Thursday, November 17, 2011

உண்மையான ஆன்மீகம் என்றால்

இறைவன் இந்த அண்டத்தில் பல்லாயிரகணக்கான கோள்களையும் விண்மீன்களையும் படைத்துள்ளான் நாம் வசிக்கும் பூமியும் ஒன்று.
ஒவ்வொரு கோளும் அதன் அளவிற்க்கேர்ப்ப
ஜடபோருட்களும்,வாயுக்களும்,காந்த சக்தியும் கொண்டு
ஒன்றைஒன்று மோதிக்கொள்ளாமல்
அதனதன் பாதையில்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றி வந்துகொண்டிருக்கின்றன
கோள்களுக்கு வேண்டிய அனைத்து சக்தியையும்
சூரியன் தன கிரணங்கள் மூலம் வழங்கிகொண்டிருக்கிறது
நம்மை சுற்றியுள்ள கடல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு
கரையை தாண்டாமல் மனித குலத்திற்கு வேண்டிய அனைத்தையும்
தந்துகொண்டிருக்கின்றது
இந்த பூமியில் வசிக்கும் மக்கள் மட்டும்
சுயநலத்தின் காரணமாக அவரவர் வேலைகளை விட்டுவிட்டு
மற்றவர்கள் வாழ்க்கையில் தலையிடுவதும், ஆதிக்கம் செய்வதும்,
பிறரை அழிப்பதும்,தன்னைவாழவைக்கும்
இயற்கையை பாழ்படுதுவதும் பிறரை துன்பத்தில் ஆழ்த்தி தானும் அழிந்துகொண்டிருக்கின்றனர்.
எவ்வளவோ முறை இறைவன் நேரடியாக அவதாரங்கள் செய்து
மக்களுக்கு நல்வழி காட்டியும்,தன அடியார்கள் மூலமாக வாழ்ந்து காட்டியும்
இந்த மனித சமூகம் திருந்துவதாக தெரியவில்லை.
இறைவன் சுனாமி, பூகம்பங்கள் வெள்ளம் கொள்ளை நோய்கள்,
போன்ற இடர்பாடுகளை அளித்தும் அறிவில்லாமல்
அகந்தை தலைக்கேறி இறைவனே இல்லை என்றும்
மறுபிறவி இல்லை என்றும் பிதற்றுவதும்
தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது.
இறை நம்பிக்கை உள்ளவர்களும் தவறான வழிமுறைகளை பின்பற்றி
அமைதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
இதற்க்கெல்லாம் ஒரே பதில் அகந்தையை விட்டுவிட்டு
இறைவனை முழுமையாக சரணடைவதுதான்
ஆன்மீகம் என்றால் பிரசினைகளை எதிர்கொள்ள பயந்து ,குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி காவி வேட்டி கட்டிக்கொண்டு தாடி வளர்த்துகொண்டு சோம்பேறியாக கோயில் கோயிலாக சுற்றுவதுதான் ஆன்மிகம் என்று நினைக்கும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டு வருகிறது
உண்மையான ஆன்மீகம் என்றால் அவரவர் தன பொறுப்பை உணர்ந்து,தன கடமைகளை பலன் எதிர்பாராமல் செய்வதுடன் துன்புற்றோர்க்கு உதவுவதும் அனைத்து உயிர்களிடம் அன்பு பாராட்டுவதும், பிறர் முன்னேற்றம் கண்டு பொறாமை கொள்ளாமல் இருப்பதும்,இறைவனை எந்நிலையிலும் மறவாமல் இருப்பதும்தான்

No comments:

Post a Comment