பிறந்தவுடன் ஏற்ப்படும் பந்தங்கள் கணக்கற்றவை
உடலோடு தோன்றும் பந்தங்கள் மரணத்தோடு முடிவடைந்துவிடும்
ஆனால் மனதோடு தோன்றும் பந்தங்கள் என்றும் அழிவதில்லை
அவைகள் பிறவிதோறும் நம்மை தொடர்கின்றன
இதிலிருந்து எப்படி விடுபடுவது ?
உயிருடன் இருக்கும்போதே பந்தங்களை
உரிய முறையில் நீக்கிகொள்ள வேண்டும்
நம் கடமைகளை சரியாக செய்துவிட்டால்
ஒவ்வொரு பந்தமாக நம்மை விட்டு நீங்கிவிடும்
உதாரணத்திற்கு ஒரு தாய் தன் குழந்தையை
நன்றாக,ஒழுக்கமுள்ளவனாக வளர்க்க வேண்டும்
அதுபோல் ஒவ்வொருவரும் அவரவர்களின்
கடமைகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்
தவறினால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள்
மிகவும் மோசமாக இருக்கும் என்பதை
இன்றைய சமுதாயத்தில் பெருகிவிட்ட
ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களுமே இதற்க்கு சான்று
என்பதை அனைவரும் அறிந்ததே
அவ்வாறு செய்யாமல் பந்தங்களிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது
பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால்
பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்
நம்மிடமிருந்து பிரிக்கமுடியாத பந்தம் ஒன்று உண்டென்றால்
அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு
மற்ற பந்தங்கள் அனைத்தும் தற்காலிகமே
நாம் இறைவனை நினைத்துகொண்டே இருந்தால்
மற்ற பந்தங்களெல்லாம் தானே விலகிவிடும்.
இல்லாவிடில் இறைவன் நீக்கிடுவான்

No comments:

Post a Comment