Sunday, December 11, 2011

பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும் இறந்தால் பிறந்துதான் ஆகவேண்டும்

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய்?
இல்லை ஒரு  பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே?
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
இங்கு வந்து ஏன் பிறந்தாய் மகனே
என்ற வரிகளை முந்தைய தலைமுறை மக்களுக்கு
தெரியாமலிருக்க முடியாது

அதே நேரத்தில் கண்ணன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான் என்று
உலகமே கொண்டாடும் பிறப்பும் இவ்வுலகில் உண்டு

பெண் சிசு என தெரிந்தால் சுற்றதிர்ற்கு அஞ்சி
கருவிலேயே அழிக்கும் பெண்கள் ஏராளம்
இன்று உலகெங்கும் அங்கு இங்கு எனாதபடி
பெண்களை கொடுமைபடுத்தி அவர்கள் வாழ்வை
கேள்விக்குறியாக்கும் நவீன காம காம கொடூரன்களின்
பார்வையிலிருந்து தப்பி நல்லதோர் வாழ்க்கை
பெண்ணினத்திற்கு அமைவது இன்றைக்கு கேள்விக்குறி

வறுமையினால் வாழ்க்கையை தொலைக்கும்
 பெண்கள் ஒருபுறமிருக்க
வளமான வாழ்க்கையினால் மோகம் தலைக்கேறி
வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம்

இவ்வளவு புதை குழிகள் இருந்தும் கடவுளை தேடி
அலைகின்ற மக்களும்  இவ்வுலகில் இருக்கத்தான்
செய்கின்றனர்

உண்மையை தேடி பொய்களிடம் அடைக்கலம்
புகும் கூட்டம் தன இன்று அதிகம்
உண்மை எது பொய் எது என்று பகுத்தறிவது
மிக கடினம்

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு
காரணமில்லாமல் எந்த செயலும் இல்லை
நம் பிறப்புக்கும் நாம் முற்பிறப்பில் செய்த
நல்வினை,தீவினைகளே காரணம்

இப்பிறப்பிலாவது நல்லவர்களோடு சேர்ந்து
நல்லதை எண்ணி,நல்லவைகளை செய்து
நலம் பெறுவோம்
.
பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும்
இறந்தால் பிறந்துதான் ஆகவேண்டும்

இந்த வட்டத்திலிருந்து விடுபட வேண்டுமானால்
இறைவனிடம் எந்த நிலையிலும் அசைக்கமுடியாத
நம்பிக்கையும் முயற்சியும் வேண்டும்
அதை அந்த இறைவன்தான் நமக்கு தரவேண்டும்.



2 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. அருமை... வாழ்க வளமுடன்.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete