Tuesday, November 22, 2011


ராமாயணம் என்றால் ராமன் நடந்து காட்டிய வழி
என்று ஒரு பொருள் உண்டு.
பரம்பொருளான ராமன் இந்த உலகில் மனிதனாக
அவதாரம் செய்து பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் ஆகிவிட்டன
எல்லா மொழிகளிலும் ராமாயணம் இருக்கிறது
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்?
எப்படி கடமைகளை நிறைவேற்றவேண்டும்?
எப்படி தர்மங்களை கடைபிடிக்கவேண்டும்?
எப்படி நீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும்?
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரின் கடமைகள் என்ன ?
கம்ப ராமாயணத்தை இன்று அனைத்து மதத்தினரும் படித்து
தெளிந்து போற்றுகின்றனர்
ராமனை கடவுளாக கண்டு போற்றி பாடி
முக்தியடைந்தவர்கள் ஏராளம்.
இன்றும் அவன் நாமத்தை ஜபம் செய்து மனசாந்தி பெற்று
நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம்.
ராமனை ஒரு பாமர மனிதனை போல் சித்தரித்து
அவனை இழித்தும் பழித்தும் பேசுபவர்களும் இந்நாட்டில் உண்டு
பூமாலைகளும் பாமாலைகளும் சூட்டி மகிழும் பக்தர்களிடையே
அவனுக்கு செருப்பு மாலை சூட்டி மகிழ்ந்தவர்களும் நம்மிடையே உண்டு
மேலோட்டமான பார்வைக்கு ராமனின் சில செயல்கள்
தவறாக தோற்றம் அளிக்கலாம்
அதை வைத்துகொண்டு அவனின் பெருமைகளையும்
அருமைகளையும் யாராலும் மறைக்கவோ
மறுக்கவோ முடியாது
எனவேதான் பல யுகங்கள் கடந்தும் அவன் பெருமை
போற்றப்பட்டு தெய்வமாக அவன் பக்தர்களின் நெஞ்சில்
வாழ்ந்து வருகிறான்.
காசியில் விஸ்வநாதபெருமானே அங்கு மரிக்கும்
மனிதர்களின் காதில் ராம நாமத்தை ஓதி
அவைகளின் ஆத்மா முக்தி அடைய உதவுவதே இதற்க்கு சான்று
எனவே நாம் அனைவரும் உயிருடன் இருக்கும்போதே
ராம நாமத்தை உச்சரித்து பிறவி பெருங்கடலை
கடக்க முனைவோம்.
ஏனெனில் நாளை என்ன நடக்கும் யாரறிவார்

No comments:

Post a Comment