Sunday, November 13, 2011

இறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்

இறைவனை அடையவிடாமல் தடுக்கும் முதல் எதிரி காமம்தான்
காம உணர்வால் தோன்றிய மனிதன் பால பருவத்தை தாண்டும்போது அதன் வலையில் சிக்கி கொள்கிறான்
அவன் இறக்கும் வரை அது அவனை விடுவதில்லை
அவனது நாடி நரம்புகள் தளர்ந்து போனாலும் அவன் மனதில் உள்ள கடந்த கால பதிவுகள் அவனை தொல்லைபடுத்தி கொண்டு வருகின்றன
இறைவனை அடைய அவன் ஆசைகளை விட்டொழிக்க வேண்டும்
ஆனால் அது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது
அதனால்தான் முற்காலத்தில் முதுமை அடைவதற்குள் தன கடமைகளை நிறைவு செய்து விட்டு பொறுப்புகளை இளையவர்களிடம் ஒப்புவித்துவிட்டு கானகம் சென்று தவ வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்று உடலில் இருந்து உயிர் நீங்கும் வரை என்றும் தீராத திருப்தியே அடைய முடியாத சம்சாரத்தை விட்டு விலக யாரும் விருப்பபடுவதில்லை
அதனால்தான் வாழ்வின் இறுதிகாலத்தில் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகின்றனர்
நமக்கு உடல் மீது பற்று இருக்கும் வரை காமத்திலிருந்து விடுபட்டு மனதை இறைவனை நோக்கி திருப்ப வாய்ப்பிலை
உணவு கட்டுப்பாடு,மனக்கட்டுப்பாடு,ஆசைகளை தூண்டும் செயல்களிலிருந்து விலகி நிற்றல்,தன்னலமற்ற சேவையில் ஈடுபடுதல் பொறுமையை கடைபிடித்தல் ,இறைவனிடம் ஆழ்ந்த பக்தி செலுத்துதல் போன்றவற்றால்தான் மனம் அமைதியடைந்து இறைவனை நோக்கி மனம் திரும்பும்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை

No comments:

Post a Comment