Friday, November 11, 2011

பிரம்மம்தான் உண்மை

பிரம்மம்தான் உண்மை
இந்த உலகம் மாயை என்றார் ஆதி சங்கரர்
அது எப்படி?
நாம் காணும் காட்சிகள் அனைத்தும் நம் மனதில் உள்ளன
வெளியில் ஒன்றும் கிடையாது
மனம் உறக்கத்தில் ஆழும்போது எந்த உலகமோ,எண்ணங்களோ இல்லை
உறக்கத்திலிருந்து விழித்ததும் அனைத்தும் தோன்றுகின்றன
மனம் உறக்கத்தில் இருக்கும்போது கனவுகள் காண்கிறது அதில் பல காட்சிகள் வருகின்றன
ஆனால் விழித்ததும் அந்த காட்சிகள் வருவதில்லை
ஆழ்ந்த உறக்கத்தில் எதுவுமே இல்லை
ஆனால் இந்த மூன்று நிலைகளையும் ஒன்று கண்காணித்து கொண்டிருக்கிறது
அது தான் ஆத்மா
அதுதான் பிரம்மம்
அதுவே உண்மை
அதை அறிவதற்காகவே இந்த பிறவி அளிக்கபட்டிருக்கிறது
அதை அறிந்துகொண்டால் இரவில்லை,பகலில்லை
இன்பமில்லை துன்பமில்லை
பிறப்பில்லை,இறப்பில்லை
தடையற்ற ஆனந்தம்தான் உண்டு.
இதைதான் பகவான் ரமணர் நமக்கு கண்டு அளித்துள்ளார் நாமும் அவர்காட்டிய வழியில் முயற்சி செய்தால் அந்த நிலையை அடையலாம்.

No comments:

Post a Comment