Sunday, December 25, 2011

யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?

யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?
பரிபூரணனுக்குதான் அடிமை செய்ய வேண்டும் 
என்றான் மகாகவி பாரதி 

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

சிலர் பெண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
பலர் பிறரை ஆட்டுவிக்கும் அதிகார போதைக்கு 
அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
கோடிகணக்கான மனிதர்கள் மதுவுக்கும்,
போதை பொருளுக்கும் ,பலவிதமான சூதாட்டங்களுக்க்கும் 
அடிமைப்பட்டு பொருளை இழந்து, தன்னை இழந்து,அதிலிருந்து
வெளி வர முடியாமல் மூழ்கிகொண்டிருக்கிரார்கள் 
 
பலர் புகழுக்கு அடிமைப்பட்டு 
இகழ்ச்சியைவலிய தேடிகொள்ளுகிரார்கள்

வலிமையான நாட்டிற்கு வலிமை குறைந்த
 நாடுகள் அடிமைப்பட்டு சிறுமைபட்டுகொண்டிருக்கின்றன

இப்படியாக இன்று யாருக்கும்
உண்மையான விடுதலை இல்லை 
விடுதலை வேண்டும் என்று 
தறுதலையாக தாறுமாறாக நடந்துகொண்டு
சூழ்ச்சி வலையில் சிக்கி கூண்டோடு 
அழிந்து போய்கொண்டிருக்கிறார்கள் 
என்பதை வரலாறு சொல்லும்
 
நம்மை சுரண்டி நம்மை பூண்டோடு அழிக்கும் 
மனிதர்களிடம் நாம் உதவி தேடி சென்றால் 
மேற்கொண்டவாறுதான் நிகழும்

நம்மை நாம் காப்பற்றிகொள்ளமுடியாத
நிலை வரும் போது நம் நிலையை புரிந்துகொண்ட
நம்மை காப்பாற்றக்கூடிய 
நல்லவர்களிடம்,வல்லவர்களிடம்தான் 
நம்மை ஒப்புவிக்கவேண்டும் 

அதற்க்கு தகுதியானவர் இறைவன் ஒருவன் மட்டுமே
அவனிடம் முழுவதுமாகநம்மை ஒப்புவித்தால் 
அனைத்து துன்பங்களிலும் இருந்து 
விடுபடுவோம் என்பதில் ஐய்யமில்லை 

3 comments:

  1. நீங்கள் சொன்ன அத்தனையும் சரி. இறைவன் எங்கே இருக்கின்றார் அவரிடம் போய்ச் சொல்லி ஆவது ஒன்றும் இல்லை. எம்மிடமே நாம் திரும்பத் திரும்பச் சொல்லும் போது எமக்குள்ளேயே புதுவித சக்தி ஏற்பட்டு எமக்குள் மாற்றத்தைக் காண்போம் என்று நினைக்கின்றேன்

    ReplyDelete
  2. நமக்குள் அளவிடமுடியாத சக்தி குவிந்து கிடக்கிறது
    நம் மனதை ஒருமைபடுத்தினால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்
    நம் மனது எண்ணங்களால் நிரப்பபட்டுள்ள ஒரு மூட்டை
    அந்த மூட்டையை காலி செய்யவேண்டும் என்று பகவான் ரமணரும் ஓஷோவும் சொல்கிறார்கள்
    அதை செய்துவிட்டால் நம்முள்ள இருக்கும் ஆன்மா தானே
    ஒளிவிடும்
    நம்மை பிடித்த எல்லா பயங்களும் குழப்பங்களும் நம்மை விட்டு ஓடிவிடும்
    ஆனால் நாம் எதிர்மறையான காரியங்களையே செய்துகொண்டு
    குழிக்குள் விழுந்த யானைபோல் மென்மேலும் புதைகுழிக்குள் போய்கொண்டிருக்கின்றோம்
    நாம் நமக்குள் செல்வதே கிடையாது
    எப்போதும் பிறர் கருத்துக்களையே நம் கருத்துகளாக ஏற்றுக்கொண்டு குழப்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
    மற்றவர்களின் வாழ்க்கையின் ரகசியங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம்
    நம் மனதில் என்ன இருக்கிறது என்பதை தினம் ஒருநிமிடமாவது ஆராய்ந்து பார்த்து நமக்கு தேவையற்றதை வெளியில் தூக்கி எறிந்துவிட்டால் நாம் உண்மையை அறிந்து தெளியலாம்

    ReplyDelete