Sunday, November 13, 2011

விலங்குகள் போல் வாழ்ந்து

உயிர் இந்த உலகோடு தொடர்பு கொள்ள தேவை மனம்
மனம் புலன்கள் வழியாக வெளியுலகை தொடர்பு கொள்ளும்
புலன்களுக்கு அக கருவிகள்ஐந்தும் புற கருவிகள் ஐந்தும் உள்ளன
மனம் அனைத்தையும் பதிவு செய்து வைத்துகொள்ளுகிறது
தேவைப்படும்போது அந்த தகவல்களை பயன்படுத்திகொள்ளுகிறது
புத்தி தகவல்களை அலசி ஆராய்ந்து மனதின் செயல்பாடுகளை
கட்டுபடுத்தி நெறிப்படுத்துகிறது
மனதின் சக்தி அதில் மேலோங்கிய குணங்களின் அடிப்படையில்
இருக்கும்
புத்தியை விட மனம் அதிக சக்தி வாய்ந்தது
இருந்தும் முயற்சி செய்தால் புத்தியின் துணை கொண்டு அதை நெறிப்படுத்தலாம்
உலகில் உள்ள அனைத்தும் மற்றும் தெய்வங்களும் இந்த மூன்று
குணங்களுக்கு கட்டுப்பட்டவை
அவை சத்வம் ரஜஸ் தமஸ்
இவை மூன்றில் எந்த குணம் மேலோங்கியிருக்கிறதோ
செயல்பாட்டின் வேகம் அதை பொருத்து அமையும்
சத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது அமைதி,பொறுமை,தெளிவு
போன்ற குணங்கள் மேலோங்கியிருக்கும்
ரஜஸ் இருக்கும்போது வேகம்,அவசரம் கோபம் பொறுமையின்மை,சிந்திக்கும் திறன் பாதிப்பு போன்ற
குணங்கள் வெளிப்படும்
தமஸ் குணம் மேலோங்கியிருக்கும்போது மந்த தன்மை,பொறுமையின்மை,சுயமாக சிந்திக்கும் திறனின்மை,முரட்டுத்தனம் பயம்,போன்ற குணங்கள் மேலோங்கியிருக்கும்
இந்த குணங்கள் நாம் உண்ணும் உணவு,மனதிற்கு நாம் அளிக்கும் தகவல்களை பொருத்து மாறிகொண்டிருக்கும் அதன் செயல்பாடுகள் அவ்விதமே அமையும்
இவை மூன்றையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவன் வெற்றிகளை குவிக்கிறான்
ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுக்கு மட்டும் ஆட்படுபவன் பாவ செயல்களில் சிக்குண்டு துன்பபடுகிறான்.
சத்வ குணம் மேலோங்கும்போதுதான் ஞானத்தை அடையும் வழியை தேடி மனம் செல்கிறது
எனவே அதில் நின்று அரிதாக கிடைத்த பிறவியை நல்ல வழியில் பயன்படுத்தி மீண்டும் பிறவா நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்
விலங்குகள் போல் வாழ்ந்து கிடைத்த வாழ்க்கையை வீணடிக்ககூடாது
உலக மாயையில் மூழ்காமல் இறைவனை நினைத்துகொண்டு நம் செயல்பட்டு வந்தால் ஞானம் இயல்பாக சித்திக்கும்

No comments:

Post a Comment