Wednesday, November 30, 2011

உலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்
இன்று நோயில்லாத மனிதர்களே இல்லை
நோய்கள் பலவிதமான அவதாரங்களை எடுத்து
மனிதர்களை வாட்டி வதைக்கின்றன
பிறக்கும்போதே நோயுடன் பிறக்கும் குழந்தைகள்
எப்போதாவது வந்து போகும் நோய்கள்
வந்தபிறகு நிரந்தர பாதிப்பை விட்டு செல்லும் நோய்கள்
வாழ்நாள் முழுவதும் வேதனைபடுத்தும் நோய்கள்
உணவிற்கு பதில் மருந்துகளே உண்டு வாழவேண்டிய நோய்கள்
மனதை பாதிக்கும் நோய்கள்
உடலை பாதிக்கும் நோய்கள்
மனம் உடல் இரண்டும் பாதிக்கும் நோய்கள் இப்படியாக நோய்களால்
மனித குலம் மிகுந்த துன்பங்களை சந்திதுகொண்டிருக்கிறது என்பது உண்மை
நோய் வந்தால் நோயால் பாதிக்கபடுபவர் மட்டும் துன்பபடுவது மட்டுமல்லாமல்
பெற்ற்றோர்கள் அவர்களை சார்ந்தவர்களும் துன்பபடுவது இயற்கையே
நோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் ஒரு புறம் இருக்க, மந்திரம்
,ஜோதிட பரிகாரம் மாந்திரீகம் கோயில்கள்,போலி சாமியார்கள் என தீர்வை தேடி அலைவது வேறு மக்களை அலைக்கழிப்பது நடக்கிறது
இப்படி நோய்களுக்கு ஏழைகள், செல்வந்தர்கள் என்ற விதிவிலக்கு கிடையாது
இந்த உலகில் பிறந்தவர்கள் நோயில்லாமல் வாழமுடியாதா?
நிச்சயம் முடியாது .நம்முடைய முன் வினைபயன்களால் நோய் வருகிறது
அதை பொறுமையுடன் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்.
இனிமேலாவது தவறுகள் செய்யாவண்ணம்
வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்
செல்வம் உள்ளவர்கள் துன்பபடுவோர்க்கு உதவவேண்டும்
உடல் நலம் உள்ளவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்
எதுவும் செய்ய இயலாதவர்கள் இறைவனிடம் பிறர் துன்பம் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும்.
உலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்
பிறந்தால் இறக்கவேண்டும் இறந்தால் மீண்டும் பிறக்கவேண்டும்
பசி உண்டால் நிற்கும் செரிமானம் ஆகியவுடன் மீண்டும் பசிஎடுக்கும்
தீர்க்க இயலா இரண்டு பிணிகளையும் தீர்க்க
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை
மற்ற பிணிகளுக்கு நிச்சயம் இந்த உலகில் மருந்துண்டு. அதை தேடி பெறலாம்.

No comments:

Post a Comment