Friday, December 2, 2011

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?
நிச்சயம் கிடைக்க போவதில்லை
எவ்வளவு காலம்தான் புராணங்களையும் பக்தி நூல்களையும் படித்து கொண்டிருப்பது?
எவ்வளவு காலம்தான் சித்தர்களையும் சாமியார்களையும்
கடவுளை காட்டுவார்கள் என்று நம்பி வாழ்நாளை வீணாக்கி கொண்டிருப்பது?
யாரும் எதுவும் காட்டபோவதில்லை
எவ்வளவுதான் சாத்திரங்களை கற்றாலும்
ஒன்றும் கடவுளை பற்றி அறிந்துகொள்ளமுடியாது
மனம் அடங்காமல் ஒன்றும் தெளிவாகாது
சினம் அடங்காமல் உள்ளத்தில் அமைதி பிறக்காது
ஆசைகள் இருக்கும்வரை மனம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்
ஆசைகளை அழிக்கமுடியாது. முதலில் அதன் எண்ணிக்கையை குறைத்து
இறைவனிடம் மட்டும் ஆசையை வளர்த்துகொள்ளவேண்டும்
அந்த ஆசை பலன் கருதா பக்தியாக கனிய செய்ய வேண்டும்
இறைவனிடம் பக்தி ஒன்றினால் மட்டுமே
அவனை அடைய முடியும்
ஒன்பது விதமான பக்தியில் நண்பனாக,குழந்தையாக தந்தையாக என
அவரவருக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து
இவ்வுலக கடமைகளை அந்த பாவனையுடன் ஆற்ற பழக வேண்டும்
அதை விடுத்து மலருக்கு மலர் தாவும் வண்டு போல்
எந்த முறையிலும் நிலைத்து நிற்காமல் போய்கொண்டிருந்தால்
எதுவும் சித்திக்காது
வாழ்நாளும் முடிந்துவிடும்

No comments:

Post a Comment